#DelhiMCDPolls: ஆம் ஆத்மி கட்சி 89 இடங்களில் வெற்றி!

Default Image

15 ஆண்டுகளாக டெல்லி மாநகராட்சி பாஜக வசம் இருந்த நிலையில், இந்தமுறை ஆம் ஆத்மி வசம்.

டெல்லி மாநகராட்சியில் உள்ளாட்சி அமைப்புக்கான தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 89 இடங்களில் வெற்றி பெற்று, 47 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. இதுபோன்று, பாஜக 69 இடங்களில் வெற்றி பெற்று, 32 இடங்களில் முன்னிலையில் உள்ளது.

மேலும், காங்கிரஸ் 4-ல் வெற்றி, 5-ல் முன்னிலை மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் 1-ல் வெற்றி பெற்று 2-ல் முன்னிலை பெற்றுள்ளனர். டெல்லி மாநகராட்சியில் மொத்தமுள்ள 250 வார்டுகளுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

இதில், ஆளும் ஆம் ஆத்மி கட்சி 89 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இன்னும் வாக்குகள் எண்ணப்பட்டு வருவதால் முடிவு விரைவில் வெளியாகும். 15 ஆண்டுகளாக டெல்லி மாநகராட்சி பாஜக வசம் இருந்த நிலையில், இந்தமுறை ஆம் ஆத்மி வசம் வரவுள்ளது. இதனால் டெல்லியில் உள்ள கட்சி அலுவலகத்தில் ஆம் ஆத்மி கட்சியினர் இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்