#ElectionBreaking: அதிரடியாக தொடங்கிய வாக்கு எண்ணிக்கை...மேற்குவங்கத்தில் முன்னிலை வகிக்கும் மம்தா!!

As the vote count begins, the Mamata Banerjee-led Trinamool Congress is leading in West Bengal.

வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில், மேற்கு வங்க மாநிலத்தில் ஆளும் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் முன்னிலை.

மேற்கு வங்கத்தில் 292 தொகுதிகளில் 8 கட்டங்களாக சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நடைபெற்றது. இதில், ஆளும் திரிணாமுல் காங், பாஜக, காங்கிரஸ்- இடதுசாரிகள் கூட்டணி இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி சரியாக 8 மணிக்கு தொடங்கியது.

முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், ஆளும் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் முன்னிலை வகித்து வருகிறது. அதாவது, மேற்குவங்கத்தில் உள்ள மொத்தம் 292 சட்டமன்ற தொகுதிகளில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் 77 இடங்களிலும், பாஜக 58 இடங்களிலும் முன்னிலை பெற்று வருகிறது.