#JustNow: மேற்கு வங்கத்தில் அமைச்சரவை மாற்றி அமைப்பு!
மேற்கு வங்கத்தில் புதிதாக மாற்றி அமைக்கப்பட்ட அமைச்சரவையில் 9 அமைச்சர்கள் பதவியேற்பு.
மேற்கு வங்க மாநிலத்தில் அமைச்சரவை மாற்றம் செய்யப்படும் என்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி சமீபத்தில் தெரிவித்திருந்தார். புதிய அமைச்சரவையில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட உள்ளதாகவும், சுப்ரதா முகர்ஜி, பார்த்தா சாட்டர்ஜி உள்ளிட்ட அமைச்சர்கள் இல்லாத நிலையில், புதிய அமைச்சரவை பதவியேற்கிறது எனவும் கூறியிருந்தார்.
இந்த நிலையில், மேற்கு வங்க முதலமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி தலைமையிலான அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டது. புதிதாக மாற்றி அமைக்கப்பட்ட அமைச்சரவையில் 9 அமைச்சர்கள் பதவியேற்றனர். 9 அமைச்சர்களும் அலுவற்ற இல.கசேணன் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
அதன்படி, பாபுல் சுப்ரியோ, சினேகசிஸ் சக்ரவர்த்தி, பார்த்தா பௌமிக், உதயன் குஹா, பிரதீப் மஜூம்டர், தஜ்முல் ஹொசைன், சத்யஜித் பர்மன், பிர்பாஹா ஹன்ஸ்தா மற்றும் பிப்லாப் ராய் சவுத்ரி ஆகியோர் பதவியேற்றனர். ஆசிரியர் பணி நியமன முறைகேடு வழக்கில் பார்த்த சாட்டர்ஜி அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.