டெல்லி : எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளை மீறி, வக்ஃப் வாரிய திருத்த மசோதா, 2025 மீதான முன்னோடியில்லாத 17 மணி நேர 2 நிமிட விவாதத்துடன் கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. இந்த மசோதா குறித்து நடைபெற்ற விவாதம், இதுவரை அவையில் நடந்த விவாதங்களிலேயே மிக நீண்ட நேரம் நீடித்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, இது 1981ஆம் ஆண்டு எஸ்மா விவாதத்தின் போது, நடந்த 16 மணி நேரம் 55 நிமிடங்கள் நீடித்த முந்தைய சாதனை நேர விவாதத்தை, […]
டெல்லி : வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பு காரணமாக, மசோதா நாடாளுமன்றக் கூட்டுக்குழுவுக்கு அனுப்பப்பட்டு, பல திருத்தங்களுடன் மீண்டும் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட பின்னர், குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் இது சட்டமாகியுள்ளது. ஆம், வக்ஃபு சட்டத் திருத்தங்களுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்ததாக மத்திய சட்டத்துறை அமைச்சகம் அரசிதழில் வெளியிட்டுள்ளது. மக்களவையில் கடந்த ஏப்ரல் 3, 2025 அதிகாலை 288 […]
சென்னை : வக்ஃபு திருத்த சட்ட மசோதாவிற்கு எதிராக தமிழக வெற்றிக் கழகம் சார்பில், இன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என விஜய் அறிவித்திருந்தார். இது தொடர்பாக நேற்று வெளியிட்ட அவரது அறிக்கையில், ஆட்சி அதிகாரம் இருந்தால், எந்தவொரு சமூக நல்லிணக்கத்துக்கு எதிரான சட்டத்தையும் நிறைவேற்றிவிடலாம் என்ற மனநிலை கொண்ட ஆட்சியாளர்களுக்கு நேர்ந்த கதி வரலாற்றில் உள்ளதாகவும், இஸ்லாமியர்களுக்கு எதிரான அரசியலை கையில் எடுத்துள்ளதாக பாஜக அரசையும் அவர் கண்டித்துள்ளார். இந்த நிலையில், இன்று சென்னை […]
புதுடெல்லி : டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று நள்ளிரவு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புகளை மீறி வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை மத்திய அரசு நிறைவேற்றம் செய்யப்பட்டது. இது இஸ்லாமியர்களின் உரிமைகளை பறிக்கும் செயல் என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த சூழலில், வக்பு (திருத்த) மசோதா 2025, மக்களவையைத் தொடர்ந்து மாநிலங்களவையிலும் நிறைவேறியது. ஏப்ரல் 4, 2025 அன்று அதிகாலை, சுமார் 12 மணி நேர விவாதத்திற்குப் பிறகு, மாநிலங்களவையில் இந்த மசோதா […]
டெல்லி : இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் (ICMR) இந்த ஆண்டு நடத்திய மருத்துவ ஆய்வில் நதிகள் மற்றும் திறந்த வடிகால்கள் அருகில் வாழும் மக்கள் புற்றுநோயால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக தெரியவந்துள்ளது. இந்த ஆய்வுக்கான விவரத்தை மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் மூலம் மார்ச் 11, 2025 அன்று மாநிலங்களவையில் (Rajya Sabha) வெளியிடப்பட்டது. இது குறித்து மத்திய அரசு என்னென்ன நடவடிக்கைகள் எடுத்துள்ளது? ஆய்வில் என்னென்ன ஆபத்துகள் இருப்பது தெரியவந்தது […]
டெல்லி : நேற்று மாநிலங்களவையில் மத்திய பட்ஜெட் விளக்க கூட்டம் நடைபெற்றது. இதில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் குறித்து விவாதித்தார். அப்போது திமுக உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தும் வந்தார். இதில் பேசிய நிர்மலா சீதாராம ஆவேசமாக,” நான் பதில் சொல்வேன். அதனை கேட்க வேண்டியது உங்கள் கடமை.” எனக் கூறினார். நிர்மலா சீதாராமன் : மேலும், ” ஜல்லிக்கட்டு தடை செய்யப்பட்டபோது காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்து இருந்தது திமுக. அப்போது அதனை பற்றி […]
டெல்லி : ஒரே நாடு ஒரே திட்டத்தை செயல்படுத்துவதற்கான சட்டமசோதாவை இன்று நாடாளுமன்றத்தில் மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன்ராம் மேக்வால் தாக்கல் செய்தார். ஏற்கனவே, இந்த மசோதாவை தாக்கல் செய்வதற்கு முன்பே முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், திருச்சி எம்பி சிவா, பாமக கௌரவ தலைவர் ஜி.கே.மணி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்கள். இப்படி எதிர்ப்புகளுக்கு மத்தியில் தான் மசோதாவும் இன்று […]
