வேளாண் சட்டங்களுக்கு எதிராக மேற்கு வங்க அரசு தீர்மானம்

West Bengal Legislative Assembly passes the resolution against three central agriculture laws.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக மேற்கு வங்க அரசு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

மத்திய அரசின் சார்பில் வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்த மசோதா ஆகியவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன.இந்த மசோதாக்களுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார்.இதைத்தொடர்ந்து இவைகள் சட்டமாக மாறின.ஆனால் இதற்கு எதிராக டெல்லியில் விவசாய அமைப்புகள் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வருகின்றன.இந்த சட்டத்திற்கு எதிராக ஒரு சில மாநிலங்கள் தீர்மானமும் கொண்டு வந்துள்ளன.

இந்நிலையில் வேளாண் சட்டங்கள் தொடர்பாக மத்திய அரசு மீது மேலும் அழுத்தம் கொடுக்கும் வகையில் மேற்கு வங்க சட்டமன்றத்தில் எதிராக தீர்மானம் நிறைவேற்றம்  செய்யப்பட்டுள்ளது.ஏற்கனவே மூன்று வேளாண் சட்டங்களை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையை முதல்வர் பானர்ஜி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.