நாட்டை வழிநடத்த மம்தா தகுதியானவர்...கர்நாடக முதல்வர் குமாரசாமி...!!

மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி சமீபத்தில் எதிர்க்கட்சிகள் அனைவரையும் ஒரே மேடையில் ஒருங்கிணைத்தார்.அப்போது பேசிய கர்நாடக மணிலா முதல்வர் குமாரசாமி

மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி சமீபத்தில் எதிர்க்கட்சிகள் அனைவரையும் ஒரே மேடையில் ஒருங்கிணைத்தார்.அப்போது பேசிய கர்நாடக மணிலா முதல்வர் குமாரசாமி , தேர்தலுக்கு முன்பு  பிரதமரை தேர்ந்தெடுக்க வேண்டிய அவசியம் இல்லை. நரேந்திர மோடியின் மோசமான நிர்வாகத்தால் நாட்டு மக்கள்  முற்றிலும் ஏமாற்றமடைந்துள்ளனர்.திறமையான தலைவர்கள் தேர்வு செய்தால் தான் நாட்டை நல்ல முன்னேற்ற பாதைக்கு அழைத்துச்செல்ல முடியும். எனவே எதிர்க்கட்சிகள் தேர்தல் முடிந்தது ஆலோசித்து  பிரதமரை  தேர்வு செய்வோம்.

தொடர்ந்து பேசிய அவர் , மம்தா பானர்ஜி எளிமையான மிகவும் சிறந்த நிர்வாகி ஆவார். நாட்டை வழி நடத்த மம்தா பானர்ஜி தகுதியான திறமையான தலைவர் என்று  நான் நினைக்கிறேன். மம்தா பானர்ஜி மேற்கு வங்காளத்தை சிறப்பாக ஆட்சி செய்து பல ஆண்டுகளாக தனது ஆளுமையை  நிரூபித்து உள்ளார் என்று கர்நாடக முதல்வர் தெரிவித்தார் .