ஈரோடு : காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. அத்தொகுதிக்கு இன்று தேர்தல் வாக்குப்பதிவு தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி வரும் பிப்ரவரி 5ஆம் தேதி அங்கு தேர்தல் நடைபெற உள்ளது. ஜனவரி 10ஆம் தேதி முதல் ஜனவரி 17ஆம் தேதி வரையில் தேர்தலில் போட்டியிடவேட்பாளர்களிடம் இருந்து வேட்புமனுக்கள் பெறப்படும் என்றும், ஜனவரி 18இல் வேட்புமனு பரிசீலனை நடைபெறும் என்றும், ஜனவரி 20 ஆம் தேதி வேட்புமனு வாபஸ் பெற […]
டெல்லி : தலைநகர் டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மியின் ஆட்சி காலம் அடுத்த மாதம் நிறைவடைய உள்ள நிலையில், டெல்லியில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் தேதிகள் இன்று அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, தற்போது இந்திய தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்தார். டெல்லி மாநில 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் பிப்ரவரி 5ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. தேர்தல் வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 8ஆம் தேதி […]
டெல்லி : கேரளா, பஞ்சாப், உத்தரப்பிரதேசம் ஆகிய 3 மாநிலங்களில் நடைபெறவிருந்த 14 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் இரண்டு மக்களவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இந்திய தேர்தல் ஆணையத்தால் முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், வாக்குப்பதிவு நவம்பர் 13 ஆம் தேதிக்கு பதிலாக நவம்பர் 20 ஆம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் மாற்றி அறிவித்துள்ளது. முன்னதாக, வாக்குப்பதிவு நவம்பர் 13ம் தேதி அன்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கலாச்சாரம் மற்றும் சமூக பண்டிகைகள் குறிப்பிட்ட தேதிகளில் […]
மும்பை : 10 ஆண்டுகளுக்கு பிறகான ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற தேர்தல் மற்றும் ஹரியானா சட்டமன்ற தேர்தலை அடுத்து இந்தாண்டு இறுதிக்குள் மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற தேர்தலும் நடைபெற உள்ளது. அதற்கான முன் அறிவிப்பை இந்திய தலைமை தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார். டெல்லியில், தலைமை தேர்தல் அதிகாரி ராஜிவ் குமார் இன்று செய்தியாளர்களிடம் மகாராஷ்டிரா தேர்தல் குறித்து கூறுகையில்,”மகாராஷ்டிராவில் மொத்தம் 288 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. அதில், 25 எஸ்.சி தொகுதிகள் மற்றும் 29 எஸ்.டி தொகுதிகள் […]
Election2024: தேர்தல் நடத்தை விதிமீறல் புகாரில் பிரதமர் மோடி மற்றும் ராகுல் காந்தி பதிலளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. நாடாளுமன்ற மக்களவை தேர்தல் இரண்டாம் கட்டமாக நாளை 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவைத் தொகுதிகளில் நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கான பிரச்சாரம் கடந்த சில நாட்களாக அனல் பறக்க நடைபெற்று வந்த நிலையில், நேற்றுடன் நிறைவு பெற்றது. அப்போது பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இதனிடையே தேர்தல் பிரச்சாரத்தின்போது பிரதமர் மோடி […]
Election2024 : தமிழகத்தில் 181 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என தமிழக தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகள் புதுச்சேரி தொகுதி என மொத்தம் 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வாக்குப்பதிவு ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. ஏற்கனவே, தபால் வாக்குப்பதிவு பணிகள் தொடங்கி திருச்சி, ஈரோடு, கோவை என பல்வேறு பகுதிகளில் தபால் வாக்குகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. வருகிற ஏப்ரல் 18ஆம் […]
Election2024 : கரும்பு விவசாயி சின்னம் எப்படி சுயேட்சை வேட்பாளருக்கு ஒதுக்கப்பட்டது என தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடுகிறார். அவருக்கு போட்டியாக அதே பன்னீர்செல்வம் எனும் பெயர் கொண்ட 5 பேர் சுயேட்சையாக போட்டியிடுகின்றனர். இதில் அனைவரது வேட்புமனுவும் ஏற்கப்பட்டுவிட்டது. இந்நிலையில் அண்மையில் அவர்களுக்கு சின்னம் ஒதுக்கப்பட்டது. இதில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு பலாப்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டது. உசிலம்பட்டியை சேர்ந்த ஓ.பன்னீர்செல்வம் என்பவருக்கு கரும்பு […]
