மக்களவை தேர்தல்: 543 தொகுதிகளுக்குமான முடிவுகள் வெளியாகி வரும் சூழலில் மத்திய பிரதேச இந்தூர் தொகுதியில் இரண்டாம் இடத்தில் நோட்டா (யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை) முன்னிலையில் உள்ளது பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது. இந்தூர் தொகுதியில், பாஜக வேட்பாளர் சங்கர் லால்வானி 10.4 லட்சம் வாக்குகள் பெற்று நோட்டாவை விட 8.5 லட்சம் வாக்குகள் முன்னிலையில் உள்ளார். நோட்டா 1.85 லட்சம் வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளது. மூன்றாம் இடத்தில் பகுஜன் சமாஜ்வாடி வேட்பாளர் 43 ஆயிரம் வாக்குகள் […]
மத்திய அரசின் வருடாந்திர தூய்மைக் கணக்கெடுப்பில், இந்தூர் மற்றும் சூரத் ஆகியவை இந்தியாவின் முதல் தூய்மையான நகரங்களாக அறிவித்துள்ளது. கடந்த 2016 முதல், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம், நகர்ப்புற சுகாதாரம் மற்றும் தூய்மை பற்றிய மிகப்பெரிய உலகளாவிய கணக்கெடுப்பான ஸ்வச் சர்வேக்ஷனை நடத்தி வருகிறது. இதன் மூலம், தூய்மையான நகர்ப்புற சூழலை உருவாக்குவதற்கும் ஊக்குவிப்பதில் இந்த முயற்சி முக்கிய பங்கு வகிக்கிறது. இன்று (ஜனவரி 11) மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட வருடாந்திர ஸ்வச் சர்வேக்ஷன் […]
இந்தூரில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளுக்கு தியாகிகள், சுதந்திரப் போராட்ட வீரர்கள் பெயர் சூட்ட அரசு திட்டம். இந்தூர் அம்பேத்கர் நகரில் உள்ள 234 அரசுப் பள்ளிகளுக்கும் தியாகிகள் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்களின் பெயர்களை சூட்ட மத்தியப் பிரதேச அரசு முடிவு செய்துள்ளது. மாநில உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இதற்கான முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்திய சுதந்திரப் போராட்டத்தை குழந்தைகளுக்கு உணர்த்தும் வகையில் சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாழ்க்கைக் கதைகளும் பள்ளிகளில் […]
இந்தூரைச் சேர்ந்த ஒரு பெண் போக்குவரத்து சிக்னலில் நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தூரில் பரபரப்பான சாலைகளில் ஒன்றான ரசோமா சதுக்கத்தில் இந்த நடன வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. ஸ்ரேயா கல்ரா என்ற ஒரு பெண் மாடல், 30 வினாடி வீடியோவில் நடனமாடியுள்ளார். அங்கிருந்த சிக்னல் சிவப்பு நிறம் அடைந்தவுடன், அந்த பெண் திடீரென்று ஜீப்ரா கிராசிங்கில் ஆட ஆரம்பித்துள்ளார். அந்த பெண்ணுடன் இருந்த நபர் ஒருவர், அந்த பெண்ணின் நடனத்தை வீடியோவாக எடுத்துள்ளார். […]
மத்திய பிரதேசத்தில் பாலத்தின் மீது செல்ஃபி எடுக்க முயன்ற மருத்துவ மாணவி உயிரிழந்துள்ளார். மத்திய பிரதேசம் இந்தூர் பகுதியில் சிலிக்கான் நகரை சேர்ந்தவர் நேகா அர்ஸ். இவர் சாகர் மருத்துவக்கல்லூரியில் இறுதி ஆண்டு பயிலும் எம்.பி.பி.எஸ். மாணவி. இவர் இந்தூரில் உள்ள பாலத்தில் செல்ஃபி எடுக்க முயன்ற போது உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் இந்தூர் ராஜேந்திர நகர் காவல் நிலையத்தின் அருகில் நிகழ்ந்துள்ளது. இது குறித்து ராஜேந்திர நகர் காவல் நிலையம் தெரிவித்துள்ளதாவது: நேகா […]
