எலோன் மஸ்க் ஐடியாவை உபயோகித்த மும்பை போலீஸ்.!

மும்பை போலீசார் ” *Æ b 8 ” என குறிப்பிட்டு இதற்கான அர்த்தம் என்னெவென கண்டுபிடியுங்கள்” என்று தங்களின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.
ஸ்பேஸ் X (Space x) நிறுவனர் எலோன் மஸ்க்க்கு ஒரு வாரத்திற்கு முன் ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு எலோன் மஸ்க் X Æ A-12 மஸ்க் என பெயர் வைத்துள்ளார். இந்த பெயரை கேட்ட பலரும் குழம்பி உள்ளார். அதற்கான அர்த்தத்தை எலோன் மஸ்க் மனைவி தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார். ஆனாலும் பலர் அர்த்தம் புரியவில்லை என கூறி வருகின்றனர்.
இந்தியாவில் அதிகம் கொரோனா பாதித்த மாநிலமாக மஹாராஷ்டிரா உள்ளது. நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில், மக்கள் வீட்டிலே இருக்க அம்மாநில அரசு மற்றும் போலீஸ் பல கூறி வருகின்றனர்.
இந்நிலையில், எலோன் மஸ்க் தன் மகனுக்கு வைத்து உள்ள பெயரை போல மும்பை போலீசார் ” *Æ b 8 ” என குறிப்பிட்டு இதற்கான அர்த்தம் என்னெவென கண்டுபிடியுங்கள்” என்று தங்களின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.
*Æ b 8 ????
Crack this #lockdown mandate.#AMaskDecode
— Mumbai Police (@MumbaiPolice) May 8, 2020
இதனை பார்த்த பலர், “வீட்டிலே இருங்கள்” எனவும், மேலும், பலர் “இந்த ஐடியா உங்களுக்கு எப்படி கிடைத்தது” எனவும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
KKR vs SRH : ஹைதராபாத்தின் மிரட்டல் பந்துவீச்சு! இறுதியில் பொளந்து கட்டிய கொல்கத்தா! டார்கெட் 201!
April 3, 2025
அமெரிக்க வரி விவகாரம் : “மத்திய அரசு என்ன செய்யப் போகிறது?” ராகுல் காந்தி சரமாரி கேள்வி!
April 3, 2025
“பாஜகவால் அதிகம் பாதிக்கப்பட்டது நானும், கேரள முதலமைச்சரும் தான்.!” மு.க.ஸ்டாலின் பேச்சு!
April 3, 2025