ஆளுநர் மற்றும் முதலமைச்சர் இடையேயான மோதல் புதுச்சேரி அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.புதுச்சேரியில் அம்மாநில முதல்வர் நாராயணசாமி மற்றும் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி இடையே அதிகாரப்போர் நடைபெற்று வருகிறது.நாளைடைவில் இருவருக்கும்மிடையே மோதல் போக்கு அதிகரித்து வருகிறது.
unknown nodeஇந்நிலையில் நேற்று மீண்டும் ஒரு பரபரப்பு தகவலை அம்மாநில முதல்வர் நாராயணசாமி கூறினார்.அவர் கூறுகையில், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் அலுவலகம் ஊழலுக்கு உடந்தையாக உள்ளது.அதேபோல் ஆளுநர் அலுவலகம் சமூக பொறுப்புணர்வு நிதியை முறைகேடாக செலவு செய்துள்ளது.அதாவது 85 லட்சம் நிதி முறைகேடு என்று பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்தார்.
unknown nodeஇதன்பின்னர் அம்மாநில முதல்வர் நாராயணசாமி கருத்துக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மறுப்பு தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கூறுகையில், புதுச்சேரி ஆளுநர் அலுவலகத்தில் இருந்து எந்த பணப்பரிமாற்றமும் செய்யப்படுவதில்லை என்று விளக்கம் அளித்தார்.துணைநிலை ஆளுநர் மீதான முதலமைச்சரின் குற்றச்சாட்டும், அதற்கு ஆளுநரின் பதிலடியும், புதுச்சேரி அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பைஏற்படுத்தி உள்ளது.