சென்னை : மத்திய அரசு வசூல் செய்யும் ஜிஎஸ்டி வரித்தொகையானது, மாதந்தோறும் மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும். அவ்வாறு இன்று டிசம்பர் மாதம் வரிப்பகிர்வு தொகையை தற்போது மத்திய அரசு வெளியிட்டுள்ளது. மொத்தம், ரூ.1,73,030 கோடி ரூபாயனது 2025 ஜனவரி மாதத்திற்கு மாநில வாரியாக பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் 2024இல் இந்த வரிப்பகிர்வு ரூ.89,086 கோடியாக மட்டுமே இருந்தது. இந்த முறை மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் நலன் சார்ந்த திட்டங்களுக்கு செலவிட இந்த முறை அதிக தொகை ஒதுக்கீடு […]
மத்திய பிரதேசம் : ஆர்எஸ்எஸ் (ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம்) எனும் இந்துத்துவா அமைப்பில் மத்திய அரசு ஊழியர்கள் உறுப்பினராக இணைந்து பணியாற்ற கூடாது என 1966ஆம் ஆண்டு முதல் தடை விதிக்கப்பட்டு இருந்தது. அந்த தடையை அண்மையில் மத்திய அரசு நீக்கியது. இதற்கு பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். இந்த ஆர்எஸ்எஸ் தடை விவகாரம் குறித்து முன்னதாக மத்திய பிரதேச உயர்நீதிமன்றத்தில் கடந்த 2023இல் ஓய்வுபெற்ற மத்திய அரசு ஊழியர் புருஷோத்தம் குப்தா என்பவர்,1966 ஆம் […]
டெல்லி: கன்வார் யாத்திரை நடைபெறும் பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள கடைகளில் உரிமையாளர் பெயரை வெளிப்படுத்த வேண்டும் என்ற மாநில அரசுகளின் உத்தரவுகளுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது இந்து கடவுள் சிவனுக்கு அபிஷேகம் செய்யவதற்கு கங்கையில் இருந்து புனித நீர் எடுக்கும் ஆன்மீக நிகழ்வு இன்று முதல் கன்வார் யாத்திரை எனப்படும் காவடி யாத்திரை எனும் பெயரில் தொடங்கியுள்ளது. ஆண்டுதோறும் இந்த ஆன்மீக நிகழ்வு கங்கை ஆறும் ஓடும் மாநிலங்களில் நடைபெறும். இதற்கு வடமாநிலங்களில் இருந்து பக்தர்கள் வருவார்கள். அண்மையில், […]
மத்திய பிரதேசம் : இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சமூக வலைத்தளங்களில் பிரபலமாகவேண்டும் என்பதற்காக ரீல்ஸ் செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர். ரீல்ஸ் செய்வதற்காக ஆபத்தை உணராமல் அவர்கள் செய்யும் விஷயங்கள் அவர்கள் உயிருக்கே ஆபத்தாக அமைந்து விடுகிறது. அப்படி தான் மத்திய பிரதேசம் முரைனா மாவட்டத்தில் சிறுவன் ஒருவன் ரீல்ஸ் செய்யும்போது உயிரிழந்த சம்பவம் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. முரைனா மாவட்டத்தை சேர்ந்த ஒன்பது வயது சிறுவன் தனது நண்பர்களுடன் சேர்ந்து நேற்று ரீல்ஸ் […]
இடைத்தேர்தல்: தமிழகத்தில் விக்கிரவாண்டி உட்பட நாடு முழுவதும் 7 மாநிலங்களில் 13 தொகுதிகளில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தமிழகத்தில் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் திமுக எம்எல்ஏ புகழேந்தி மறைவுக்கு பின்னர் இன்று அங்கு இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது. திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாமக வேட்பாளர் சி.அன்புமணி, நாம் தமிழர் வேட்பாளர் அபிநயா ஆகியோர் போட்டியிடுகின்றனர். விக்கிரவாண்டி இடைத்தேர்தல் போல 6 வடகிழக்கு மாநிலங்களில் 12 தொகுதிகளில் இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில், பெரும்பாலான இடங்களில் கட்சி […]
மத்திய பிரதேசம் : சாகரில், நள்ளிரவில், அதிவேகமாக வந்த பைக், நடுரோட்டில் அமர்ந்திருந்த மாடுகள் மீது மோதியதில், பைக் ஓட்டியவரும், கன்றும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும், ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வெளிவந்த தகவலின்படி, இந்த விபத்தில் இறந்தவர் சாகர் பகுதியைச் சேர்ந்த ஹிமான்ஷு மிஸ்ரா (24) என அடையாளம் காணப்பட்டுள்ளார். மாவட்டத்தில் உள்ள பிரதான் சௌரா குழுமத்தின் அலுவலகம் முன்பாக இந்த […]
