சரியான நேரத்தில் தடுப்பூசி வழங்கப்பட்டிருந்தால் மீண்டும் கொரோனா வைரஸ் பரவி இருக்காது – மம்தா பானர்ஜி!

West Bengal Chief Minister Mamata Banerjee has accused the corona virus of not spreading again this time if vaccinated in a timely manner.

சரியான நேரத்தில் தடுப்பூசி வழங்கியிருந்தால் இந்நேரம் கொரோனா வைரஸ் மீண்டும் பரவி இருக்காது எனவும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் குற்றம் சாட்டி உள்ளார்.

நாடு முழுவதிலும் கொரோனா வைரஸ் அதிகளவில் பரவி வரும் நிலையில் நாளுக்கு நாள் லட்சக்கணக்கானோர் புதிதாக பாதிக்கப்பட்டு கொண்டிருக்கின்றனர். கொரோனாவின் தீவிரம் அதிகமாக உள்ளதால் மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற உள்ள தேர்தல் பிரச்சாரம் தற்பொழுது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காணொளி வாயிலாக நேற்று மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி அவர்கள் பிரச்சாரம் செய்துள்ளார்.

அப்போது பேசிய அவர் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான கூட்டங்களை தான் அதிகம் நடத்துவதாகவும், மத்திய அரசு கொரோனாவை தடுப்பதில் தோல்வி அடைந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் ஒட்டுமொத்த நாடே தேர்தலை கவனித்து வரும் நிலையில், பிரதமர் மோடி மான் கி பாத்தில் மட்டும் பேசிவிட்டு அவர் வேறெங்கோ சென்று விடுகிறார். மேற்கு வங்க மாநிலத்துக்கு வரவேண்டிய ஆக்சிஜன் உத்தரப் பிரதேசத்துக்கு அனுப்பப்படுகிறது.

சரியான நேரத்தில் தடுப்பூசி வழங்கப்பட்டிருந்தால் கொரோனா வைரஸ் மீண்டும் பரவி இருக்காது என தெரிவித்துள்ளார். மேலும் உத்திரப் பிரதேசம், அசாம் மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களில் ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான சடலங்கள் எரிக்கப்படுவதாக தெரிவித்துள்ள அவர், மேற்கு வங்க மக்கள் அதிர்ஷ்டசாலிகள் என கூறியுள்ளார். மேலும் மேற்கு வங்கத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாகவும், எனவே பொதுமக்கள் அச்சமின்றி வாக்களியுங்கள் எனவும் தெரிவித்துள்ளார்.