சமீப நாட்களாக நாட்டில் மாரடைப்பினால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது. அதிலும் இப்போது பெரியவர்களை விட 20 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் பெருமளவில் மாரடைப்பால் உயிரிழக்கின்றனர். ஒருபுறம் கொரோனாவுக்கு பிறகு நாட்டில் உள்ள இளைஞர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவது அதிகரித்துள்ளது என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக நாடாளுமன்ற மக்களவையில் ஜனதா தளம் கட்சியை சேர்ந்த எம்பி ராஜுவ் ரஞ்சன் சிங் கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் பாரதி பிரவீன் பவார், கொரோனாவுக்கு பிறகு மாரடைப்பு […]
கொரோனா பரவலுக்கு மத்தியில் 6 நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு பரிசோதனை கட்டாயம் என அறிவிப்பு. கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், சீனா, ஹாங்காங், தென்கொரியா, ஜப்பான், சிங்கப்பூர், தாய்லாந்து போன்ற நாடுகளில் இருந்து இந்தியா வரும் விமான பயணிகளுக்கு ஜனவரி 1-ஆம் தேதி முதல் “RT-PCR” பரிசோதனை கட்டாயம் செய்யப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. விமான பயணத்துக்கு முன் “RT-PCR” சோதனை அறிக்கையை “Air Suvidha” இணையதளத்தில் பயணிகள் பதிவேற்ற செய்ய […]
காங்கிரஸின் பாரத் ஜோடோ யாத்திரை நிறுத்தப்படாது என்று கட்சியின் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் அறிவிப்பு. இந்திய ஒற்றுமை பயணத்தில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்திக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மாண்டவிய கடிதம் எழுதிருந்தார். அதில், ‘பாரத் ஜோடோ யாத்ரா’வின் போது கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும், இல்லையென்றால், தேச நலனை கருத்தில் கொண்டு நடைப்பயணத்தை ஒத்திவையுங்கள் என தெரிவித்திருந்தார். இந்த நிலையில், கொரோனா தொடர்பான […]
கொரோனா விதிகள் குறித்து என்னிடம் கேள்வி கேட்பது எனது கடமையைத் தடுப்பது போன்றது என அமைச்சர் மாண்டவியா கடிதம். இந்திய ஒற்றுமை பயணத்தில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்திக்கு, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மாண்டவிய கடிதம் எழுதியுள்ளார். அதில், ‘பாரத் ஜோடோ யாத்ரா’வின் போது கொரோனா நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். மாஸ்க் அணிந்து, சானிட்டரை பயன்படுத்துங்கள், இல்லையென்றால் தேச நலனை கருத்தில் கொண்டு நடைப் பயணத்தை ஒத்திவையுங்கள் என […]
மூக்கு வழியே செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்துக்கு மத்திய அரசு அனுமதி. மூக்கு வழியே செலுத்தும் நாட்டின் முதல் கொரோனா தடுப்பு மருந்தை அவசரகால பயன்பாட்டுக்கு பயன்படுத்த இந்திய மருந்து தரக்கட்டுப்பாடு அமைப்பு (DCGI) அனுமதி அளித்துள்ளது. ஊசிக்கு பதிலாக மூக்கு வழியே செலுத்தும் வகையில் நவீன கொரோனா தடுப்பு மருந்தை பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ளது. பிபிவி 154 என்ற பெயர் கொண்ட தடுப்பு மருந்தை பயன்படுத்த இந்திய மருந்து தரக்கட்டுப்பாடு அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது. […]