அசாம், மணிப்பூருக்கு மூன்று நாள் சுற்றுப்பயணம் – அமித்ஷா.!

அசாமில் அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பின்னர், உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை மணிப்பூருக்கு செல்கிறார்.
மத்திய உள்துறை அமைச்சரும், பாஜகவின் முக்கிய தலைவரில் ஒருவருமான உள்துறை அமைச்சர் அமித்ஷா சமீபத்தில் பல்வேறு மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், அசாம் மற்றும் மணிப்பூருக்கு மூன்று சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அசாம், மணிப்பூரில் மூன்று நாள் பயணம் மேற்கொள்ளும் அமித்ஷா பல்வேறு நலத் திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.
அசாமில் நடனக் கலைஞர்கள் நடனமிட்டு அவருக்கு பிரமாண்ட வரவேற்பை அளித்தனர். அமித்ஷா செல்லும் வழியில் 10 ஆயிரம் தீபங்கள் ஏற்றப்பட்டிருந்தது. அசாம் மக்களின் இந்த மனமார்ந்த வரவேற்புக்கு அமித்ஷா டுவிட்டரில் நன்றியை தெரிவித்து உள்ளார். அசாமில் அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பின்னர், அமித்ஷா நாளை மணிப்பூருக்கு செல்கிறார். இம்பாலில் இருந்து புறப்படுவதற்கு முன்பு அவர் சுராச்சந்த்பூர் மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டுகிறார் மற்றும் சிவில் சமூகத் தலைவர்களைச் சந்திக்கவுள்ளார்.
Reached Guwahati!
I wholeheartedly thank people of Assam for such warm welcome. pic.twitter.com/7E7oQMdE2k
— Amit Shah (@AmitShah) December 25, 2020
லேட்டஸ்ட் செய்திகள்
விண்டேஜ் டஜ்!! 5 பவுண்டரிகள், 1 சிக்சர் விளாசிய சச்சின்… இந்திய மாஸ்டர்ஸ் அணி அபார வெற்றி!
February 26, 2025
விஜய்யின் வீட்டு வாசலில் காலணி வீசிய நபர்… தவெக ஆண்டு விழாவுக்கு மத்தியில் பரபரப்பு.!
February 26, 2025