பள்ளி, கல்லூரி, திரையரங்குகளில் முகக்கவசம் கட்டாயம்.! கர்நாடக அரசு அதிரடி உத்தரவு.!

கர்நாடகாவில் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் திரையரங்குகளில் முகக்கவசம் கட்டாயம் என அம்மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

கர்நாடகாவில் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் திரையரங்குகளில் முகக்கவசம் கட்டாயம் என அம்மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இந்தியாவில் தற்போது கொஞ்சம் தீவிரம் அடைய ஆரம்பித்துள்ளளன. விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனை கட்டாயம். பல்வேறு மாநிலங்களில் முக்கியமான இடங்களுக்கு முகக்கவசம் கட்டாயம் என நீள்கிறது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்.

அதன்படி, கர்நாடக அரசு புதிய உத்தரவை விதித்துள்ளது. அம்மாநிலத்தில் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் திரையரங்குகளில் முகக்கவசம் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 2023 புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெறும் ஹோட்டல்கள், பார்களிலும் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் எனவும்,  புத்தாண்டு கொண்டாட்டங்கள் நள்ளிரவு 1 மணி வரை மட்டுமே எனவும் கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் அறிவித்துள்ளார்.

பள்ளி, கல்லூரி, திரையரங்குகளில் முகக்கவசம் கட்டாயம்.! கர்நாடக அரசு அதிரடி உத்தரவு.!