33 ஆண்டுகள்... எம்பி பதவியில் இருந்து ஓய்வு பெறுகிறார் மன்மோகன் சிங்!

Manmohan Singh: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் 33 ஆண்டுகள் பதவி வகித்து ராஜ்யசபாவில் இருந்து ஓய்வு பெறுகிறார்.

manmohan singh

Manmohan Singh:முன்னாள் பிரதமர்மன்மோகன்சிங்33 ஆண்டுகள் பதவி வகித்து ராஜ்யசபாவில் இருந்து ஓய்வு பெறுகிறார்.

முன்னாள் பிரதமர்மன்மோகன்சிங்உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் 54 பேர் ஓய்வு பெறுகின்றனர். இதில், 49 மாநிலங்களவை எம்பிக்களின் பதவிக் காலம் நேற்றுடன் நிறைவு பெற்ற நிலையில், 5 எம்பிக்களின் பதவிக் காலம் இன்றுடன் நிறைவு பெறுகிறது.

அதிலும்குறிப்பாக 33 ஆண்டுகளாக மாநிலங்களவை உறுப்பினராக பதவி வகித்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இன்றுடன் ஓய்வு பெறுகிறார். 1991 முதல் 2019ம் ஆண்டு வரை அசாம் மாநிலத்தில் இருந்தும், 2019 முதல் தற்போது வரை ராஜஸ்தானில் இருந்து மாநிலங்களவைக்கு சென்ற முன்னாள் பிரதமர்மன்மோகன்சிங்கின்பதவிக்காலம் இன்றுடன் முடிவடைகிறது.

பொருளாதாரத்தில் பல துணிச்சலான சீர்திருத்தங்களை ஏற்படுத்தியதற்காக அறியப்பட்டமன்மோகன்சிங்,1991 அக்டோபரில் முதல் முறையாக மாநிலங்களவை உறுப்பினரானார். நரசிம்மராவ் அரசாங்கத்தின் கீழ்மன்மோகன்சிங்1991 முதல் 1996 வரை நிதி அமைச்சராகவும், 2004 முதல் 2014 வரை பிரதமராகவும் இருந்தார்.

இந்த நிலையில், 91 வயதான முன்னாள் பிரதமர்மன்மோகன்சிங் இன்று தனது பதவிக்காலத்தை நிறைவு செய்த பிறகு, காலியாக இருக்கும் இடத்தை நிரப்ப காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி ராஜஸ்தானில் இருந்து முதல் முறையாக மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்கிறார். எனவே, 33 ஆண்டுகால பயணத்தை முடிக்கும் மன்மோகன் சிங்குக்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.