மேற்கு வங்கத்தில் புதிதாக மாற்றி அமைக்கப்பட்ட அமைச்சரவையில் 9 அமைச்சர்கள் பதவியேற்பு. மேற்கு வங்க மாநிலத்தில் அமைச்சரவை மாற்றம் செய்யப்படும் என்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி சமீபத்தில் தெரிவித்திருந்தார். புதிய அமைச்சரவையில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட உள்ளதாகவும், சுப்ரதா முகர்ஜி, பார்த்தா சாட்டர்ஜி உள்ளிட்ட அமைச்சர்கள் இல்லாத நிலையில், புதிய அமைச்சரவை பதவியேற்கிறது எனவும் கூறியிருந்தார். இந்த நிலையில், மேற்கு வங்க முதலமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி தலைமையிலான அமைச்சரவை மாற்றி […]
மேற்கு வங்கத்தில் 7 புதிய மாவட்டங்கள் அமைக்கும் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக முதல்வர் தகவல். மேற்கு வங்க மாநிலத்தில் புதன்கிழமை அன்று அமைச்சரவை மாற்றம் நடைபெற உள்ளது என்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். புதிய அமைச்சரவையில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட உள்ளதாகவும் கூறியுள்ளார். சுப்ரதா முகர்ஜி, பார்த்தா சாட்டர்ஜி உள்ளிட்ட அமைச்சர்கள் இல்லாத நிலையில், புதிய அமைச்சரவை பதவியேற்கிறது. மேலும், மேற்கு வங்கத்தில் 7 புதிய மாவட்டங்கள் அமைக்கும் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் […]
குடியரசு தலைவர் தேர்தல் தொடர்பாக 22 எதிர்க்கட்சி தலைவர்களுக்கு மேற்குவங்கம் முதலமைச்சர் கடிதம். குடியரசு தலைவர் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் உள்ளிட்ட 22 எதிர்க்கட்சி தலைவர்களுக்கு மேற்குவங்கம் முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடிதம் எழுதியிருக்கிறார். ஜூன் 15-ஆம் தேதி டெல்லியில் ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தது எதிர்க்கட்சிகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், குடியரசு தலைவர் தேர்தலில் ஒருமித்த கருத்து உள்ள அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் வரும் 15-ஆம் […]
கடந்த ஆண்டு பெகாசஸ் மென்பொருள் விவகாரம் இந்தியாவில் மிகப் பெரிய சர்ச்சையைக் கிளப்பியிருந்தது.குறிப்பாக, பெகாசஸ் மூலம் ராகுல் காந்தி, தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர்,மத்திய அமைச்சர்கள், பத்திரிகையாளர்கள்,எதிர்க்கட்சித் தலைவர்கள், நீதிபதிகள் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டோரின் மொபைல் போன்கள் கண்காணிக்கப்பட்டதாகக் கடந்த கூறப்பட்டது.இந்த விவகாரம் நாடு முழுவதும் மிகப் பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்தது. மத்திய அரசு மறுப்பு: ஆனால்,இந்தியாவில் அங்கீகரிக்கப்படாத கண்காணிப்பு எதுவும் நடத்தப்படவில்லை என்று மத்திய அரசு விளக்கம் அளித்திருந்தது. இதனையடுத்து,இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு […]
நாட்டின் ஜநாயகத்தை பெகாசஸ் உளவு மென்பொருள் கைப்பற்றியுள்ளது என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். திரிணமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் கடைபிடிக்கப்பட்டு வரும் தியாகிகள் தினமான இன்று அம்மாநிலத்தில் உள்ள மக்களிடம் காணொலி மூலம் உரையாற்றிய முதல்வர் மம்தா பானர்ஜி, மேற்குவங்க மக்களுக்கு பாராட்டுகளை தெரிவித்துக்கொண்டார். இதன்பின் பேசிய அவர், நாங்கள் பணம், அதிகாரம் ஆகியவற்றை எதிர்த்து போராடி உள்ளோம். அனைத்து தடைகளையும் தாண்டி, மக்கள் எங்களுக்கு வாக்களித்ததால், ஆட்சிக்கு வந்துள்ளோம். தற்போது நாட்டு மக்களின் […]
ஸ்டேன் சுவாமி மரணம் தொடர்பாக குடியரசுத் தலைவருக்கு சோனியா காந்தி, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட 10 தலைவர்கள் கூட்டாக கடிதம். 2018ல் பீமா – கொரேகான் வன்முறையை தூண்டியதாகவும், எல்கார் பரிஷத் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசி அதன் மூலம் வன்முறையை ஏற்படுத்தியதாக சமூக போராளி ஸ்டேன் சுவாமி கடந்த வருடம் கைது செய்யப்பட்டார். மகாராஷ்டிரா மாநிலத்தில் இவருக்கு எதிரான வழக்கு விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த வழக்கை என்ஐஏ அமைப்பு விசாரித்து வந்த நிலையில், […]
வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில், மேற்கு வங்க மாநிலத்தில் ஆளும் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் முன்னிலை. மேற்கு வங்கத்தில் 292 தொகுதிகளில் 8 கட்டங்களாக சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நடைபெற்றது. இதில், ஆளும் திரிணாமுல் காங், பாஜக, காங்கிரஸ்- இடதுசாரிகள் கூட்டணி இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி சரியாக 8 மணிக்கு தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், ஆளும் மம்தா பானர்ஜி தலைமையிலான […]
சரியான நேரத்தில் தடுப்பூசி வழங்கியிருந்தால் இந்நேரம் கொரோனா வைரஸ் மீண்டும் பரவி இருக்காது எனவும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் குற்றம் சாட்டி உள்ளார். நாடு முழுவதிலும் கொரோனா வைரஸ் அதிகளவில் பரவி வரும் நிலையில் நாளுக்கு நாள் லட்சக்கணக்கானோர் புதிதாக பாதிக்கப்பட்டு கொண்டிருக்கின்றனர். கொரோனாவின் தீவிரம் அதிகமாக உள்ளதால் மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற உள்ள தேர்தல் பிரச்சாரம் தற்பொழுது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காணொளி வாயிலாக நேற்று மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா […]
பி.எம். கேர்ஸ் நிதியை ஏன் இலவசமாக கொரோனா தடுப்பூசிக்கு பயன்படுத்த முடியாது? என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கேள்வி. இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் பெருமளவில் அதிகரித்துள்ள நிலையில், மத்திய அரசின் மொத்த தவறான நிர்வாகத்தின் காரணமாக நாடு குழப்பத்தில் உள்ளது. கொரோனா முடிந்துவிட்டதாக மத்திய சுகாதார அமைச்சர் கூறியிருந்த நிலையில், அவர் இதில் கவனம் செலுத்தவில்லை என்றும் கூறியுள்ளார். மேற்குவங்கத்தை கைப்பற்றும் முயற்சியில், பாஜகவினர் முழு நாட்டையும் குழப்பத்தில் தள்ளியுள்ளனர் என விமர்சித்துள்ளார். கொரோனா தடுப்பூசியின் உலகளாவிய […]
பெட்ரோல்,டீசல் விலை உயர்வைக் கண்டித்து எலக்ட்ரிக் வாகனத்தில் பயணித்த மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி. பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு காரணமாக மக்கள் அனைவரும் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.ஆகவே பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வேண்டுகோள் விடுத்தது வருகின்றனர்.பல்வேறு இடங்களில் குறைக்க வலியுறுத்தி போராட்டங்களும் நடைபெற்றுது. இந்நிலையில் பெட்ரோல்,டீசல் விலை உயர்வைக் கண்டித்து மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி எலக்ட்ரிக் வாகனத்தில் பயணம் மேற்கொண்டார்.
பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சியில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பங்கேற்கவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. இன்று மாலை பிரதமர் மோடி மேற்கு வங்க மாநிலத்திற்கு பயணம் மேற்கொள்கிறார்.அம்மாநிலத்தில் உள்ள ஹூக்ளியில் பல்வேறு ரயில்வே திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.மேலும் அசிம்கனி முதல் கர்கிராகாட் சாலை பிரிவு வரையிலான தடம் இரட்டிப்பாக்கப்பட்டுள்ள திட்டத்தையும் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிப்பார். இது கிழக்கு இந்தியாவின் ஹவுரா பண்டல்- அசிம்கனி பகுதி திட்டத்தின் ஒரு பகுதியாகும். இத்திட்டத்திற்கு சுமார் 240 கோடி ரூபாய் […]
வேளாண் சட்டங்களுக்கு எதிராக மேற்கு வங்க அரசு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. மத்திய அரசின் சார்பில் வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்த மசோதா ஆகியவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன.இந்த மசோதாக்களுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார்.இதைத்தொடர்ந்து இவைகள் சட்டமாக மாறின.ஆனால் இதற்கு எதிராக டெல்லியில் விவசாய அமைப்புகள் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வருகின்றன.இந்த சட்டத்திற்கு எதிராக ஒரு சில மாநிலங்கள் தீர்மானமும் […]
நேதாஜியின் பிறந்த தினத்தையொட்டி இன்று கொல்கத்தாவில் நடைபெற்று வரும் விழாவில் உரையாற்ற முதல்வர் மம்தா பானர்ஜி பேச மறுத்துவிட்டார். இன்று நாடு முழுவதும் நேதாஜியின் பிறந்த நாள் 125-வது பிறந்தநாள் தினம் கொண்டாடப்படுகிறது. நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிறந்தநாளை முன்னிட்டு மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் விக்டோரியா ஹால் வெளியே ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் கலந்துக்கொண்டனர். இந்த விழாவில் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி பேச […]