டெல்லி : நாட்டில் உள்ள அனைத்து தேர்தல்களையும் ஒரே நாளில் அல்லது ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் நடத்துவதற்கு திட்டமிட்டு மத்திய அரசு “ஒரே நாடு ஒரே தேர்தல்” மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த திட்டத்தை கொண்டுவருவதற்கு முன்னதாக முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்த குழு, ஒரே நாடு ஒரே திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து அறிக்கையாக குடியரசு தலைவரிடம் சமர்ப்பித்தது. இந்த திட்டத்தை கொண்டு […]
சென்னை : ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரம் பெரிய அளவில் பேசுபொருளாக மாறியுள்ளது. ஏனென்றால், மத்திய அரசு நாடாளுமன்றம், மாநில சட்டமன்றங்கள் ஆகியவற்றுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்று முடிவெடுத்து அதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக, ஒரே நாடு ஒரே தேர்தல் சட்ட மசோதாவை நாடாளுமன்ற இரு அவைகளிலும் தாக்கல் செய்வதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என தகவல் வெளியாகி இருந்தது. இதற்கு தமிழகத்தில் உள்ள அரசியல் தலைவர்கள் பலரும் எதிர்ப்பு […]
சென்னை : ஒரே நேரத்தில் மக்களவை பொதுத்தேர்தல் மற்றும் அனைத்து மாநில சட்டமன்றங்களுக்கான பொதுத்தேர்தல் ஆகியவற்றை நடத்துவதற்கு மத்திய அரசு தொடர்ந்து முயற்சி செய்து வருவதாக கூறப்பட்ட நிலையில், குறித்த சட்டமசோதாவானது நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. எதிர்பார்த்தது போலவே, தற்போது ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை நாடாளுமன்ற இரு அவைகளிலும் தாக்கல் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை ஆலோசனை கூட்டத்தில் இந்த […]
டெல்லி : ஒரே நேரத்தில் மக்களவை பொதுத்தேர்தல் மற்றும் அனைத்து மாநில சட்டமன்றங்களுக்கான பொதுத்தேர்தல் ஆகியவற்றை நடத்துவதற்கு மத்திய அரசு தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. இதற்காக முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்த குழு, ஒரே நாடு ஒரே திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து அறிக்கையாக குடியரசு தலைவரிடம் சமர்ப்பித்தது. இதன் அடுத்தகட்ட நகர்வாக ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்த சட்டமசோதாவானது நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் […]
டெல்லி : கடந்த சனிக்கிழமை அன்று டெல்லியில் ஏற்பட்ட வெள்ளத்தில் பழைய ராஜிந்தர் நகரில் உள்ள ஓர் தனியார் ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் அடித்தளத்தில் வெள்ளம் புகுந்தது. இந்த வெள்ளத்தில் சிக்கி தானியா சோனி, ஸ்ரேயா யாதவ் மற்றும் நவீன் டெல்வின் ஆகிய 3 மாணவர்கள் உயிரிழந்தனர். மாணவர்கள் உயிரிழப்பு குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், டெல்லி மாநகராட்சி அதிகாரிகள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாணவர்கள் நேற்று முதல் போராட்டத்தில் […]
புது டெல்லி : பல நாடுகளுக்கு பயணம் செய்யும் பிரதமர் மோடி, மணிப்பூருக்கு மட்டும் இதுவரை செல்லவில்லை என ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்துள்ளார். புதுடெல்லி, மாநிலங்களவையில் ஜனாதிபதியின் உரைக்கு நன்றி தெரிவித்து பேசிய பிரதமர் மோடி, கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் மாநிலத்தில் இயல்பு நிலையை கொண்டு வர அரசு தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார். கலவரம் தொடர்பாக இதுவரை 1100-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 500-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். மேலும் […]
டெல்லி: குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது பிரதமர் மோடி இன்று மாநிலங்களவையில் உரையாற்றினார். கடந்த வாரம் தொடங்கிய 18வது மக்களவை முதல் கூட்டத்தொடரின் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடைபெற்று முடிந்து தற்போது பிரதமர் மோடி பதிலுரை அளித்து வருகிறார். எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கடந்த திங்களன்று உரையாற்றியதை தொடர்ந்து, நேற்று மக்களவையில் பிரதமர் மோடி பதிலுரை ஆற்றினார். அதனை தொடர்ந்து இன்று மாநிலங்களவையில் பிரதமர் […]
