Tag: #AAP

டெல்லியின் புதிய முதலமைச்சர் யார்? அடுத்தடுத்து வெளியாகும் தகவல்கள்…

டெல்லி : கடந்த 2013 (48 நாட்கள்), 2015, 2020 முதல் 2025 வரை டெல்லி மாநிலத்தில் ஆட்சியில் இருந்த ஆம் ஆத்மி கட்சியை வீழ்த்தி 2025 சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி வாகை சூடியுள்ளது. 27 ஆண்டுகளுக்கு பிறகு பாஜக டெல்லியில் ஆட்சி அமைக்க உள்ளது. கடந்த பிப்ரவரி 8ஆம் தேதியே தேர்தல் முடிவுகள் வெளியானாலும் இன்னும் முதலமைச்சர் யார் என்ற அறிவிப்பை பாஜக தலைமை வெளியிடவில்லை. அதற்கான ஆலோசனை கூட்டம் டெல்லியில் உள்ள பிரதமர் […]

#AAP 5 Min Read
Next Delhi CM List

டெல்லி அரசியலில் அடுத்த திருப்பம்! ராஜினாமா செய்தார் முதலமைச்சர் அதிஷி! 

டெல்லி : 70 தொகுதிகள் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு கடந்த பிப்ரவரி 5ஆம்  தேதி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று ரிசல்ட் நேற்று (பிப்ரவரி 8) வெளியானது. 2013, 2015, 2020 என்ற 3 சட்டமன்ற தேர்தல்களிலும் வெற்றி பெற்ற ஆம் ஆத்மி இந்த முறை டெல்லியில் ஆட்சியை இழந்துள்ளது. 27 ஆண்டுகளுக்கு பிறகு டெல்லியில் பாஜக ஆட்சி அமைக்க உள்ளது. 70 தொகுதிகளில் பாஜக 48 இடங்களில் வெற்றி பெற்றது. ஆம் ஆத்மி 22 இடங்களை மட்டுமே […]

#AAP 3 Min Read
Delhi CM Atishi Resingned

Live : டெல்லி அரசியல் நிலவரம் முதல்., உள்ளூர் அரசியல் நிகழ்வுகள் வரை…

சென்னை : டெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நிறைவடைந்த நிலையில், நேற்று (பிப்ரவரி 8) வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில், மொத்தமுள்ள 70 தொகுதிகளில் பாஜக 48  தொகுதிகளை கைப்பற்றி ஆட்சியை பிடித்தது. ஆம் ஆத்மி 22 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றி ஆட்சியை இழந்தது. இதனை அடுத்து பாஜக சார்பில் யார் அடுத்த முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ளார்கள் என்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. அதே போல,  தமிழ்நாட்டில் ஈரோடு […]

#AAP 3 Min Read
Today Live 0902 2025

27 ஆண்டுகளுக்கு பிறகு இமாலய சாதனை படைத்த பாஜக! வெற்றி கொண்டாட்டத்தில் தொண்டர்கள்!

டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக  சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கப்பட்ட நிலையில், தொடங்கியதில் இருந்தே ஆளும் கட்சியான ஆம் ஆத்மிக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக பாஜக பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றிபெற்றுவிட்டது. எனவே, பாஜக வெற்றி வாகை சூடிவிட்டது என முடிவுகள் வெளியாவதற்கு முன்பே தொண்டர்கள் கொண்டாட ஆரம்பித்துவிட்டார்கள். இறுதியாக, 70 தொகுதிகளில் 44 தொகுதியில் பாஜக வெற்றிபெற்று டெல்லியை கைப்பற்றியுள்ளது. […]

#AAP 6 Min Read
BJP WIN

கெஜ்ரிவாலை வீழ்த்தியவருக்கு டெல்லி முதலமைச்சர் பதவி? பாஜகவின் திட்டம் என்ன?