வேளாண் சட்டங்கள் தொடர்பாக மத்திய அரசு மீது மேலும் அழுத்தம் கொடுக்கும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அதற்கு எதிராக மாநில சட்டமன்றத்தில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற முடிவு செய்துள்ளார். மத்திய அரசின் சார்பில் வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்த மசோதா ஆகியவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன.இந்த மசோதாக்களுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார்.இதைத்தொடர்ந்து இவைகள் சட்டமாக மாறின.ஆனால் […]
பிரதமர் நரேந்திர மோடி இன்று மேற்கு வங்க முதல்வரான மம்தா பானர்ஜியைத் விமர்சித்து அவரது சித்தாந்தம் மேற்கு வங்கத்தை அழித்துவிட்டது என கூறினார். திரிணாமுல் காங்கிரஸ் அரசாங்கத்தின் மீது 70 லட்சத்துக்கும் மேற்பட்ட மாநில விவசாயிகள் மையத்தின் நேரடி பண பரிமாற்ற திட்டத்தின் மூலம் பயனடைய அனுமதிக்கவில்லை என்று அவர் கண்டித்தார். அவர் மேலும் கூறுகையில்,”வங்காள விவசாயிகள் மையத்தின் திட்டங்களின் நன்மைகளை இழந்துவிட்டனர். திட்டங்களின் நன்மைகளை விவசாயிகளுக்கு சென்றடைய அனுமதிக்காத ஒரே மாநிலம் மேற்கு வங்காளம் என்றார். […]
‘டெல்லி சாலோ’ என்ற பெயரில் டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணி நடத்தி வரும் நிலையில் ,பாஜக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பறித்துள்ளது என மேற்கு வங்க முதல்வர் மம்தா தெரிவித்துள்ளார். வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்திரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருள்கள் திருத்த மசோதா ஆகிய 3 சட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றியது.ஆனால் இந்த சட்டங்களுக்கு ஹரியானா ,பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.இதனை திரும்பப்பெற வலியுறுத்தி […]
கொரோனா காரணமாக மேற்கு வங்கத்தில் நடப்பாண்டு 10 மற்றும் 12 படிக்கும் மாணவர்களுக்கு இறுதி தேர்வு கிடையாது எனவும் அவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவர் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். மேற்கு வங்கத்தில் நேற்று கொரோனாவால் அதிக அளவில் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, மொத்தமாக குணப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,72,265 ஆக உள்ளது என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இப்போது மேற்கு வங்கத்தில் குணமடைந்தவர்களின் சதவீதம் 90.11 உள்ளது. மேலும், நேற்று கொரோனாவால் 53 பேர் […]
மேற்கு வங்கத்தில் ஜூன் மாதத்தில் காணப்பட்ட வேலையின்மை விகிதம், இந்தியாவுடன் ஒப்பிடுகையில் குறைவு என மம்தா பானா்ஜி தெரிவித்துள்ளாா். கொரோனா வைரஸ் கட்டுப்படுத்த கடந்த மாா்ச் 25-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கு காரணமாக பல நிறுவனங்கள் மூடப்பட்டதால் பலா் வேலையிழந்தனா். இதனால், நாட்டின் பொருளாதாரம் பெரும் சரிவைச் சந்தித்தது. தற்போது ஒவ்வொரு மாநிலத்திலும் கொரோனா பாதிப்புக்கு ஏற்றாற்போல பல வகையான தளா்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. அதனால் வேலையின்மை குறைந்து வருகிறது. சமீபத்தில், […]
மேற்குவங்கத்தில் ஜூன் 1 ஆம் தேதி முதல் அனைத்து வழிபாடு தளங்களை திறக்க அம்மாநில முதல்வர் அறிவித்தார். மேற்குவங்கம் மாநிலத்தில் கொரோனா தொற்று கட்டுக்குள் கொண்டுவந்ததையடுத்து, அம்மாநிலத்தில் சில தளவுகளை அளித்துள்ளது. அதில், ஜூன் 1ஆம் தேதி முதல் அம்மாநிலத்தில் வழிபாட்டு தளங்களை திறக்க முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார். கோவில்களில் ஒரே நேரத்தில் 10 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவதாகவும், சமூக இடைவெளியை பின்பற்றுமாறு கூறினார். மேலும், மேற்குவங்கத்தில் ஜூன் 8 முதல் அனைத்து அரசு மற்றும் […]
குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி கேரளா ,பஞ்சாப், ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவையில் தீர்மானங்கள் நிறைவேற்றியது. இதனைத்தொடர்ந்து மேற்குவங்க மாநில சட்டப்பேரவையிலும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு அண்மையில் கொண்டுவந்தது.இந்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்த சட்டத்திற்கு கேரளா ,மேற்கு வங்கம்,பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது. குறிப்பாக கேரளா மற்றும் மேற்கு வங்க மாநில […]