அசாம் : கடந்த வருடம் ஒடிசாவில் ஏற்பட்ட ரயில் விபத்தில் 288 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து எங்கு ரயில் விபத்து ஏற்பட்டது ஏன செய்திகள் வெளிவந்தாலும் நம் மனதைப் பதற வைத்து வருகிறது. அந்த ரயில் விபத்தைத் தொடர்ந்து சில இடங்களில் அவ்வப்போது, ரயில் விபத்து ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில், அசாமில் இன்று ரயில் பெட்டிகள் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளது. அசாமில் அகர்தாலா விரைவு ரயில் திபலாங் பகுதியில் தடம்புரண்டு விபத்து […]
அசாம் : அரசு ஊழியர்கள் தங்கள் பெற்றோர் மற்றும் வாழ்க்கைத் துணைவரின் பெற்றோருடன் நேரத்தை செலவழிக்க ஏதுவாக, 2 நாட்கள் சிறப்பு விடுப்பு வழங்கி அசாம் மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா உத்தரவு பிறப்பித்துள்ளார். சத் பூஜை (நவம்பர் 7) விடுமுறை நாளை தொடர்ந்து, நவம்பர் 6, 8 ஆகிய தேதிகளில் சிறப்பு விடுப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த விடுப்பு “வயதான பெற்றோர் அல்லது மாமியார்களுடன் நேரத்தை செலவிடுவதற்கும் அவர்களை கௌரவப்படுத்தவும், மதிக்கவும், பராமரிக்கவும் மட்டுமே பயன்படுத்த வேண்டும், […]
அசாம் : மோரிகான் மாவட்டத்தில் வேகமாக வந்த ரயிலில் அடிபட்டு காட்டு யானை ஒன்று பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற பெண் யானை மீது அந்த வழியாக வந்த கஞ்சன்ஜங்கா ரயில் வேகமாக மோதியது. இதில் பலத்த காயமடைந்த யானை, நடக்க முடியாமல் தடுமாறி தண்டவாளத்திலேயே விழுந்து இறந்தது. மோரிகானின் தெகெரியா பகுதியில் காட்டு யானை ரயில் பாதையை கடக்கும் போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. காட்டு யானை ரயிலில் […]
அசாம் : புகைப்படங்கள் மற்றும் வீடியோ எடுப்பவர்கள் அடிக்கடி நம்மளால் நினைத்து பார்க்க முடியாத வகையில், வனவிலங்குகளை வீடியோ எடுத்து அந்த வீடியோவை, தங்களுடைய சமூக வலைத்தளங்களில் வெளியீட்டு நம்மளை பிரமிக்க வைத்து விடுவார்கள். அப்படி தான், பிரம்மபுத்திரா நதியியில் கூட்டமாக யானைகள் ஆற்றை கடந்து செல்வதை ட்ரோன் கேமரா மூலம் புகைப்படக் கலைஞர் சச்சின் பரலி வீடியோ எடுத்து வெளியீட்டு இருக்கிறார். அஸ்ஸாமில் உள்ள ஒரு முக்கிய நதி துறைமுகமான நிமதி காட்டில் இருக்கும் பிரம்மபுத்திராவின் […]
Assam: அசாமில் அரசியல் தலைவர் ஒருவர் 500 ரூபாய் நோட்டுகளில் தூங்குவது போன்ற புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அசாமில் பாஜக கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த அரசியல் தலைவர் ரூபாய் நோட்டுகள் குவியலில் தூங்கிக் கொண்டிருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பாஜக கூட்டணிக் கட்சியான ஐக்கிய மக்கள் கட்சி லிபரலின் (UPPL) முன்னாள் தலைவர் பெஞ்சமின் பாசுமாதாரி என்பவர் உடல்குரி மாவட்டத்தில் உள்ள […]
CAA Act : ஆளும் பாஜக அரசால், 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் இந்திய குடியுரிமை திருத்த சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டமானது கொரோனா உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 4 வருடங்கள் கழித்து நேற்று நாட்டில் அமல்படுத்தப்படுவதாக அதிகார்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. Read More – அமலுக்கு வந்த குடியுரிமை சட்டம்.! முதல்வர் ஸ்டாலின் முதல் தவெக தலைவர் விஜய் வரை கடும் எதிர்ப்பு.! ஏற்கனவே, 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் இந்த சட்டம் அமல்படுத்தப்பட்ட போதே, நாடு முழுவதும் பல்வேறு […]
நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான பணியில் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகள் மற்றும் அனைத்து மாநில கட்சிகளும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அதன்படி, மக்களவை தேர்தலுக்கான அறிவிப்பு இம்மாதம் இறுதி அல்லது மார்ச் மாதம் வெளியாகும் என்றும் ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் தேர்தல் நடைபெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தேர்தலுக்கான பணிகள் மும்மரமாக நடந்து வரும் நிலையில், பிரதமர் மோடி ஒடிசா – அசாம் மாநிலங்களுக்கு இன்றும், நாளையும் பயணம் மேற்கொள்கிறார். அதன்படி, இன்று ஒடிசா […]
காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி முன்னதாக கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையில் பாரத ஒற்றுமை யாத்திரை சென்றதை அடுத்து தற்போது கிழக்கில் இருந்து மேற்காக தனது அடுத்தகட்ட நடை பயணத்தை தொடங்கியுள்ளார். மணிப்பூரில் கடந்த மாதம் 14ஆம் தேதி தொடங்கிய இந்த யாத்திரை தற்போது அசாம் மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று அசாம் தலைநகர் கவுகாத்தி நகருக்குள் செல்ல முயன்ற ராகுல் காந்திக்கு காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, காங்கிரஸ் தொண்டர்கள் சிங்கங்கள். […]
நாடாளுமன்றத் தேர்தல்ளுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே உள்ள நிலையில், காங்கிரசை மேலும் பலப்படுத்த இந்திய ஒற்றுமை நடைப்பயணமான பாரத் ஜோடோ நியாய யாத்திரை என்ற பெயரில் ராகுல் காந்தி 2வது கட்ட யாத்திரை மேற்கொண்டுள்ளார். அதன்படி, தற்போது அசாம் மாநிலத்தில் ராகுல் காந்தி தனது பாரத் ஜோடோ நியாய யாத்திரையை கடந்த சில நாட்களாக மேற்கொண்டு வருகிறார். ஆனால், அசாமில் யாத்திரை மேற்கொண்டு வரும் ராகுலுக்கு அம்மாநில முதல்வர் மூலம் கடுமையான இடையூறுகள் கொடுக்கப்படுவதாக காங்கிரஸ் […]
காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி முன்னெடுத்த இந்திய ஒற்றுமை நடைபயணம் யாத்திரை வெற்றியை தொடர்ந்து, தற்போது இரண்டாவது கட்டமாக பாரத் ஜோடோ நியாய யாத்திரை என்ற பெயரில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். தற்போது அசாம் மாநிலத்தில் ராகுல் காந்தி பாரத ஒற்றுமை நியாய யாத்திரை மேற்கொண்டு வருகிறார். அசாமில் யாத்திரை மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி இன்று காலை நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 127வது பிறந்தநாளையொட்டி, அவரது […]
அசாம் மாநிலத்தில் அமைந்துள்ள படாதிரவாதான் கோவிலுக்குள் நுழைய ராகுல் காந்திக்கு தடை விதிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி பாரத் ஜோடோ நியாய் யாத்திரையை இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் தற்போது அசாம் மாநிலத்தில் யாத்திரையை மேற்கொண்டு வருகிறார். அசாமில் ராகுல் யாத்திரைக்கு ஆளும் பாஜக அரசு பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்துவதாக காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து குற்றம் சாட்டுகின்றனர். இந்நிலையில் இன்று காலை அசாம் மாநிலம் போர்டுவா மாவட்டத்தில் உள்ள […]
அசாமின் கோலாகாட் மாவட்டத்தில் இன்று (ஜனவரி 3)-ஆம் தேதி பயணிகளை ஏற்றி சென்ற பேருந்தும் லாரியும் மோதியதில் 5 பெண்கள் மற்றும் ஒரு மைனர் பையன் உட்பட குறைந்தது 12 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று அதிகாலை 5 மணி அளவில் பயணிகளை ஏற்று செல்லும் பேருந்து 45 பேருடன் கோலாகாட்டில் இருந்து டின்சுகியா நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த பகுதியில் எதிர் திசையில் இருந்து நிலக்கரி ஏற்றிச் செல்லும் லாரி […]
காசிரங்கா பூங்காவிற்கு இரவு நேரத்தில் பயணம் செய்த விவகாரத்தில் எந்த விதி மீறலும் இல்லை என அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வாஸ் சர்மா விளக்கமளித்துள்ளார். அசாமில் பிரம்மபுத்திரா நதிக்கரையோரம், காசிரங்கா வனவிலங்கு பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்காவை அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வாஸ் சர்மா அண்மையில் திறந்து வைத்தார். அப்போது, இரவு, சத்குரு ஜக்கி வாசுதேவ் , முதல்வர் ஹிமந்த பிஸ்வாஸ் சர்மா, சுற்றுலாத்துறை அமைச்சர் ஜெயந்த மல்லா பருவா ஆகியோர் ஒரே காரில் இரவு பூங்காவிற்குள் […]