26 வயதான மென்பொருள் பொறியாளர் ஒருவர் மத்திய பிரதேசத்தில் ஐந்து நாட்களில் இரண்டு பெண்களை மணந்து பின்னர் தப்பிச் சென்றதாக புகார். மத்திய பிரதேசம் கண்ட்வாவில் நேற்று முன்தினம் ஒரு பெண்ணின் குடும்பத்தினர் அளித்த மோசடி புகாரின் அடிப்படையில், இதுகுறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருவதாக காவல் நிலைய ஆய்வாளர் பி.எல் மாண்ட்லோய் தெரிவித்துள்ளார். இந்தூர், முசாகேடி பகுதியை சேர்ந்த குற்றம் சாட்டப்பட்ட நபர், டிசம்பர் 2-ஆம் தேதி காண்ட்வாவில் ஒரு பெண்ணையும், டிசம்பர் 7-ஆம் தேதி […]
இந்தியாவின் தூய்மையான நகரமாக நான்காவது ஆண்டாக மத்திய பிரதேசத்தில் உள்ள இந்தூர் நகரம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. வருடம் தோறும் இந்தியாவில் தூய்மையான நகரம் எது என தேர்வுகள் நடப்பது வழக்கம். இந்நிலையில், இந்த வருடம் நடைபெற்ற தூய்மையான நகர தேர்வில் இந்தியாவின் மிகவும் தூய்மையான நகரமாக மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள இந்தூர் நகரம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. கடந்த 4 ஆண்டுகளாக நாட்டின் தூய்மையான நகரமாக இந்தூர் நகரம் தான் தேர்வு செய்யப்பட்டு கொண்டுள்ளது. இரண்டாவது தூய்மையான […]
இந்தியாவின் மிகவும் தூய்மையான நகராக மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் தேர்வு – மத்திய அமைச்சர் அறிவிப்பு இந்தியாவின் மிகவும் தூய்மையான நகராக மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் தேர்வு செய்யப்பட்டுள்ளது என்று மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அறிவித்துள்ளார். இந்தூர் தொடர்ந்து 4-வது ஆண்டாக நாட்டின் தூய்மையான நகரமாக இந்தூர் தேர்வாகியுள்ளது என்றும் நகரமும் அதன் மக்களும் தூய்மைக்கு முன்மாதிரியான அர்ப்பணிப்பைக் காட்டியுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், அம்மாநில முதல்வருக்கு வாழ்த்துக்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார். […]
இன்று 2-வது போட்டி மத்தியபிரதேசத்தில் உள்ள இந்தூரில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச முடிவு செய்து உள்ளது. இலங்கை இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட வந்து உள்ளனர்.இந்த தொடரின் முதல் நேற்று முன்தினம் அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெற இருந்தது.மழை காரணமாக போட்டி பந்து வீசாமல் ரத்து என அறிவிக்கப்பட்டது. இதைதொடர்ந்து இன்று 2-வது போட்டி மத்தியபிரதேசம் மாநிலத்தில் இந்தூரில் உள்ள […]
மத்திய பிரதேச மாநில தலைநகர் இந்தூரில் உள்ள ஒரு வாக்கு சாவடி வாக்காளர்களை பெரிதும் கவர்ந்தது. அந்த வாக்கு சாவடி ஏ.சி அறையில் இருந்தது. இங்கு காத்திருக்கும் வாக்காளர்களுக்கு டீ , காபி, பாதம் பால், பிஸ்கட் என உபசரிப்பு பலமாக இருந்தது. இதனை கண்ட வாக்காளர்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்து சென்றனர். மேலும், இதே போல அனைத்து இடங்களிலும் வசதிகள் செய்து தரப்பட்டால் வாக்கு சதவீதம் நிச்சயம் உயரும் என வாக்காளர்கள் தெரிவித்து உள்ளனர். DINASUVADU