Election2024 : தேர்தலில் தங்களுக்கு பானை சின்னம் ஒதுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் விசிக மேல்முறையீடு செய்துள்ளது. தமிழகத்தில் வரும் மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் திருமாவளவனின் விசிக கட்சி 2 தொகுதிகளில் போட்டியிடுகிறது. கடந்த 2019ஆம் ஆண்டு தேர்தலை போலவே சிதம்பரம் மற்றும் விழுப்புரத்தில் விசிக போட்டியிடுகிறது. கடந்த முறை விழுப்புரத்தில் ரவிக்குமார் உதயசூரியன் (திமுக) சின்னத்திலும், சிதம்பரத்தில் திருமாவளவன் விசிக சின்னமான பானை சின்னத்திலும் போட்டியிட்டனர். இந்த முறை இரண்டு தொகுதிகளிலும் பானை […]
DMK Alliance : மதிமுக, விசிக கட்சிகளுக்கு இன்னும் இந்திய தேர்தல் ஆணையம் சின்னம் ஒதுக்காமல் இருந்து வருகிறது. தமிழகத்தில் மக்களவை தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் வேட்புமனு தாக்கல் நிகழ்வு இன்றுடன் நிறைவடைய உள்ளது. இதனால் பிரதான அரசியல் கட்சிகள் தவிர மற்ற சிறு சிறு கட்சிகள் தங்களுக்கான தேர்தல் சின்னங்களை கேட்டு தேர்தல் ஆணையத்தை முறையிட்டு வருகின்றனர். மதிமுக – பம்பரம் : திமுக கூட்டணியில் உள்ள மதிமுக […]
ADMK : எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக கட்சியை நீதிமன்றங்கள் , தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததன் பெயரில் இரட்டை இலை சின்னம் என்பது அவர்களிடத்தில் உள்ளது. இதனை எதிர்த்து, தற்போது ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் நீதிமன்றங்கள், தேர்தல் ஆணையம் என தொடர்ந்து மனு அளித்து வருகின்றனர். Read More – தேர்தல் பத்திரங்கள் : உச்சநீதிமன்றம் கிடுக்குப்பிடி… சீரியல் நம்பர்களுடன் தாக்கல் செய்த SBI.! ஓபிஎஸ் தரப்பு முன்னதாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் அளித்த மனுவில், ஓபிஎஸ் தரப்பினர் அதிமுக […]
Electoral Bonds : கடந்த மாதம் தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் நிதி வாங்கும் நடைமுறையை உச்சநீதிமன்றம் தடை செய்தது. மேலும், தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் நிதி வாங்கிய விவரங்கள், பல்வேறு நிறுவனங்கள், தனி நபர்கள் ஸ்டேட் பாங்க் மூலம் தேர்தல் பத்திரங்களை வாங்கிய விவரங்கள் ஆகியவற்றை வெளியிட உத்தரவிட்டது. Read More – இந்தியாவில் ஜனநாயகம் இல்லை… ரயில் டிக்கெட் கூட எடுக்க முடியவில்லை… ராகுல் காட்டம்.! இந்த உத்தரவின்படி, முதலில் […]
Election Commission : அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான அட்டவணையை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் நேற்று முன்தினம் டெல்லியில் செய்தியாளர் சந்திப்பில் வெளியிட்டிருந்தார். அதில், ஏப்ரல் 19ம் தேதி முதல் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறும் என்றும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது எனவும் தெரிவிக்கப்பட்டது. Read More – மீண்டும் ஆட்டத்தை ஆரம்பிக்கும் தமிழிசை.! ஆளுநர் பதவிகளுக்கு குட்’பை’.! இந்த நிலையில், குஜராத், உத்தரபிரதேசம், பீகார், […]
மக்களவை தேர்தல் நடைபெற இன்னும் 2 மாதங்களுக்குள்ளான நாட்கள் மட்டுமே உள்ளன. இதனால் தேர்தல் வேளைகளில் அரசியல் கட்சிகள் வெகு தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பாஜக, காங்கிரஸ் போன்ற தேசிய கட்சிகள் முதல் மாநில உள்ளூர் கட்சிகள் வரையில் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர். இன்னும் தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்துவது குறித்து பல்வேறுகட்ட ஆலோசனைகளை மாநில வாரியாக மேற்கொண்டு வரும் சூழலில் அவ்வப்போது போலியான தேர்தல் தேதிகள் வருவது வாடிக்கையாக இருந்து வருகிறது. இதனை அவ்வப்போது தேர்தல் […]
நடிகர்கள் கட்சி தொடங்குவதில் எனக்கு விருப்பமில்லை என்று தனது கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்த பின் நடிகர் மன்சூர் அலிகான் பேட்டியளித்துள்ளார். இந்திய ஜனநாயக புலிகள் என்ற புதிய கட்சியை தேர்தல் ஆணையத்திடம் பதிவு செய்த அவர், நாட்டில் உள்ள மதவாத, ஊழல் அரசியலை மாற்றவே கட்சி துவங்கியுள்ளேன். என்னை நான் நடிகராகவே உணரவில்லை. நடிக்க வருவதற்கு முன்பே பல போராட்டங்களில் பங்கேற்றுள்ளேன் என்று தனது கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்த பின் நடிகர் […]