நெடுஞ்சாலையில் சைக்கிள் ஓட்டிச் சென்ற நபரை சிறுத்தைப்புலி தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அசாம் மாநிலம் காசிரங்கா தேசிய பூங்கா அருகே உள்ள NH 37 நெடுஞ்சாலையில் சைக்கிள் ஓட்டிச் சென்ற நபரை சிறுத்தைப்புலி தாக்கியது. இந்த வீடியோவை சமீபத்தில் ஐஎஃப்எஸ் அதிகாரி சுசாந்தா நந்தா ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், நெடுஞ்சாலையின் ஓரத்தில் ஒரு நபர் சைக்கிளில் செல்கிறார், திடீரென்று ஒரு சிறுத்தை காட்டில் இருந்து குதித்து அவரை தாக்கியது. அந்த நபர் […]
அசாமில் கனமழை காரணமாக 30,000 முதல் 40,000 வீடுகள் வரையில் சேதமடைந்துள்ளது. இந்தியாவில் தற்போது பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. கோவா, மும்பை உள்ளிட்ட பகுதிகளுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. அப்படி தான் அசாம் மாநிலத்திலும் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் அதிகரித்து வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் பல்வேறு வீடுகள் சேதமடைந்தன. இதுவரை 30,000 முதல் 40,000 வீடுகள் வரையில் சேதமடைந்ததாகவும், இதனால், இந்திய […]
அசாமில் வெள்ளப்பெருக்கு காரணமாக அனைத்து பள்ளிகளுக்கும் ஜூலை 25 வரை கோடை விடுமுறை அறிவிப்பு. அசாம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு ஏற்பட்டு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அசாமில் பிரம்மபுத்திரா மற்றும் பராக் ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை அடுத்து, கிட்டத்தட்ட 32 மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கி, பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. இந்த வெள்ளப்பெருக்கில் 80க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், 55 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தகவல் […]
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் அசாம் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. மேலும் அசாமில் கடந்த 48 மணிநேரத்தில் கடுமையான புயலுடன் கூடிய கனமழை பெய்துள்ளது. இந்த கனமழை காரணமாக 8 பேர் உயிரிழந்துள்ள நிலையில், கிட்டத்தட்ட 592 கிராமத்திலுள்ள 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
அசாம் தேயிலை 1 கிலோ 99,999 ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது. அசாம் தேயிலை உலக அளவில் புகழ் பெற்றது. இந்த தேயிலைக்கு எப்போதுமே தனி மதிப்பு இருக்கிறது. வருடம் தோறும் கவுகாத்தி தேயிலை ஏல மையத்தில் ஏல வாங்குவோர் சங்கத்தின் செயலாளர்,தினேஷ் பிஹானி தெரிவித்ததாவது, “கடந்த 2 வருடங்களில் கவுகாத்தி தேயிலை ஏல மையத்தில் ரூ.7500 கோடிக்கு மேல் தேயிலை விற்பனையாகியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் […]
அசாம் முழுவதும் நாளை இரவு 11.30 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் வேகமாக வரும் ஓமைக்ரான்( Omicron) தொற்றை கருத்தில் கொண்டு, பல மாநிலங்கள் இரவு ஊரடங்கு உத்தரவை விதிக்க முடிவு செய்துள்ளன. இப்போது அஸ்ஸாமும் இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. மாநில சுகாதார அமைச்சர் கேசவ் மஹந்த் ஒரு புதிய நிலையான செயல்பாட்டு நடைமுறையை அறிவித்தார். இதில் இரவு 11:30 முதல் காலை […]
மாநிலத்திலுள்ள இளைஞர்கள் விவசாயத்திற்கு உங்களை அர்ப்பணிக்க வேண்டும் என அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார். அசாம் மாநிலத்தின் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா அவர்கள் விவசாயம் குறித்து தனது மாநிலத்தில் உள்ள மக்களுக்கு நேற்று தோல்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றியுள்ளார். அப்போது பேசிய அவர், அசாமின் விளைநிலங்கள் சட்ட விரோத ஊடுருவல்காரர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும், மாநிலத்தில் உள்ள இளைஞர்கள் விவசாய வயல்களில் தங்களை அர்ப்பணிக்குமாறும் வலியுறுத்தியுள்ளார். மேலும் அரசு வேலை மற்றும் எளிதான வேலையில் நிற்காமல் […]