தனது சொந்த தொகுதியில் பிரதமர் மோடி காணொளி மூலம் உரை! கொரோனாவை விரட்டுவோம்!

உலகை அச்சுறுத்தும் கொரோனாவை கட்டுப்படுத்த இந்திய நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை நேற்று மாலை பிரதமர் மோடி

உலகை அச்சுறுத்தும் கொரோனாவை கட்டுப்படுத்த இந்திய நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை நேற்று மாலை பிரதமர் மோடி அறிவித்தார். இந்த உத்தரவு நேற்று நள்ளிரவு 12 மணி முதல் வருகிற ஏப்ரல் 14ஆம் தேதி வரை நீட்டிக்கும் எனவும் அறிவித்தார்.

இதனை தொடர்ந்து இன்று பிரதமர் மோடியின் சொந்த தொகுதியான உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள வாரணாசி மக்களிடையே காணொளி  மூலம் கலந்துரையாடினார்.

அப்போது, ‘ இந்த இக்கட்டான சூழ்நிலையில் பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும் முக்கியம் எனவும்,  இந்த 21 நாட்கள் வீட்டிலிருந்து கொண்டு  கொரோனா வைரஸை இந்தியாவில் இருந்து விரட்டுவோம். ‘ எனவும் குறிப்பிட்டார்.

மேலும், ‘ காபூலில் குருத்வாராவில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு வருத்தப்படுவதாகவும், இறந்த அனைவரின் குடும்பங்களுக்கு தனது இரங்கலை தெரிவித்து கொள்வதாகவும் பிரதமர் நரேந்திர மோடி வாரணாசியின் குடிமக்களுடன் காணொளி மூலம் உரையாற்றுகையில் தெரிவித்துள்ளார்.