டெல்லி : டெல்லி சட்டப்பேரைவை தேர்தலில் பாஜக பெரும்பான்மை தொகுதிகளில் முன்னிலை, வெற்றி என பதிவு செய்து வருகிறது. இதனால், 27 ஆண்டுகளுக்கு பிறகு டெல்லி மாநிலத்தில் பாஜக ஆட்சியை பிடிக்க உள்ளது. இப்படியான சூழலில் அங்கு யார் முதலமைச்சராக அறிவிக்கப்படுவார் என்ற கேள்வி இப்போதே எழுந்துள்ளது. தற்போது ஒரு சில செய்தி நிறுவனங்கள் புது டெல்லி தொகுதியில் ஆம் ஆத்மி தலைவரும், டெல்லி மாநில முன்னாள் முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவாலை வீழ்த்திய பாஜக வேட்பாளர் பர்வேஷ் […]

#AAP 4 Min Read
Parvesh verma - Arvind Kejriwal

அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு ஆறுதல் வெற்றி! சாதித்த டெல்லி முதலமைச்சர் அதிஷி!

டெல்லி : டெல்லியில் நடைபெற்று முடிந்த 70 சட்டப்பேரவை தேர்தலுக்கான முடிவுகள் வெளியாகி வருகின்றன. இதில் 2013 (54 நாட்கள் மட்டும்), 2015 (5 ஆண்டுகள்), 2020 (5 ஆண்டுகள்) என டெல்லியில் ஆட்சி செய்த ஆம் ஆத்மி இந்த முறை தொடர் பின்னடைவை சந்தித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி 47 தொகுதிகளில் பாஜகவும், 23 தொகுதிகளில் மட்டும் ஆம் ஆத்மியும் முன்னிலை பெற்று வருகின்றன. இதில் பல்வேறு தொகுதியில் இறுதி வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாகி […]

#AAP 4 Min Read
Arvind Kejriwal - Atishi

டெல்லி நிலவரம்., எச்சரிக்கை! I.N.D.I.A தலைவர்கள் ஈகோ-வை விட்டுவிட வேண்டும்! திருமா அட்வைஸ்! 

மதுரை : கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தல், ஈரோடு கிழக்கு மற்றும் உ.பியில் மில்கிபூர் ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் ஆகியவை நடைபெற்றன. அதற்கான முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு முன்னிலை நிலவரங்கள் வெளியாகி வருகின்றன. இதில் டெல்லி சட்டமன்ற தேர்தலில் ஆளும் ஆம் ஆத்மி தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறது. காங்கிரஸ் ஒரே ஒரு தொகுதியில் முன்னிலை பெற்றிருந்தது. தற்போது அந்த தொகுதியிலும் பின்னடைவையே சந்தித்து வருகிறது. பாஜக 25 […]

#AAP 6 Min Read
Rahul gandhi - Thirumavalavan - Arvind Kejriwal

டெல்லி சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்: பாஜக தொடர் முன்னிலை.!

டெல்லி : டெல்லியின் 70 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை 19 இடங்களில் பலத்த பாதுகாப்புடன் தொடங்கியது. டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், பாஜக, ஆம் ஆத்மி இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை மேற்பார்வையாளர்கள் மற்றும் உதவியாளர்கள், நுண் பார்வையாளர்கள் மற்றும் செயல்முறைக்காக பயிற்சி பெற்ற துணை ஊழியர்கள் உட்பட 5,000 பணியாளர்கள் வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும், அதன் பின் 30 […]

#AAP 5 Min Read
Delhi Election 2025

டெல்லியில் வெற்றி பெறுமா பாஜக? வெளியான தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு!

டெல்லி :  மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாகத் தேர்தல் இன்று நடைபெற்றது. இந்த தேர்தலில், ஆளும் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் ஆகியவற்றுக்கு இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு விறுவிறுப்பாக தொடங்கியிருந்த நிலையில், மக்கள் வேகமாக சென்று தங்களுடைய வாக்குகளை பதிவு செய்து வந்தனர். இதில் மாலை 5 மணி வரை டெல்லி சட்டமன்றத்தில் […]

#AAP 5 Min Read
delhi election date 2025 exit poll

நெருங்கும் டெல்லி தேர்தல்., 4 ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் ‘திடீர்’ ராஜினாமா!

டெல்லி : டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் பிப்ரவரி 5ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் கடந்த 2 சட்டமன்ற தேர்தல்களிலும் வெற்றி பெற்று தற்போது 3வது முறையாக நிலையான ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் ஆம் ஆத்மியும்,  எதிர்கட்சியாக உள்ள பாஜக, மீண்டும் டெல்லியில் தனது இருப்பை காட்ட முயற்சிக்கும் முனைப்பில் காங்கிரஸ் என மும்முனை போட்டியாக இந்த தேர்தல் அமைந்துள்ளது. இப்படியாக தேர்தல் களம் பரபரக்க, […]

#AAP 3 Min Read
AAP Leader Arvind Kejriwal

“நானும் அதே தண்ணீரை தான் குடிக்கிறேன்” கெஜ்ரிவாலுக்கு பிரதமர் மோடி பதில்!

டெல்லி : டெல்லி மாநில சட்டமன்ற தேர்தல் வரும் பிப்ரவரி 5ஆம் தேதி 70 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. ஆளும் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் என இந்த தேர்தல் மும்முனை போட்டியாக உள்ளது. தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.  அரசியல் கட்சித் தலைவர்கள் தங்கள் கட்சியின் வாக்குறுதிகளை கூறுவதோடு மற்ற கட்சியினர் மீதான தங்கள் விமர்சனங்ளையும் முன்வைக்க தவறவில்லை. டெல்லி முன்னாள் முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சித் […]

#AAP 6 Min Read
Delhi CM Arvind Kejriwal - PM Modi

இலவசம் முதல் ரூ.25 லட்சம் வரை… டெல்லி பொதுத்தேர்தல் வாக்குறுதிகள் : ஆம் ஆத்மி vs பாஜக vs காங்கிரஸ்

டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் ஆம் ஆத்மி, எதிர்கட்சிகளான பாஜக, காங்கிரஸ் என மும்முனை போட்டி நிலவுகிறது. நேற்றுடன் வேட்புமனு தாக்கல் முடிவடைந்த நிலையில், அடுத்தகட்டமாக வேட்புமனு இறுதி பட்டியல் தயார் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. வரும் பிப்ரவரி 20ஆம் தேதி இறுதிக்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகும். பிப்ரவரி 5இல் வாக்குப்பதிவும், பிப்ரவரி […]

#AAP 11 Min Read
PM Modi - Arvind Kejriwal - Rahul Gandhi

காங்கிரஸ் vs ஆம் ஆத்மி : பரபரக்கும் டெல்லி அரசியல் களம்! இரு அணிகளாக பிரிந்த இந்தியா கூட்டணி?

டெல்லி : தலைநகர் டெல்லியில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வரும் பிப்ரவரி 5ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு கடந்த 2015 முதல் தொடர்ந்து 2 சட்டப்பேரவை தேர்தல்களிலும் வென்று அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை பிடித்துள்ளது. டெல்லி அரசியல் மாற்றங்கள்… கடந்த சில மாதங்களாக டெல்லி முதலமைச்சராக இருந்த அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறை வழக்கில் கைது, பிறகு ஜாமீன் , முதலமைச்சர் பதவி ராஜினாமா […]

#AAP 8 Min Read
AAP Leader Arvind Kejriwal - Congress Leaders Mallikarjun kharge and Rahul gandhi

பிரியங்கா காந்தி குறித்து சர்ச்சை பேச்சு.! பாஜக வேட்பாளர் வீட்டில் செருப்பு வீச்சு!

டெல்லி : அடுத்த மாதம் (பிப்ரவரி) தலைநகர் டெல்லியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான தேர்தல் பரப்புரை வேலைகளை பிரதான கட்சியினர் ஆரம்பித்து தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.  அங்கு ஆளும் ஆம் ஆத்மி, காங்கிரஸ், பாஜக என மும்முனை போட்டி நிலவுகிறது. டெல்லி முதலமைச்சர் அதிஷி போட்டியிடும் கல்காஜி சட்டமன்ற தொகுதியில் பாஜக சார்பில் ரமேஷ் பிதுரி என்பவர் போட்டியிட உள்ளார். இதற்காக அவர் காரசார பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். முன்னதாக அதிஷி குடும்ப […]

#AAP 5 Min Read
BJP Candidate Ramesh Bidhuri controversial speech about Congress MP Priyanka gandhi

கொலை, கொள்ளை, உலகிலேயே பாதுகாப்பற்ற நகரமான டெல்லி! கெஜ்ரிவால் பரபரப்பு குற்றசாட்டு!

