பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சியை புறக்கணிக்கும் மேற்கு வங்க முதலமைச்சர் ?

West Bengal Chief Minister Mamata Banerjee will not attend PM Narendra Modi programme

பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சியில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பங்கேற்கவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.

இன்று மாலை பிரதமர் மோடி மேற்கு வங்க மாநிலத்திற்கு பயணம் மேற்கொள்கிறார்.அம்மாநிலத்தில் உள்ள ஹூக்ளியில் பல்வேறு ரயில்வே திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.மேலும் அசிம்கனி முதல் கர்கிராகாட் சாலை பிரிவு வரையிலான தடம் இரட்டிப்பாக்கப்பட்டுள்ள திட்டத்தையும் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிப்பார். இது கிழக்கு இந்தியாவின் ஹவுரா பண்டல்- அசிம்கனி பகுதி திட்டத்தின் ஒரு பகுதியாகும். இத்திட்டத்திற்கு சுமார் 240 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிரதமர் மோடி பங்கேற்கும் இந்த நிகழ்ச்சியில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பங்கேற்கமாட்டார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.