சூரத்: பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து ஒவ்வொரு துறையிலும் தனது பலத்தை அதிகரிப்பதில் இந்தியா தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. வாகா எல்லை மூடல், பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம், சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து என அடுத்தடுத்து இந்தியா பதிலடி கொடுத்தது. இதன் கீழ், இன்று கடற்படை ஐஎன்எஸ் சூரத்திலிருந்து உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அழிவு ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்தது. இந்திய கடற்பரப்பில் ஏவுகணை சோதனையை இந்தியா மேற்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனிடையே, கராச்சி கடற்பகுதியில் பாகிஸ்தான் ஏவுகணை சோதனை […]
மதுபானி : ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காமில் பயங்கரவாதிகள் அங்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகளை டார்கெட் செய்து அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். மேலும் 20 பேர் பலத்த காயமடைந்தனர். இதனையடுத்து, மத்திய ரிசர்வ் காவல் படை (CRPF), ஜம்மு – காஷ்மீர் காவல்துறை, மற்றும் தேசிய புலனாய்வு முகமை (NIA) இணைந்து பைசரன் பகுதியைச் சுற்றி தேடுதல் […]
பஹல்காம் : ஜம்மு காஷ்மீர், அனந்த்நாக் மாவட்டம், பஹல்காமில் ஏப்ரல் 22 அன்று, மதியம் 02:50 மணியளவில், 4 முதல் 6 பயங்கரவாதிகள் அங்கு சுற்றுலாப் பயணிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். மேலும் 20 பேர் பலத்த காயமடைந்தனர். ராணுவ வீரர்கள் போல் வேடமிட்ட பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகளைக் கொன்றனர். இறந்தவர்களில் பல வெளிநாட்டினரும் அடங்குவர். இந்தத் தாக்குதலில் பயங்கரவாதிகள் இந்துக்களை குறிவைத்துத் தாக்குதல் நடத்தியதும் […]
பஹல்காம் : ஏப்ரல் 22 அன்று, ஜம்மு – காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காமின் பைசரன் புல்வெளியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர், 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்தத் தாக்குதலை தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) என்ற அமைப்பு நடத்தியது. முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது. எனவே, மத்திய ரிசர்வ் காவல் படை (CRPF), ஜம்மு – காஷ்மீர் காவல்துறை, மற்றும் தேசிய புலனாய்வு முகமை (NIA) இணைந்து பைசரன் பகுதியைச் சுற்றி தேடுதல் […]
உதம்பூர் : ஜம்மு -காஷ்மீர் மாநிலம் உதம்பூர் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற தேடுதல் வேட்டையைத் தொடர்ந்து, பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த மோதலில், ஒரு ராணுவ வீரர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில், இந்திய ராணுவமும் ஜம்மு-காஷ்மீர் காவல்துறையும் இணைந்து டுடு-பசந்த்கர் பகுதியில் கூட்டுத் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டன. பதுங்கிருந்த இடத்தை அடைந்ததும் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் ஒரு ஜவான் படுகாயமடைந்தார். […]
பஹல்காம் : ஏப்ரல் 22 அன்று ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் புல்வெளியில் நடந்த தீவிரவாதத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட சம்பவம் இன்னும் தீராத சோகமான சம்பவமாக இருந்து வருகிறது. இந்த தாக்குதல் சம்பவம் குறித்த விசாரணையை தேசிய புலனாய்வு முகமை (NIA) முதன்மையாக நடத்தி வருகிறது. இந்நிலையில், தற்போது அமெரிக்க அரசு ஜம்மு – காஷ்மீர் பகுதிகளுக்கு பயணிக்க வேண்டாம் என மீண்டும் அறிவுறுத்தி இருக்கிறது. டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்தால் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு இருக்கும் […]