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பு இம்மாதம் இறுதி அல்லது அடுத்த மாதம் தொடக்கத்தில் அறிவித்து, ஏப்ரல், மே மாதத்தில் மக்களவை தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மக்களவை தேர்தலுக்கான பணியில் தலைமை தேர்தல் ஆணையம், மாநில தேர்தல் ஆணையமும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அதன்படி, மக்களவை தேர்தலில் வாக்காளர்களுக்கு விரலில் வைக்கும் அழியாத “மை” தயாரிக்கும் பணி இன்று தொடங்கியுள்ளது. மறுபக்கம், கூட்டணி, தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை தயாரிப்பு மற்றும் […]
குஜராத் சட்டப்பேரவை தேர்தலுக்கான அட்டவணையை வெளியிட்டார் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார். குஜராத் சட்டசபையின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 18-ஆம் தேதியுடன் நிறைவடைவதை முன்னிட்டு, குஜராத்தில் உள்ள 182 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு பொது தேர்தல் நடைபெற உள்ளது. சமீபத்தில் இமாச்சல பிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், குஜராத் சட்டப்பேரவை தேர்தல் தேதியை இன்று பகல் 12 மணிக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ளார் என அறிவிக்கப்பட்டிருந்தது. பிரதமர் […]
குஜராத் மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதியை இன்று அறிவிக்கிறார் தலைமை தேர்தல் ஆணையர். குஜராத் சட்டப்பேரவை தேர்தல் தேதியை இன்று பகல் 12 மணிக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ளது. டெல்லியில் நடக்கும் செய்தியாளர் சந்திப்பில் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் குஜராத் சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதியை அறிவிக்கிறார். சமீபத்தில் இமாச்சல பிரதேச சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று குஜராத்துக்கு அறிவிக்கப்படுகிறது. குஜராத் சட்டசபையின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் […]
17 வயதானவர்கள் வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு. நாட்டில் 17 வயது நிரம்பிய இளைஞர்கள் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர்களைப் பதிவு செய்வதற்கு முன்கூட்டியே விண்ணப்பிக்கலாம் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இளைஞர்கள் வாக்காளர்களாக பதிவு செய்துகொள்ள 18 வயதாகும் வரை காத்திருக்க தேவையில்லை என்று தெரிவித்துள்ளது. எனவே, 17 வயது நிரப்பியவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க மாநில தேர்தல் ஆணையம் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்திய […]
இந்தியாவின் 15 வது குடியரசு தலைவராக ராம்நாத் கோவிந்த் அவர்கள் கடந்த 2017 ஆம் ஆண்டு பதவியேற்ற நிலையில்,அவரின் பதவிக்காலம் வருகின்ற ஜூலை 24 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.இதனால்,அடுத்த குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 18 ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்நிலையில்,குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று முதல் தொடங்குகிறது என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.மேலும்,ஜூன் 29-ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய […]
புதுச்சேரி உட்பட 4 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது கடந்த பிப்ரவரி 26-ஆம் தேதி தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டது.இவ்வாறு அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளது. இதனால் அரசியல் தலைவர்களின் புகைப்படங்கள், பேனர்கள்,கட்சி கொடிகள் ஆகிவற்றை பயன்படுத்தக்கூடாது என்பது வழக்கமான நடைமுறை.இந்நிலையில் மத்திய அரசின் திட்டங்களை விளம்பரபடுத்தும் நோக்கில் பிரதமர் மோடியின் புகைப்படம் பெட்ரோல் பங்குகளில் வைக்கப்பட்டு உள்ளது. தேர்தல் தேதி அறைவிக்கப்பட்டுவிட்டதால் இவ்வாறு வைத்திருப்பது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறுவதாகும் என்று […]