மேற்கு வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலமானது தற்போது புயலாக வலுப்பெற்று உள்ளது. ஹாமூன் என பெயரிடப்பட்ட இந்த புயலானது தற்போது வடகிழக்கு நோக்கி நகர்ந்து செல்கிறது. இதன் காரணமாக ஓடிசா வங்கதேசம் உள்ளிட்ட வடகிழக்கு மாவட்ட மாநிலங்களில் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்தப் புயல் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரையில் 9 துறைமுகங்களில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. சென்னை, கடலூர், தூத்துக்குடி, எண்ணூர், காட்டுப்பள்ளி, நாகை, […]
மேற்குவங்கம் மாநிலத்தில் 100% பார்வையாளர்களுடன் திரையரங்குகளை இயக்க அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அனுமதி அளித்துள்ளார். இன்று நடைபெற்ற 6-வது கொல்கத்தா சர்வதேச திரைப்பட விழாவை (கேஐஎஃப்எஃப்) துவக்கி வைத்த பின் பேசிய முதல்வர் மம்தா பானர்ஜி, மேற்கு வங்க மாநிலத்தில் 100% பார்வையாளர்களுடன் திரையரங்குகளை இயக்க அனுமதி அளித்துள்ளார். திரையரங்குகள் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் திரையரங்குகளில் வழக்கமான சுத்திகரிப்பு உள்ளிட்ட அனைத்து பாதுகாப்பு நெறிமுறைகளையும் சரியாக பராமரிக்குமாறும் திரையரங்கு உரிமையாளர்களைக் அறிவுறுத்தியுள்ளார். […]
குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி கேரளா ,பஞ்சாப், ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவையில் தீர்மானங்கள் நிறைவேற்றியது. இதனைத்தொடர்ந்து மேற்குவங்க மாநில சட்டப்பேரவையிலும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு அண்மையில் கொண்டுவந்தது.இந்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்த சட்டத்திற்கு கேரளா ,மேற்கு வங்கம்,பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது. குறிப்பாக கேரளா மற்றும் மேற்கு வங்க மாநில […]
மேற்கு வங்கம் மாநிலம் சௌத் பர்கனாஸ் மாவட்டத்தில் ஓடும் ரயிலில் இஸ்லாமிய பள்ளி ஆசிரியர் ஒருவரை ஒரு கும்பல் “ஜெய்ஸ்ரீராம்” என்று சொல்ல சொல்லி கீழே தள்ளிவிட்டுள்ளது.ஓடும் ரயிலில் இருந்து தள்ளி விடப்பட்ட இந்த சம்பவமானது நாட்டையே நாட்டையே அச்சுறுத்தியுள்ளது. நாடு முழுவதும் இந்துத்துவா அமைப்புகள் இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் நடத்தி வருவது தொடர்ந்து வருகிறது. பிரதமர் மோடி இரண்டாவது முறையாக பதவியேற்றத்திலிருந்து இதுவரை ஐந்திற்கும் மேற்பட்ட முறை இது போன்ற தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளது. கடந்த […]
மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி சமீபத்தில் எதிர்க்கட்சிகள் அனைவரையும் ஒரே மேடையில் ஒருங்கிணைத்தார்.அப்போது பேசிய கர்நாடக மணிலா முதல்வர் குமாரசாமி , தேர்தலுக்கு முன்பு பிரதமரை தேர்ந்தெடுக்க வேண்டிய அவசியம் இல்லை. நரேந்திர மோடியின் மோசமான நிர்வாகத்தால் நாட்டு மக்கள் முற்றிலும் ஏமாற்றமடைந்துள்ளனர்.திறமையான தலைவர்கள் தேர்வு செய்தால் தான் நாட்டை நல்ல முன்னேற்ற பாதைக்கு அழைத்துச்செல்ல முடியும். எனவே எதிர்க்கட்சிகள் தேர்தல் முடிந்தது ஆலோசித்து பிரதமரை தேர்வு செய்வோம். தொடர்ந்து பேசிய அவர் , மம்தா பானர்ஜி எளிமையான மிகவும் சிறந்த நிர்வாகி ஆவார். நாட்டை வழி நடத்த […]
பாஜக ரத யாத்திரை நடத்தி மேற்கு வங்கத்தில் மதகலவரத்தை நடத்துவத்தை நோக்க கொண்டுள்ளதாக திரிணாமுல் காங்கிரஸ் கூறியுள்ளது. 2019ஆம் ஆண்டு நடைபெற இருக்கின்ற பாராளுமன்ற தேர்தலை குறிவைத்து மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள 42 தொகுதிகளிலும் ரத யாத்திரை நடத்த பாஜக திட்டமிட்டுள்ளது. இந்த ரத்த யாத்திரையுடன் மேற்கு வங்க மாநிலம் முழுவதும் 158 இடங்களில் பொதுக்கூட்டம் முடிவு செய்து இருந்தது.இந்நிலையில் பாரதீய ஜனதா கட்சி நடத்த திட்டமிட்ட ரத யாத்திரைக்கு மேற்கு வங்க மம்தா பானர்ஜி அரசு அனுமதி மறுத்தது.இதனால் தங்களுக்கு ரத யாத்திரை நடத்த […]
பாரதிய ஜனதா கட்சி இல்லாத இந்தியா மிகவும் சிறப்பாக இருக்கும் என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேற்குவங்க மாநிலம் பங்குராவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், இந்தியாவை விட்டு பாஜக வெளியேற வேண்டும் என்று கூறினார். பிரதமர் அலுவலகம் முதல் அனைத்து துறைகளிலும் பாஜக தனது ஆதரவாளர்களை நியமித்துள்ளதாக குற்றம் சாட்டிய அவர், பாஜக இல்லாத இந்தியா சிறப்பாக இருக்கும் என்று தெரிவித்தார். கடந்த மக்களவை தேர்தலில் மேற்கு வங்கத்தில் இரண்டு […]
மேற்குவங்காள மாநிலத்தின் தலைநகர் கொல்கத்தாவில் உள்ள பாக்ரி சந்தையில் இன்று காலை பெரும் தீ விபத்து ஏற்பட்டது. கொல்கத்தாவில் உள்ள மிகப்பெரிய சந்தைகளில் பாக்ரி முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. இச்சந்தையில் இன்று காலை சுமார் 3 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. உடனே சந்தையின் வளாகத்தினுள்ளே தங்கியிருந்த வியாபாரிகள் வெளியேற்றப்பட்டனர். இந்த தீ விபத்தில் சுமார் கோடிக்கணக்கான மதிப்புள்ள பொருள்கள் எரிந்து சாம்பலாகின. குறுகிய பாதை என்பதால் தீயை அணைக்கும் பணியில் சற்று சுணக்கும் ஏற்பட்டது. தீயை […]
மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமூல் காங்கிரஸ் அலுவலகத்தில் குண்டுவெடித்ததில் தொண்டர்கள் இருவர் பலியாகினர்.மேற்கு மிட்னாப்பூர் மாவட்டம் மகரம்பூர் கிராமத்தில் ((Makarampur)) உள்ள அக்கட்சியின் அலுவலகத்தை, அக்கட்சியின் உள்ளூர் பிரமுகர்கள் திறந்தனர். அப்போது சக்திவாய்ந்த வெடிகுண்டு வெடித்தது. இதில் 2 பேர் சம்பவ இடத்தியே உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும் 5 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டனர். குண்டுவெடிப்பு குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். DINASUVADU