பாஜகவுடன் சேர்ந்து மம்தா நடத்தும் நாடகமே தர்ணா….சீத்தாராம் யெச்சுரி கருத்து…!!
பாஜக_வும் , திரிணாமூல்_லும் சேர்ந்து நடத்தும் நாடகமே மம்தா_வின் தர்ணா போராட்டம் என சீத்தாராம் யெச்சுரி தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள சாரதா சீட் பண்ட் நிதி மோசடி வழக்கில் கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமாருக்கு C.B.I விசாரணை_க்கு 3 முறையும் சம்மன் அனுப்பியும் ஆஜராகாததால் C.B.I விசாரனைக்கு சென்ற போது அங்கே கொல்கத்தா காவல்துறை C.B.I அதிகாரிகளை தடுத்து நிறுத்தியது தேசியளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் நேற்று இரவு கொல்கத்தா காவல் ஆணையர் வீட்டில் ஆலோசனை நடத்திய மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று இரவு முதல் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.மேலும் அவர் மத்திய அரசு C.B.I_யை தவறாக பயன்படுத்துகின்றது . முறையாக அனுமதி பெறாமல் விசாரணை நடத்துவது ஏற்புடையது இல்லை என்றும் அவர் குறிப்பிட்டு தொடர்ந்து இரண்டாவது நாளாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்.இதில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொது செயலாளர் சீத்தாராம் தனது ட்வீட்_டர் பக்கத்தில் கூறுகையில் நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய பொது கூட்டத்தில் மக்கள் ஆதரவு பார்த்து அச்சம் அடைந்து பி.ஜே.பி_யும் திரிணாமூல் காங்கிரஸ்_சும் நாடகமே மம்தா பானர்ஜி_யின் தர்ணா போராட்ட நாடகம் என்று ட்வீட் செய்துள்ளார்.
The Brigade Rally was possible due to the massive support of the people of Bengal who are suffering under oppressive policies of BJP at Centre & TMC in the state, and the dedication of every single Comrade. We must oust both BJP & TMC to ensure that People get their due #LalSalam pic.twitter.com/eYSvwiUtMB
— Sitaram Yechury (@SitaramYechury) February 3, 2019