நடைபயணத்தை ஒத்திவையுங்கள்! – ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் கடிதம்!
கொரோனா விதிகள் குறித்து என்னிடம் கேள்வி கேட்பது எனது கடமையைத் தடுப்பது போன்றது என அமைச்சர் மாண்டவியா கடிதம்.
இந்திய ஒற்றுமை பயணத்தில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்திக்கு, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மாண்டவிய கடிதம் எழுதியுள்ளார்.
அதில், ‘பாரத் ஜோடோ யாத்ரா’வின் போது கொரோனா நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். மாஸ்க் அணிந்து, சானிட்டரை பயன்படுத்துங்கள், இல்லையென்றால் தேச நலனை கருத்தில் கொண்டு நடைப் பயணத்தை ஒத்திவையுங்கள் என தெரிவித்துள்ளார். மேலும், கொரோனா விதிகள் குறித்து என்னிடம் கேள்வி கேட்பது எனது கடமையைத் தடுப்பது போன்றது எனவும் கடிதத்தில் கூறியுள்ளார்.