டெல்லி :இந்தியாவின் புதிய துணை ஜனாதிபதியின் பெயர் நாளை அறிவிக்கப்படும். இந்த முறை துணை ஜனாதிபதி தேர்தலில், NDA வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கும் எதிர்க்கட்சியின் பி. சுதர்சன் ரெட்டிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. இதற்கிடையில், நாளை நடைபெற உள்ள துணை ஜனாதிபதி தேர்தலில் இருந்து விலகி இருப்பதாக இரண்டு அரசியல் கட்சிகள் அறிவித்துள்ளன.
இதற்கிடையில், நாளை நடைபெற உள்ள துணை ஜனாதிபதி தேர்தலில் இருந்து விலகி இருப்பதாக இரண்டு அரசியல் கட்சிகள் அறிவித்துள்ளன. இந்த கட்சிகளில் BRS மற்றும் பிஜு ஜனதா தளம் ஆகியவை அடங்கும். உடல்நலக் காரணங்களைக் கூறி ஜக்தீப் தன்கர் ஜூலை 21 அன்று திடீரென ராஜினாமா செய்தார்,
தற்போதைய துணை குடியரசு தலைவர் ஜக்தீப் தன்கர் ஜூலை 21 அன்று உடல்நல காரணங்களால் ராஜினாமா செய்ததால் இந்த தேர்தல் நடைபெறுகிறது. இந்திய அரசியலமைப்பின் 64 மற்றும் 68வது பிரிவுகளின்படி, நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் உறுப்பினர்களைக் கொண்ட தேர்தல் கல்லூரி மூலம் தேர்தல் நடைபெறுகிறது.
மாநிலங்களவையில் 4 எம்.பி.க்களை BRS கட்சி வைத்துள்ளது. “NOTA இருந்திருந்தால் அதற்கு வாக்களித்திருப்போம், அது இல்லாததால் புறக்கணிக்கிறோம்” என கே.டி.ராமாராவ் பேட்டி அளித்துள்ளார்.
