டெல்லி :இறந்தவர்கள் என வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்களோடு மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தேநீர் விருந்து வைத்துள்ளார். பீகாரில் “இறந்த வாக்காளர்களை” சந்தித்ததாகக் கூறும் ஒரு வீடியோவை ராகுல் காந்தி பகிர்ந்து கொண்டார்.
அந்த பதிவில், “வாழ்க்கையில் பல சுவாரஸ்யமான அனுபவங்களை நான் பெற்றிருக்கிறேன், ஆனால் ‘இறந்தவர்களுடன்’ தேநீர் அருந்தும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லை. இந்த தனித்துவமான அனுபவத்திற்கு தேர்தல் ஆணையத்திற்கு நன்றி!” என்று குறிப்பிட்டிருந்தார்.
இது, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் மற்றும் வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என்பது தொடர்பாக எதிர்க்கட்சிகளின் தொடர் விமர்சனங்களை மீண்டும் முன்னிலைப்படுத்தியுள்ளது.
unknown nodeகடந்த ஆகஸ்ட் 7 ஆம் தேதி, வாக்காளர் பட்டியலில் போலி நபர்கள் சேர்க்கப்படுவதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். ஆனால், தேர்தல் ஆணையம், ராகுலின் குற்றச்சாட்டுகளை மறுத்து, அவர் ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும் அல்லது மன்னிப்பு கேட்க வேண்டும் என எச்சரித்துள்ளது.
இந்த விவகாரம், பீகார், மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் முறைகேடுகள் குறித்து ராகுல் காந்தி தொடர்ந்து எழுப்பி வரும் குற்றச்சாட்டுகளின் ஒரு பகுதியாக உள்ளது
