1,76,000 கோடி ருபாய் உபரி நிதியை மத்திய அரசுக்கு அளிக்க உள்ள ரிசர்வ் வங்கி!

நம் நாட்டு நிதி நிலைமையை சரிகட்டவும்,  பணவீக்கத்தை கட்டுக்குள் கொண்டுவரவும் ரிசர்வ் வங்கியிடம் இருந்து உபரி நீதியை வருடந்தோறும் ஆகஸ்ட் மாதம் மத்திய அரசானது

நம் நாட்டு நிதி நிலைமையை சரிகட்டவும்,  பணவீக்கத்தை கட்டுக்குள் கொண்டுவரவும் ரிசர்வ் வங்கியிடம் இருந்து உபரி நீதியை வருடந்தோறும் ஆகஸ்ட் மாதம் மத்திய அரசானது பெறுவது வழக்கம்.

இந்த உபரி நிதி மற்ற நாடுகளில் 14% வைத்திருக்கப்படும். நம் நாட்டின் உபரி நிதி அளவானது 28 சதவீதமாக உள்ளது. இந்த உபரி நிதியை மத்திய அரசு கோரி இருந்ததால் தான் முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் சுர்ஜித் படேல் ராஜினாமா செய்ததாக கூறப்படுகிறது. அதன்பின்னர் நம் நாட்டில் எவ்வளவ உபரி நிதியை வைத்துக் கொள்ளலாம் என வரையறுக்க மத்திய அரசானது, இதனை கலந்தாலோசிக்க முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் பீமல் ஜாலான் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவானது, கடந்த வருடம் டிசம்பர் முதல் ஆய்வு மேற்கொண்டது.

unknown node

இந்த ஆய்வின் முடிவுகளை பீமல் ஜாலான் தலைமையிலான குழு, கடந்த 14-ம் தேதி ரிசர்வ் வங்கியிடம்  ஒப்படைத்தது. இதனை நேற்று மும்பையில் ரிசர்வ் வங்கியின் முக்கிய நிர்வாகிகளுடன் ரிசர்வ் வங்கியின் இயக்குனர்கள் கலந்தாலோசித்து உபரி நிதியை மத்திய அரசுக்கு கொடுக்க ஒப்புதல் வழங்கினர்.

இதன்மூலம் 2018 – 2019 ஆம் ஆண்டில் கிடைக்கப்பெற்ற ஒரு லட்சத்து 23 ஆயிரம் கோடி ரூபாயும், மாற்றியமைக்கப்பட்ட பொருளாதார முதலீட்டு வழிகாட்டுதலின்படி கண்டறியப்பட்ட உபரி நிதி 53 ஆயிரம் கோடி ரூபாயும் சேர்த்து ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் நிதி மத்திய அரசுக்கு வழங்கப்பட உள்ளது.

இந்த ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் பல தவணைகளாக ரிசர்வ் வங்கியிடமிருந்து மத்திய அரசு பெற உள்ளது. இதன் மூலம் உள்நாட்டு உற்பத்தி பற்றாக்குறை 3.3 சதவீதமாக தக்கவைக்கப்படும என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி அளித்தது குறிப்பிடத்தக்கது.