வாக்கு எண்ணிக்கையில் வினோதம்.! இரண்டாம் இடத்தில் நோட்டா.!

மக்களவை தேர்தல்: 543 தொகுதிகளுக்குமான முடிவுகள் வெளியாகி வரும் சூழலில் மத்திய பிரதேச இந்தூர் தொகுதியில் இரண்டாம் இடத்தில் நோட்டா (யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை) முன்னிலையில் உள்ளது பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது.
இந்தூர் தொகுதியில், பாஜக வேட்பாளர் சங்கர் லால்வானி 10.4 லட்சம் வாக்குகள் பெற்று நோட்டாவை விட 8.5 லட்சம் வாக்குகள் முன்னிலையில் உள்ளார். நோட்டா 1.85 லட்சம் வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளது. மூன்றாம் இடத்தில் பகுஜன் சமாஜ்வாடி வேட்பாளர் 43 ஆயிரம் வாக்குகள் பெற்றுள்ளார்.
காங்கிரஸ் வேட்பாளர் அக்சய் காந்தி இந்த தேர்தலில் இருந்து வாபஸ் பெற்று இருந்தது குறிப்பிடதக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs RCB : அதிரடி காட்டி படிதர் அடித்த அரைசதம்.., சிஎஸ்கே அணிக்கு இதுதான் டார்கெட்.!
March 28, 2025
மீண்டும் மின்னல் வேக ஸ்டம்பிங் செய்த தோனி.! மிரண்டு போன ஆர்சிபி வீரர்கள்! நடையை கட்டிய சால்ட்..
March 28, 2025