சென்னை : ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது, கடந்த செவ்வாய்க்கிழமை தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் மூன்று தமிழக சுற்றுலாப் பயணிகள் காயமடைந்தனர். இதனைத் தொடர்ந்து, தமிழக அரசு மற்றும் மத்திய அரசு இணைந்து விரைவான மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு, பாதிக்கப்பட்ட பயணிகளை பாதுகாப்பாக சென்னைக்கு அழைத்து வர திட்டமிட்டனர். அதன்படி, தமிழக அரசின் உதவியோடு, ஜம்மு காஷ்மீரில் இருந்து விமானம் மூலம், 68 சுற்றுலா பயணிகள் இன்று சென்னை வந்தடைந்தனர். சுற்றுலாப் […]
காஷ்மீர் மாநிலம் பெஹல்காமில் ஏப்ரல் 22ம் தேதி சுற்றுலா பயணிகள் மீதான தீவிரவாத தாக்குதலில் 26 கொல்லப்பட்டு, பலர் படுகாயம் அடைந்துள்ளனர். இதில், தமிழகத்தைச் சேர்ந்த மூவர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தாக்குதலை அடுத்து காஷ்மீரில் உள்ள சுற்றுலா பயணிகள் தங்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டு வருகின்றனர். இந்த பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, இண்டிகோ, ஏர் இந்தியா மற்றும் ஸ்பைஸ்ஜெட் ஆகிய விமான நிறுவனங்கள் நேற்று (புதன்கிழமை) ஸ்ரீநகரில் இருந்து 7 கூடுதல் விமானங்களை […]
டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காம் பகுதியில், பைசரன் புல்வெளியில் (Baisaran Meadow) பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட நிலையில், இந்த சம்பவம் உலகம் முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாக்குதலில் ஈடுபட்ட ஐந்து பயங்கரவாதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், சம்பவத்தில் ஈடுபட்ட அவர்களை தேடிப்பிடிக்கும் நோக்கில் தேசிய புலனாய்வு முகமை (NIA) தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது. இந்த சுழலில், இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளரும், […]
சென்னை : பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக இன்று (ஏப்ரல் 24, 2025) டெல்லியில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் அனைத்துக்கட்சிக் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இந்தத் தாக்குதல் குறித்து மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் மற்றும் நாட்டின் பாதுகாப்பு நிலைமை குறித்து விவாதிக்கப்படவுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள தனது இல்லத்தில் ஏப்ரல் 23, 2025 அன்று அதிமுக […]
பஹல்காம் : ஏப்ரல் 22 அன்று ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் புல்வெளியில் நடந்த தீவிரவாதத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட சம்பவம் இன்னும் தீராத சோகமான சம்பவமாக இருந்து வருகிறது. இந்த தாக்குதல் சம்பவம் குறித்த விசாரணையை தேசிய புலனாய்வு முகமை (NIA) முதன்மையாக நடத்தி வருகிறது. ஏற்கனவே, இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்களாக சந்தேகிக்கப்படும் நபர்களின் வரைபடமும் வெளியிடப்பட்டியிருந்தது. அதனைத்தொடர்ந்து தற்போது இந்த தாக்குதலுக்கு பின்னால் 5 தீவிரவாதிகள், 3 பேர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என […]
பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் பிரபல சுற்றுலாத் தலமான பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த திடீர் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்ததில் இரண்டு வெளிநாட்டவர்களும் அடங்குவர். இந்த தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து அடுத்ததாக மத்திய அரசு அதிரடியான நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது. உதாரணமாக, அட்டாரி-வாகா எல்லை மூடல், பாகிஸ்தானியர்கள் வெளியேற உத்தரவு, பாகிஸ்தானியருக்கு இந்திய விசா வழங்குவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது என அதிரடியான நடவடிக்கைகளை […]
பஹல்காம் : தீவிரவாதத் தாக்குதலையடுத்து, ஏப்ரல் 23 அன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாதுகாப்பு குறித்து அமைச்சரவைக் குழு கூட்டம் அவருடைய இல்லத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டார்கள். இந்த கூட்டத்தில் மக்களின் பாதுகாப்புக்காக பாகிஸ்தானுக்கு எதிராக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அது பற்றி இந்த பதிவில் பார்ப்போம். […]
ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்தில் பஹல்காம் பகுதியில் நடந்த தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலுக்கு லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் உள்ளூர் ஆதரவு அமைப்பான TRF பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த தாக்குதலில் காயமடைந்தவர்கள் அனந்த்நாக் மாவட்ட மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களை தற்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறினார். சிகிச்சை பெற்று […]
டெல்லி : நேற்று ( ஏப்ரல் 22) காஷ்மீர் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு லஷ்கர் இ தொய்பா வின் ஆதரவு அமைப்பான TRF பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. 7 சிறப்பு விமானங்கள் : இந்த தாக்குதலை அடுத்து காஷ்மீரில் உள்ள சுற்றுலா பயணிகள் தங்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டு வருகின்றனர். சுற்றுலா பயணிகளை விரைவாக சொந்த ஊர் அனுப்பும் பொருட்டு 7 சிறப்பு விமானங்களை […]
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில், பஹல்காம் பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அரசு வெளியிட்ட தகவலின்படி, இந்த தாக்குதலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இருவர் உட்பட 17 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தாக்குதல் சம்பவத்திற்கு உலக அரசியல் தலைவர்கள் வரை கண்டனங்கள் தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக […]
பஹல்காம் : நேற்று ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல் சம்பவத்தில் பரிதாபமாக 26க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தில் தமிழகத்தைச் சேர்ந்த மூவர் காயமடைந்தனர், ஆனால் மதுரையைச் சேர்ந்த 68 தமிழர்கள், தாக்குதல் நடந்த பகுதிக்குச் செல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். மதுரையைச் சேர்ந்த அந்த 68 பேர், சுற்றுலாவுக்காக காஷ்மீர் சென்றிருந்தனர். பஹல்காம் செல்ல திட்டமிட்டிருந்த இவர்கள், அன்றைய தினமன்று அதே […]
பஹல்காம் : நேற்று ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல் சம்பவத்தில் பரிதாபமாக 26க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்டதாக அரசு வெளியிட்டுள்ள தகவலின் படி, தமிழ்நாட்டைச் சேர்ந்த இருவர் உள்பட மொத்தமாக 17 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இந்தத் தாக்குதலில் கர்நாடகாவைச் சேர்ந்த மஞ்சுநாத் என்பவர் கொடூரமாகக் கொல்லப்பட்டார். இந்தச் சம்பவம் அவரது குடும்பத்தினரையும், […]
பஹல்காம் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் நாட்டையே உலுக்கியுள்ளது. பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் (LeT) பிரதிநிதியான ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட், இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது. காலித் என்ற புனைப்பெயரால் அழைக்கப்படும் சைஃபுல்லா கசூரி, லஷ்கர் இ தொய்பாவின் மூத்த தளபதி, இந்தப் படுகொலைக்கு மூளையாக செயல்பட்டதாகக் கூறப்படுகிறது. தற்பொழுது, 26 பேர் கொல்லப்பட்ட தாக்குதலுக்குப் பின்னணியில் உள்ள சந்தேகிக்கப்படும் பயங்கரவாதிகளின் மூன்று வரைபடங்கள் வெளியாகியுள்ளது. தாக்குதல் நடந்த சம்பவத்தின் போது, […]
பஹல்காம் : ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளை பிடிக்க ராணுவத்தினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். ட்ரோன்கள், மோப்ப நாய்கள் உதவியுடன் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. ஹெலிகாப்டர்கள் மூலம் மலைப்பகுதிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் நேற்றைய தினம் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். மேலும், தமிழ்நாட்டைச் சேர்ந்த இருவர் உள்பட மொத்தமாக 17 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஜம்மு காஷ்மீர் அரசு தெரிவித்துள்ளனர். […]