புதுடெல்லி : 18ஆவது மக்களவை கூட்டத்தொடர் ஜூன் 24ஆம் தேதி தொடங்கி ஜூலை 3ஆம் தேதி முடிவடையும் என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு அறிவித்துள்ளார். 2024 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, முதல் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் இதுவாகும். குடியரசுத் தலைவர், சபாநாயகர் உரையுடன் நாடாளுமன்ற கூட்டத்தொடரின் முதல் அமர்வு நடைபெறும். அன்று உறுப்பினர்களுக்கு தற்காலிக சபாநாயகர் பதவிப்பிரமாணம் செய்து வைப்பார். பின்னர், ஜூன் 26ம் தேதி மக்களவை சபாநாயகர் தேர்தல் நடைபெறும். அதன்படி, சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்பட்டு, […]
Manmohan Singh: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் 33 ஆண்டுகள் பதவி வகித்து ராஜ்யசபாவில் இருந்து ஓய்வு பெறுகிறார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் 54 பேர் ஓய்வு பெறுகின்றனர். இதில், 49 மாநிலங்களவை எம்பிக்களின் பதவிக் காலம் நேற்றுடன் நிறைவு பெற்ற நிலையில், 5 எம்பிக்களின் பதவிக் காலம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. அதிலும் குறிப்பாக 33 ஆண்டுகளாக மாநிலங்களவை உறுப்பினராக பதவி வகித்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இன்றுடன் ஓய்வு […]
Sudha Murty : இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தியின் மனைவி சுதா மூர்த்தி மாநிலங்களவை உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். பிரபல கல்வியாளரும், இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தியின் மனைவியுமான சுதா மூர்த்தி மாநிலங்களவை உறுப்பினராக இந்திய குடியரசு தலைவர் திரெளபதி முர்மு நியமனம் செய்துள்ளார். சர்வதேச மகளிர் தினம் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், சுதா மூர்த்தி மாநிலங்களவை எம்பியாக நியமிக்கப்பட்டுள்ளார். Read More – டிஜிட்டல் படைப்பாளிகளுக்கு மத்திய அரசின் முதல் அங்கீகாரம்.! விருதுகளை வழங்கினார் பிரதமர் மோடி.! […]
உத்திர பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு 255 எம்எல்ஏக்களை வைத்துள்ளது. எதிர்க்கட்சியாக சமாஜ்வாடிகட்சி செயல்பட்டு வருகிறது அக்கட்சி வசம் 111 எம்எல்ஏக்கள் உள்ளனர். அக்கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் உத்திர பிரதேசத்தில் வரும் ஏப்ரல் மாதத்துடன் 10 மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவி காலியாக உள்ளது. இதனை முன்னிட்டு அதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்ட போது, எம்எல்ஏக்கள் எண்ணிக்கை கொண்டு இரு கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களை அறிவித்தனர். […]
நாடாளுமன்றத்தில் உள்ள இரு அவைகளில் மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் 6 ஆண்டுகள் ஆகும். மாநிலங்களவை உறுப்பினர்களை மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுப்பார்கள். ஒவ்வொரு பிரதான அரசியல் கட்சியும் தங்கள் கட்சி எம்எல்ஏக்களின் பலத்தை கொண்டு மாநிலத்தில் தங்கள் கட்சிக்கான மாநிலங்களவை வேட்பாளரை முன்னிறுத்தும். மாநிலங்களவை தேர்தல் : ஒவ்வொரு கட்சியும் தங்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை கொண்டு வேட்பாளர்களை நிறுத்துவதால், பெரும்பாலும் மாநிலங்களவை தேர்தல் நடைபெறுவது இல்லை. இருந்தும் ஒரு சில இடங்களில் […]
250 உறுப்பினர்களைக் கொண்ட ராஜ்யசபாவின் உறுப்பினர்களின் பதவிக்காலம் 6 ஆண்டுகள் ஆகும். இந்த ஆறு ஆண்டுகள் முடிந்து தற்போது 56 மாநிலங்களவை (ராஜ்ய சபை) எம்பி இடங்கள் காலியாக உள்ளன. இந்த ராஜ்ய சபா எம்பிக்களை மாநில எம்எல்ஏக்கள் தேர்ந்தெடுப்பர். ஆளும் கட்சிக்கு அதிக மாநிலங்களவை உறுப்பினர்களும், எதிர்க்கட்சிகளுக்கு குறைவான ராஜ்யசபா உறுப்பினர்களும், மற்ற கட்சிகளுக்கு அவர்களின் எம்எல்ஏக்கள் எண்ணிக்கையை வைத்து மாநில ராஜ்யசபா எம்பி சீட் நிர்ணயம் செய்யப்படும். ராமர் கோவில் திறப்புக்கு ஜனாதிபதியை அழைக்காததற்கு […]