புதுச்சேரி மாநிலத்தில் மின் விநியோக உரிமையை தனியாரிடம் ஒப்படைக்க மாட்டோம் -புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி நிதி நெருக்கடியை சமாளிக்க சில பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. அதில் மின்சாரத்துறையும் தனியாரிடம் ஒப்படைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதுச்சேரியில் தற்போது ஜூன் 1 முதல் புதிய மின்கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், அம்மாநிலத்தில் மின் விநியோகம் தனியாரிடம் கொடுக்கப்படுமா என கேள்வி எழுந்தது. இந்நிலையில், புதுச்சேரி மாநிலத்தில் மின் விநியோக உரிமையை தனியாரிடம் ஒப்படைக்க மாட்டோம் […]
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பிறந்த நாளை முன்னிட்டு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தங்கத்தேர் இழுத்துள்ளார். ராகுல் காந்தி இன்று தனது 49 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவரது பிறந்த நாளை முன்னிட்டு நாடு முழுவதும் அவரது தொண்டர்கள் பல்வேறு ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.அதன் ஒரு பகுதியாக, புதுச்சேரியில் அம்மாநில முதல்வர் நாராயணசாமி அவர்கள் புகழ்பெற்ற மணக்குள விநாயகர் கோவிலில் தங்கத்தேர் இழுத்து ராகுல் காந்தி பிறந்த நாளை கொண்டாடியுள்ளார்.
மக்களுக்கு எதிராக மத்திய அரசு செயல்படுத்த துடிக்கும் நீட் மற்றும் ஹைட்ரோகார்பன் போன்ற திட்டங்களை எப்பொழுதும் நாங்கள் ஒன்றாக இணைந்து தொடர்ந்து கடுமையாக எதிர்ப்போம் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களை சந்தித்து பேசிய பின் இதனை அவர் தெரிவித்துள்ளார். மேலும், அமித்ஷாவிடம் நாட்டில் உள்ள பல முக்கிய பிரச்சனைகள் குறித்து இந்த சந்திப்பில் விவாதித்ததாகவும் புதுவை முதல்வர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
ஆளுநர் மற்றும் முதலமைச்சர் இடையேயான மோதல் புதுச்சேரி அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுச்சேரியில் அம்மாநில முதல்வர் நாராயணசாமி மற்றும் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி இடையே அதிகாரப்போர் நடைபெற்று வருகிறது.நாளைடைவில் இருவருக்கும்மிடையே மோதல் போக்கு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நேற்று மீண்டும் ஒரு பரபரப்பு தகவலை அம்மாநில முதல்வர் நாராயணசாமி கூறினார்.அவர் கூறுகையில், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் அலுவலகம் ஊழலுக்கு உடந்தையாக உள்ளது.அதேபோல் ஆளுநர் அலுவலகம் சமூக பொறுப்புணர்வு நிதியை முறைகேடாக செலவு செய்துள்ளது.அதாவது 85 லட்சம் […]
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் அலுவலகம் ஊழலுக்கு உடந்தையாக உள்ளது என்று அம்மாநில முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் அம்மாநில முதல்வர் நாராயணசாமி மற்றும் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி இடையே அதிகாரப்போர் நடைபெற்று வருகிறது.நாளைடைவில் இருவருக்கும்மிடையே மோதல் போக்கு அதிகரித்து வருகிறது. அதேபோல் புதுச்சேரியில் அரசு சார்பில் கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி அரசு விழா நடத்தப்பட்டது.அப்போது அந்த விழாவில் அமைச்சர்கள் , அரசு அதிகாரிகள் ,புதுச்சேரியின் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஆகியோர் பங்கேற்றார்.அப்போது விழா மேடையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் பேசியபோது இந்த அரசு குறித்து […]