கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: பாஜக எம்.பி. ஹேமமாலினி தலைமையில் குழு அமைப்பு.!

பாஜக தலைவர் ஜே.பி நட்டாவால் நியமிக்கப்பட்ட எம்.பி. ஹேமமாலினி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி உண்மை கண்டறியும் குழு, கரூர் செல்ல உள்ளது.

BJP -NDA

டெல்லி :கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யின் பிரச்சார பேரணியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து, பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் எட்டு உறுப்பினர்கள் கொண்ட உண்மை கண்டறியும் குழுவை அமைத்துள்ளார்.

இந்தக் குழு, பாஜக, சிவசேனா மற்றும் தெலுங்கு தேசம் கட்சி (TDP) உறுப்பினர்களை உள்ளடக்கியது மற்றும் நடிகை ஹேமா மாலினி தலைமையில் செயல்படுகிறது. இக்குழு கரூர் சென்று, சம்பவத்திற்கு வழிவகுத்த காரணங்களை ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சந்தித்து, அறிக்கை சமர்ப்பிக்கும்.

இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், இந்த துயரச் சம்பவத்திற்கு ஜெ.பி.நட்டா தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து, காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் மற்றும் தைரியத்தை வேண்டுவதாகவும் சமூக வலைதளமான எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா உயிரிழந்தவர்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து, எட்டு பேர் கொண்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி-பாஜக எம்.பி.க்கள் குழுவை அமைத்தார். இந்தக் குழு கரூர் சென்று நிலைமையை ஆராய்ந்து, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரைச் சந்தித்து, விரைவில் தனது அறிக்கையை கட்சித் தலைமையிடம் சமர்ப்பிக்கும்.

எம்.பி ஹேமா மாலினி தலைமையிலான 8 பேர் கொண்ட இந்த குழுவில் இதில், முன்னாள் அமைச்சரும், எம்.பி -யுமான அனுராக் தாகூர், கர்நாடக எம்.பி தேஜஸ்வி சூர்யா, முன்னாள் DGP-யும்,எம்.பி -யுமான பிரிஜ்லால், ஆந்திர எம்.பி புட்ட மகேஸ் குமார் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். இக்குழு விரைவில் கரூருக்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க உள்ளது.

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: பாஜக எம்.பி. ஹேமமாலினி தலைமையில் குழு அமைப்பு.!