ஒன்றரை ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்க தயார் – நாளை 11-ஆம் கட்ட பேச்சுவார்த்தை.!

"We are ready to suspend agriculture laws for six months to a year," Agriculture Minister Narendra Singh Tomar said.

வேளாண் சட்டங்களை 6 மாதம் முதல் ஒரு வருடம் வரை நிறுத்தி வைக்க தயாராக இருக்கிறோம் என்று வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.

டெல்லி எல்லையில் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக, மத்திய அரசு புதிதாக கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாய அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. பல கட்டங்களாக நடத்திய பேச்சுவார்த்தையும் தொடர்ந்து தோல்வியில் தான் முடிந்தது. இதனிடையே, 3 வேளாண் சட்டங்களுக்கு இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

மேலும், விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த 4 பேர் கொண்ட குழு அமைத்து, வேளாண் சட்டங்கள் தொடர்பாக உள்ள நிறை, குறைகளை குழுவிடம் தெரிவிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதையடுத்து, விவசாய சங்க பிரதிநிதிகளுடன், மத்திய அரசின் 10-ம் கட்ட பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றது.

இதில் வேளாண் சட்டங்களை ஒன்றரை ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்கலாம் என மத்திய அரசு தெரிவித்தது. இதையடுத்து, வேளாண் சட்டங்களை 6 மாதம் முதல் ஒரு வருடம் வரை நிறுத்தி வைக்க தயாராக இருக்கிறோம் என்றும் அதற்காக தனியாக குழு அமைத்து அவர்களுடன் கலந்தாலோசித்து தீர்வு காணலாம் எனவும் மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நாளை விவசாயிகளுடன் 11-ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதில் நல்ல முடிவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், திட்டமிட்டபடி குடியரசு தினத்தில் வேளாண் சட்டங்களை எதிர்த்து டிராக்டர் பேரணி நடைபெறும் என்று விவசாயிகள் கூறினர் என்பது குறிப்பிடத்தக்கது.