மத்தியப் பிரதேசம் : மாநிலம் தார் மாவட்டத்தில் உள்ள தாண்டா பகுதியில் பெண் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்ட அதிர்ச்சியான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதிலும், கொடுமையான விஷயம் என்னவென்றால், பாதிக்கப்பட்டவருக்கு உதவ முயற்சி செய்வதற்கு பதிலாக தாக்குதலை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் வீடியோ எடுத்துக்கொண்டு இருந்தார்கள். அடையாளம் தெரியாத பெண் ஒருவரை முகத்தை முடி வைத்துவிட்டு ஒரு சிலர் கையை பிடித்து கொண்டு இருந்தனர். அப்போது ஒருவர் கையில் வைத்து இருந்த கட்டையை வைத்து […]
மக்களவை தேர்தல்: 543 தொகுதிகளுக்குமான முடிவுகள் வெளியாகி வரும் சூழலில் மத்திய பிரதேச இந்தூர் தொகுதியில் இரண்டாம் இடத்தில் நோட்டா (யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை) முன்னிலையில் உள்ளது பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது. இந்தூர் தொகுதியில், பாஜக வேட்பாளர் சங்கர் லால்வானி 10.4 லட்சம் வாக்குகள் பெற்று நோட்டாவை விட 8.5 லட்சம் வாக்குகள் முன்னிலையில் உள்ளார். நோட்டா 1.85 லட்சம் வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளது. மூன்றாம் இடத்தில் பகுஜன் சமாஜ்வாடி வேட்பாளர் 43 ஆயிரம் வாக்குகள் […]
மத்திய பிரதேசம்: சிந்த்வாரா மாவட்டத்தில் நேற்று இரவு ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேரை கொலை செய்துவிட்டு ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார் என PTI செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மத்திய பிரதேசத்தில் உள்ள சிந்த்வாரா மாவட்டத்தில் தலைநகரில் இருந்து சுமார் 100 கிமீ தூரத்தில் உள்ள போடல் கச்சார் எனும் கிராமத்தில், நேற்று (செவ்வாய்) இரவு ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் கோடாரியால் வெட்டி கொலை செய்யப்பட்டதாக மஹுல்ஜிரி காவல் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என PTI […]
மத்திய பிரதேசம்: தலித் பெண் மீதான பாலியல் வன்கொடுமை வழக்கில் இதுவரை 3 பேர் உயிரிழந்த நிலையில், பாதிக்கப்பட்ட பெண் ஆம்புலன்ஸ் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு மத்திய பிரதேசம் சாகர் பகுதியில் தலித் பெண்ணை விக்ரம் சிங் என்பவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். இந்த வழக்கில் விக்ரம் சிங் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை வாபஸ் பெற வேண்டும் என விக்ரம் சிங் கும்பல் , பாதிக்கப்பட்ட பெண் மற்றும் குடும்பத்தாரை அடித்து […]
சென்னை : பக்ரீத் பண்டிகை முன்னிட்டு ஏலத்தில் ஆடு ஒன்று 7.5 லட்சத்திற்கு விற்கப்பட்டது. பக்ரீத் பண்டிகை வரும் ஜூன் மாதம் 16-ஆம் தேதி கொண்டாடபட இருக்கும் நிலையில், இதனை முன்னிட்டு ஆடுகளின் விற்பனை தற்போது சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அந்த வகையில், மத்தியப் பிரதேசம் போபால் பகுதியில் ஆடு விற்பனை மும்மரமாக நடைபெற்று கொண்டு இருக்கிறது. அங்கு தான் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் வகையில், ஒரு ஆடு ஏலத்தில் ரூ.7.5 லட்சத்திற்கு விற்கப்பட்டுள்ளது. இவ்வளவு விலைக்கு ஆட்டை […]
Election2024 : மத்திய பிரதேசத்தில் வேட்புமனுவை வாபஸ் பெற்று பாஜகவில் இணைந்தார் காங்கிரஸ் வேட்பாளர் அக்ஷய் காண்டி பம். மக்களவை தேர்தல் சமயத்தில் பல்வேறு எதிர்பாரா அரசியல் பரபரப்பு நிகழ்வுகள் அங்கங்கே நிகழ்ந்து வருகின்றன. முன்பு குஜராத் சூரத் மக்களவை தொகுதியில், காங்கிரஸ் வேட்பாளர் நிலேஷ் கும்பானி வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. அதனை அடுத்து மற்ற வேட்பாளர்களும் தங்கள் வேட்புமனுக்களை வாபஸ் பெறவே, சூரத் தொகுதி பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்று எம்பியாக தேர்வானார். 2024 தேர்தலில் […]
Madhya Pradesh: மத்தியப் பிரதேசத்தின் திண்டோரி மாவட்டத்தில் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை பிக்கப் வாகனம் கவிழ்ந்ததில் 8 பெண்கள் உட்பட 14 பேர் உயிரிழந்தனர் மற்றும் 20 பேர் காயமடைந்தனர் . காயமடைந்தவர்கள் ஷாபுரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். READ MORE- நாட்டை உலுக்கிய சந்தேஷ்காலி வழக்கு.. கைது செய்யப்பட்ட ஷேக் ஷாஜகான்..! இந்த பிக்கப் வாகனத்தில் சுமார் 45 பேர் பயணம் செய்துள்ளனர். இந்த விபத்து அதிகாலை 3 மணி முதல் 4 மணி அளவில் நடைபெற்றுள்ளது […]
