டெல்லியில் விவசாயிகள் டிராக்டர் பேரணியில் வன்முறை ஏற்பட்டுள்ளது தொடர்ந்து அமித்ஷா அவசர ஆலோசனை கூட்டத்தை கூட்டியுள்ளார். டெல்லியில் விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் ஏற்பட்டதை அடுத்து நள்ளிரவு முதல் 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்திருந்தது. சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் நோக்கில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்க இன்னும் 2 நாட்களே உள்ளே நிலையில், விவசாயிகளின் பேரணியில் ஏற்பட்ட வன்முறையால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கை […]
விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் வன்முறை ஏற்பட்டதை தொடர்ந்து தலைநகர் டெல்லி முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் ஒருபக்கம் குடியரசு தின விழா நடக்கும் மறுபக்கம் மத்திய அரசு புதிதாக கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் இன்று டிராக்டர் பேரணியை முன்னெடுத்து வருகின்றனர். சிங்கு, டிக்ரி எல்லை வழியாக போலீசாரின் தடுப்புகளை உடைத்துக் கொண்டு டெல்லிக்கு நுழைய முயன்றனர். அப்போது அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு முன்பே பேரணியை தொடங்கியதால் விவசாயிகளை கலைக்க காவல்துறை கண்ணீர் புகை குண்டு வீசினர். […]
புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக பிப்ரவரி 1-ஆம் தேதி நாடாளுமன்றம் நோக்கி பேரணி செல்லப்போவதாக விவசாய சங்கத்தினர் அறிவித்துள்ளனர். புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக பிப்ரவரி 1-ஆம் தேதி நாடாளுமன்றம் நோக்கி பேரணி செல்லப்போவதாக விவசாய சங்கத்தினர் அறிவித்துள்ளனர். டிராக்டர் பேரணியுடன் போராட்டம் முடிந்துவிடாது என்றும் குறிப்பிட்டுள்ளனர். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் ஜன 29-ஆம் தேதி தொடங்க இருக்கும் நிலையில், விவசாய சங்கத்தினர் பேரணி அறிவித்துள்ளனர். இதனிடையே, நாளை குடியரசு தினமான நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ள […]
வேளாண் சட்டங்களை 6 மாதம் முதல் ஒரு வருடம் வரை நிறுத்தி வைக்க தயாராக இருக்கிறோம் என்று வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார். டெல்லி எல்லையில் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக, மத்திய அரசு புதிதாக கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாய அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. பல கட்டங்களாக நடத்திய பேச்சுவார்த்தையும் தொடர்ந்து தோல்வியில் தான் முடிந்தது. இதனிடையே, 3 வேளாண் சட்டங்களுக்கு இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. […]
விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த அடுத்த 10 நாட்களில் முதல் கூட்டத்தை கூட்ட வேண்டும் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு. விளைபொருட்களான குறைந்தபட்ச ஆதார விலை அமலில் இருக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. விவசாய நிலங்களை கையகப்படுத்துதல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளக்கூடாது எனவும் குறிப்பிட்டுள்ளது. உச்சநீதிமன்றம் அமைத்த குழுவிற்கான மொத்த செலவும் மத்திய அரசே ஏற்க வேண்டும். விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த அடுத்த 10 நாட்களில் முதல் கூட்டத்தை கூட்ட வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இரண்டு மாதத்திற்குள் இறுதி […]
மத்திய அரசு புதிதாக கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களுக்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்ற உத்தரவு பிறப்பித்துள்ளது. வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாய சங்கங்கள் உள்ளிட்டோர் தரப்பில் வழக்கு தொடுத்திருந்த நிலையில், இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து இரண்டாவது நாளாக நடைபெற்று வருகிறது. இன்றைய விசாரணையில் உச்சநீதிமன்றம் நீதிபதிகள் மத்திய அரசு புதிதாக கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களுக்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்ற உத்தரவு பிறப்பித்துள்ளது. மறு உத்தரவு வரும் வரை தடை தொடரும் என்றும் […]
மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களுக்கு எதிரான வழக்குகளில் நாளை உத்தரவு பிறப்பிப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான வழக்கில் நாளை உத்தரவு பிறப்பிக்கிறது உச்சநீதிமன்றம். வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாய சங்கங்கள் உள்ளிட்டோர் தரப்பில் வழக்கு தொடுத்திருந்த நிலையில், நாளை தீர்ப்பு வழங்கப்படுகிறது. இதனிடையே, இன்று விசாணைக்கு வந்த இந்த வழக்கில், வேளாண் சட்டங்களை அமல்படுத்துவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க மத்திய அரசு தயாரா? என்று க்ளெவி எழுப்பியதை தொடர்ந்து, வேளாண் சட்டங்களை […]
உச்ச நீதிமன்ற தீர்ப்பை பொறுத்தே மத்திய அரசுடன் 9வது கட்ட பேச்சுவார்த்தை என விவசாயிகள் பிரதிநிதிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லி எல்லைகளில் 48-வது நாளாக தொடர்ந்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். வேளாண் சட்டங்கள் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் இன்று வழக்கு விசாரணைக்கு வருகிறது. வரும் 15-ஆம் தேதி நாடு தழுவிய போராட்டதிக்ரு விவசாயிகள் அழைப்பு விடுத்துள்ளனர். உச்சநீதிமன்ற உத்தரவுக்கு பிறகு போராட்டத்தை தீவிரப்படுத்த விவசாயிகள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், […]
டெல்லியில் விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய 7-ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துள்ளது. வேளாண் சட்டத்தை திரும்பப்பெற வேண்டும், குறைந்த பட்ச ஆதார விலையை சட்ட ரீதியாக உறுதிபடுத்த வேண்டும் என்பதையும் வலியுறுத்தி, 40க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் டெல்லியில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. அதன்படி, மத்திய அரசு விவசாயிகளுடன் இன்று 7-ஆம் கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. இந்த பேச்சுவார்த்தையில் மத்திய அமைச்சர்கள் […]
கடன் தள்ளுபடி, இலவச மின்சாரம் என விவசாயிகளைக் காப்பதில் முதல் மாநிலமான தமிழ்நாடு இனியும் அமைதி காக்கலாமா? என முக ஸ்டாலின் அறிக்கை. இதுகுறித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பஞ்சாப்பை அடுத்து கேரள சட்டப்பேரவையிலும் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம் செய்யப்பட்டது. கடும் குளிரை கூட பொருட்படுத்தாமல் 37 நாட்களாக தொடர்ந்து இரவும், பகலுமாக விவசாயிகள் டெல்லியில் திடமான சிந்தையுடன் போராட்டம் நடத்தி […]
பல்வேறு மாநிலங்களில் உள்ள விவசாயிகள்சமீபத்தில் மத்திய அரசு கொண்டுவந்த புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடி வருகின்ற, இந்த நிலையில் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்ற வருகின்ற 31-ம் தேதி கேரள சட்டப்பேரவை கூட்டம் நடத்த ஆளுநர் அனுமதி கொடுத்துள்ளார். ஏற்கனவே கடந்த 23-ஆம் தேதி நடத்த இருந்த வேளாண் சிறப்பு கூட்டத்திற்கு ஆளுநர் அனுமதி மறுத்த நிலையில், தற்போது கேரளா முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான அமைச்சரவை பரிந்துரையை ஏற்று ஆளுநர் ஆரிஃப் முகமது […]
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி டெல்லியில் போராட்டம் நடத்திவரும் விவசாயிகள் ரத்தத்தில் பிரதமர் மோடிக்கு கடிதம். வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லியில் 20 நாட்களுக்கு மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த வேளாண் சட்டங்களால் கார்பரேட் நிறுவனங்கள்தான் பலனடைவர், தங்களுக்கு அதனால் பாதிப்புதான் என்று விவசாயிகள் தெரிவித்து வருகின்றனர். இதுவரை 5 கட்டம் மத்திய அரசுடன், விவசாயிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த பலனும் கிட்டவில்லை. ஆனால், விவசாயிகளின் போராட்டத்தை ஒரு […]
சொந்த நாட்டு மக்களிடம் குடியுரிமை கேட்பவர்கள்தான் ஆன்ட்டி இந்தியன் என்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான் தெரிவித்துள்ளார். மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி, டெல்லியில் 20 நாட்களுக்கு மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகள் போராட்டத்துக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ஆனால் மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவதாக தெரியவில்லை. இதனால் விவசாயிகள் வேளாண் சட்டங்களை திரும்பப்பெற்றால் மட்டுமே போராட்டம் கைவிடப்படும் என்று தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இன்று […]
விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுங்கள் என்று பிரிட்டன் பிரதமருக்கு கடிதம் எழுதிய 8 வயது சிறுமி. மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய 3 வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லியில் பல்வேறு எல்லைகளில் தொடர்ந்து 20 நாட்களாக கடும் குளிரை கூட பொருட்படுத்தாமல் விவசாயிகள் போராடி வருகிறன்றனர். இதற்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், விளையாட்டு வீரராகள் என பலரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். மத்திய அரசுடன் 5 கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த பலனும் கிட்டவில்லை. […]
வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து பஞ்சாப் மாநில சிறைத்துறை டிஐஜி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மத்திய அரசு கொண்டுவந்த புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லியில் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் கடந்த 18 நாட்களாகப் போாரட்டம் நடத்தி வருகின்றனர்.இதில் பஞ்சாப், ஹரியானா விவசாயிகள் மட்டுமின்றி, பல்வேறு மாநில விவசாயிகளும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். மத்திய அரசுடன் 5 கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தியும், எந்த பலனும் கிட்டவில்லை. இதனிடையே, நாடு முழுவதும் பாரத் […]
டெல்லியில் வேளாண் சட்டங்களை திரும்பபெற கூறி விவசாயிகள் கடந்த 13 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசுடன் நடத்திய பல கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இன்று 6-வது கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இந்நிலையில், இன்று காலை மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக்கூட்டத்தில் விவசாயிகள் போராட்டம் மற்றும் வேளாண் சட்டங்கள் குறித்து கலந்துரையாடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்பதே தங்களின் ஒரே கோரிக்கை என விவசாயிகள் […]
வேளாண் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாய சங்கங்களின் அழைப்பை ஏற்று இன்று நாடு முழுவதும் முழு அடைப்பு நடைபெறுகிறது. மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் டெல்லியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தில் ஹரியானா ,பஞ்சாப் உள்ளிட்ட பல மாநிலங்களை சார்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களது போராட்டம் கடந்த இன்றுடன் சேர்த்து 13 நாட்களாக நடந்து வருகிறது. இதுவரை விவசாயிகளின் போராட்டத்திற்கு ஒரு முடிவு இல்லாத நிலையில், […]
மூன்று புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் தொடர்ந்து டெல்லியில் ஹரியானா, பஞ்சாப் மற்றும் உத்திரபிரதேச விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று ஐந்தாவது முறையாக மத்திய அரசுடன் விவசாயிகள் சங்க தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். ஐந்தாவது கட்ட பேச்சுவார்த்தை இன்று பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கியது, இதில் பல்வேறு விவசாய அமைப்புகளின் 40 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனை விஜியன் பவனில் அரசால் ஏற்பாடு செய்யப்பட்டது,மேலும் இடைவேளையின் போது உணவு […]
மத்திய அரசு கொண்டு வந்த மூன்று விவசாய சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ‘தில்லி சாலோ’ என்ற பெயரில் தில்லி நோக்கி பஞ்சாப் விவசாயிகள் குருக்ராமில் இருந்து டெல்லிக்கு செல்லும் சாலையில் பேரணியில் ஈடுபட்டனர். அப்போது, ஹரியானா எல்லையில் தடுப்புகளை அமைத்து காவல்துறை விவசாயிகளைத் தடுத்தனர். கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும், தண்ணீரைப் பீய்ச்சியடித்தும் காவல்துறையினர் கலைத்தனர். இந்நிலையில்,அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
வேளாண் சட்ட மசோதாவிற்கு எதிராக போராட்டம் நடத்தும் விவசாயிகளை பயங்கரவாதிகள் என விமர்சித்த கங்கனா ரணாவத் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்ய துமகுரு நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது. மத்திய அரசு, நாடாளுமன்றத்தில் வேளாண் சட்டத்திருத்த மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்தும் மசோதா உள்ளிட்ட மூன்று மசோதாகளை சமீபத்தில் நிறைவேற்றியது. இந்த மசோதாக்கள், விவசாயிகளுக்கு எதிராக இருப்பதாகவும், இதனை திரும்பபெறக்கோரி எதிர்க்கட்சியினர் மற்றும் விவசாயிகள் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி […]