காங்கிரஸ் கட்சியின் உத்தரபிரதேச பொதுச்செயலாளர் பிரியங்கா காந்திக்கு கொரோனா தொற்று உறுதி.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது என தகவல் தெரிவிக்கப்பட்டது. லேசான காய்ச்சல் மற்றும் கொரோனா வைரஸ் தொடர்பான பிற அறிகுறிகள் சோனியா காந்திக்கு இருந்ததாக அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா தெரிவித்திருந்தார். கொரோனா உறுதியானதை அடுத்து, சோனியா காந்தி தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டார் என்றும் கூறியிருந்தார்.
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் உத்தரபிரதேச பொதுச்செயலாளர் பிரியங்கா காந்திக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பிரியங்கா காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், நான்லேசான அறிகுறிகளுடன் கொரோனா பரிசோதனை செய்ததில் தொற்று இருப்பது உறுதியானது. அனைத்து கொரோனா நெறிமுறைகளையும் பின்பற்றி, நான் வீட்டில் என்னைத் தனிமைப்படுத்திக் கொண்டேன். என்னுடன் தொடர்பு கொண்டவர்கள் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
unknown node