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மீண்டும் மத்திய பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுகிறார் என்று பாஜக தலைமை அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உத்தரப் பிரதேசம், பீகார், ஆந்திரா உள்ளிட்ட 15 மாநிலங்களில் காலியாக உள்ள 56 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கு பிப்.27ம் தேதி தேர்தல் நடைபெறும் என தலைமை தேர்தல் அறிவித்திருந்தது. அதன்படி, உபியில் 10, பீகார், மகாராஷ்டிராவில் தலா 6, மத்திய பிரதேசம், மேற்குவங்கத்தில் தலா 5, குஜராத், கர்நாடகாவில் தலா 4, ஆந்திரப் […]
மத்திய பிரதேச மாநிலம் ஹர்தா நகரில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று திடீரென பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இந்த வெடி விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்தூர் மற்றும் போபாலில் இருந்து தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வரும் நிலையில், இந்த விபத்தில் பலர் […]
5 மாநில தேர்தல் முடிந்து அதன் முடிவுகளும் கடந்த டிசம்பர் 3ஆம் தேதியே வெளியாகிவிட்டது. அதில் சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் என 3 மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றது. தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. தெலுங்கானா மாநிலத்தின் முதல்வராக ரேவந்த் ரெட்டி அறிவிக்கப்பட்டு மாநில முதல்வராக பதவி ஏற்றுவிட்டார். மிசோரம் மாநிலத்தில் ஜோரம் மக்கள் இயக்கம் வெற்றி பெற்று லால்டுஹோமா முதலமைச்சராக பொறுப்பேற்று விட்டார். சத்தீஸ்கரில் புதிய முதல்வராக விஷ்ணுதியோ சாய் தேர்வு…! அதன் […]
கடந்த நவம்பர் மாதம் நடைபெற்று முடிந்த 5 மாநில தேர்தலில் சத்தீஸ்கர், ராஜஸ்தான் , மத்திய பிரதேசம் என 3 மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியமைக்க உள்ளது. 5 மாநில தேர்தலில் ஒரே ஒரு மாநிலத்தில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி தெலுங்கானா மாநில முதல்வர் யார் என உடனடியாக அறிவித்து நேற்று ரேவந்த் ரெட்டி தெலுங்கானா மாநில முதல்வராக பொறுப்பேற்று விட்டார். ஆனால் , 3 மாநில தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக இன்னும் […]
கடந்த மாதம் நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் கடந்த டிசம்பர் 3 ஞாயிற்று கிழமை அன்று வெளியானது. அதில் காங்கிரஸ் ஆட்சி செய்து வந்த ராஜஸ்தான் , சத்தீஸ்கர் மாநிலம் மற்றும் பாஜக ஆட்சி புரிந்து வந்த மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றது. தெலுங்கானாவில் முதன் முதலாக காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியது. மிசோரமில், ஆளும் மிசோ தேசிய முன்னணி கட்சியை (MNF) பின்னுக்குத் தள்ளி, கடந்த முறை எதிர்கட்சியாக […]
கடந்த மாதம் நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தலில் நேற்று 4 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகின. இதில் சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் என 3 மாநிலத்தில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வந்தது. தற்போது 3 மாநிலங்களிலும் காங்கிரசை வீழ்த்தி பாஜக வெற்றி பெற்றுள்ளது. தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்து இருந்தாலும், கடந்த முறை ஒரே ஒரு தொகுதியை வென்று இருந்த […]
மத்திய பிரதேசத்தில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி செய்து வருகிறது. மத்தியப் பிரதேசத்தில் கடந்த நவம்பர் 17-ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற்றது. பெரும்பாலான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் மத்திய பிரதேசத்தில் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கும் என கணிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த மாநிலத்தில் உள்ள 230 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்குத் தொடங்கியது. முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் மற்றும் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான கமல்நாத் […]