டெல்லி : தலைநகர் டெல்லியில் இன்னும் 2 மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த 2 சட்டமன்ற தேர்தல்களிலும் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி செய்து வருகிறது. கடந்த 2 முறையும் ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் முதலமைச்சராக தொடர்ந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அவர் தனது முதலமைச்சர் பொறுப்பை ராஜினாமா செய்தார். அதன் பிறகு டெல்லி மாநில முதலமைச்சராக அதிஷி தற்போது பொறுப்பில் உள்ளார். நாட்டின் தலைநகர் என்பதால், மாநிலத்தின் […]

#AAP 3 Min Read
AAP Leader Arvind Kejriwal

“வேறு வழி இல்லை!”டெல்லி அமைச்சர் திடீர் ராஜினாமா.! கெஜ்ரிவாலுக்கு பரபரப்பு கடிதம்.!

டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம் ஆத்மி கட்சி பதவி என அனைத்தில் இருந்தும் தன்னை விடுவித்து கொண்டார். கைலாஷ் கெலாட், டெல்லி மாநில போக்குவரத்துத்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை உள்ளிட்ட துறை அமைச்சராக பொறுப்பில் இருந்து வந்தார். அவர் டெல்லி மாநில முன்னாள் முதல்வரும், ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எழுதிய கடிதத்தில்,  டெல்லி எம்எல்ஏவாகவும், மாநில அமைச்சராகவும் மக்கள் […]

#AAP 4 Min Read
Arvind Kejriwal - Kailash Gahlot

“ஹரியானா தேர்தல் முடிவுகளை ஏற்க முடியாது”- காங்கிரஸ் அறிவிப்பு!

டெல்லி : ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானா சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதில், ஹரியானாவில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் பாஜக 49, காங்கிரஸ் 36 இடங்களை கைப்பற்றியுள்ளது. இதன்படி, ஹரியானாவில் தொடர்ந்து 3வது முறையாக ஆட்சி அமைக்கிறது பாஜக கட்சி. இந்நிலையில், ஹரியானாவில் தேர்தல் முடிவுகள் எதிர்பாராதவை. அது எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த முடிவுகள் ஹரியானா மக்களின் விருப்பத்திற்கு எதிரான ஒன்றாகும். ஹரியானாவில் வாக்கு எண்ணும் செயல்முறை, மின்னணு வாக்குப்பதிவு […]

#AAP 5 Min Read
Jairam Ramesh - Haryana Election Result

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.! 

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், கடந்த வாரம் வெள்ளியன்று உச்சநீதிமன்றம் அளித்த ஜாமீனில் வெளியே வந்தார். இருந்தாலும், அவர் வகித்து வந்த டெல்லி முதமைச்சர் பதவியை தொடர முடியாதபடி உச்சநீதிமன்றம் பல்வேறு நிபந்தனைகளை விதித்திருந்தது. இதனை அடுத்து கடந்த வாரம் தனது முதலமைச்சர் பதவியை அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்தார். இன்னும் சில மாதங்களில் வரும் டெல்லி […]

#AAP 5 Min Read
Delhi CM Atishi

அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா.! டெல்லி முதல்வராகிறார் அதிஷி.! 

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவினரால் கைது செய்யப்பட்டிருந்த டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜிரிவால், கடந்த வெள்ளிக்கிழமை அன்று உச்சநீதிமன்றம் அளித்த ஜாமீனில் வெளியே வந்தார். இருந்தும், டெல்லி மாநில முதல்வர் பதவியை தொடர முடியாத வண்ணம் உச்சநீதிமன்றம் கட்டுப்பாடுகள் விதித்தது. இதனைத் தொடர்ந்து தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாகவும், புதிய முதல்வராக ஆம் ஆத்மி மூத்த நிர்வாகியும், டெல்லி அமைச்சருமான அதிஷியை முன்மொழிந்தார் கெஜ்ரிவால்.  இன்னும் […]

#AAP 3 Min Read
delhi cm kejriwal atishi

டெல்லி முதல்வராக அதிஷி மார்லெனா தேர்வு! எம்.எல்.ஏ கூட்டத்தில் தீர்மானம்!

டெல்லி : டெல்லி முதல்வர் பதவியிலிருந்து அரவிந்த் கெஜ்ரிவால் இன்று ராஜினாமா செய்யவுள்ளார். இதனால், டெல்லியின் புதிய முதல்வராக மூத்த கல்வி அமைச்சர் அதிஷி மார்லெனா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். டெல்லியில் தற்போது நடைபெற்ற ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் அதிஷி மார்லெனா ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சி.பி.ஐ-யால் கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை அன்று கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். […]

#AAP 5 Min Read
Atishi Marlena