பிரியங்கா காந்திக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்திக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதியான நிலையில், வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டதாக ட்விட்டரில் பிரியங்கா காந்தி தகவல் தெரிவித்துள்ளார். பிரியங்கா காந்திக்கு ஏற்கனவே கொரோனா உறுதி செய்யப்பட்டு, சமீபத்தில் குணமடைந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் தொற்று உறுதியாகியுள்ளது. Tested positive for covid (again!) today. Will be isolating at home and following […]
காங்கிரஸ் கட்சியின் உத்தரபிரதேச பொதுச்செயலாளர் பிரியங்கா காந்திக்கு கொரோனா தொற்று உறுதி. கடந்த இரு தினங்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது என தகவல் தெரிவிக்கப்பட்டது. லேசான காய்ச்சல் மற்றும் கொரோனா வைரஸ் தொடர்பான பிற அறிகுறிகள் சோனியா காந்திக்கு இருந்ததாக அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா தெரிவித்திருந்தார். கொரோனா உறுதியானதை அடுத்து, சோனியா காந்தி தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டார் என்றும் கூறியிருந்தார். இந்த நிலையில், காங்கிரஸ் […]
சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவாலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் இந்த வைரஸால், அரசியல், சினிமா, பிரபலங்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள், நீதிபதிகள் என முக்கிய பணியில் ஈடுபடுபவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவாலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. […]
இன்று நடைபெறவிருந்த இந்தியா, இலங்கை அணிகளுக்கிடையிலான 2-வது டி-20 போட்டி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது.இதில் முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் இந்திய அணி 2 -1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இதனைத்தொடர்ந்து,நேற்று முன்தினம் முதல் டி20 போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி வெற்றி பெற்றது.இதனால்,இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் […]
நேற்று மருத்துவ கலந்தாய்வில் கலந்து கொண்ட மாணவர்களில் 4 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி. சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில், எம்.பி.பி.எஸ் பி.டி.எஸ் படிப்புகளுக்கான மருத்துவ கலந்தாய்வு நேற்று தொடங்கிய நிலையில், இந்த கலந்தாய்வை முதல்வர் பழனிசாமி அவர்கள் தொடங்கி வைத்தார். அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீட்டில், தரவரிசை பட்டியலில் 951 பேர் இடம் பெற்றுள்ள நிலையில், முதல் 3 நாட்களுக்கு, அரசு பள்ளி மாணவர்களுக்கான உள் ஒதுக்கீட்டு இடங்கள் நிரப்பப்பட […]
ஒடிசா மாநில ஆளுநர் மற்றும் அவரது மனைவிக்கு கொரோனா பாதிப்பு. முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தொடர்ந்து பல நாடுகளில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிற நிலையில், இந்த வைரசை தடுக்க தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தியாவில் இந்த வைரஸால் 82 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரசானது, […]
கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கு கொரோனா உறுதி. கர்நாடகா முன்னாள் முதல்வர் சித்தராமையா அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, இவர் மருத்துவரின் பரிந்துரையின் பெயரில் மனிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து, சித்தராமையா தன்னுடன் தொடர்பிலிருந்த அனைவரும் சுயதனிமையில் இருக்குமாறு கூறியுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ‘எனக்கு கோவிட்-19 வைரஸ் தொற்றியிருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கையாக மருத்துவர்கள் ஆலோசனையின் படி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். என்னுடன் தொடர்பில் […]
சிவகங்கை தொகுதி எம்.பி கார்த்திக் சிதம்பரத்திற்கு கொரோனா உறுதி. தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த வைரஸானது பிரபலங்கள் முதல் பாமர மக்கள் வரை பலரையும் தாக்கி வருகிறது. இந்நிலையில், அரசியல் பிரபலங்கள் பலருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், சிவகங்கை தொகுதி எம்.பி கார்த்திக் சிதம்பரத்திற்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அவர் தனது ட்வீட்டர் […]
கொரோனா வைரஸ் நோய் தடுப்பு என்பது உலக அளவில் சவாலாக உள்ளது.ஆனால் கொரோனா காரணமாக பலரும் அச்சமடைந்து உள்ளனர்.எனவே கொரோனாவை தடுப்பதற்கான வழிமுறைகள் சிலவற்றை பார்ப்போம். அடிக்கடி கைகளை கழுவுவதன் மூலமாக நம்மை பாதுகாத்து கொள்ளலாம்.கொரோனா ஒரு பேரிடர்.இந்த பேரிடலிருந்து நம்மை நாமே சமூக விலகலை கடைபிடித்து காத்துக்கொள்ள வேண்டும்.நாம் வெளிநாடுகளில் இருந்து வந்திருந்தாலோ , பாதிக்கப்பட்டவரிடம் தொடர்பிலிருந்தாலோ நம்மை நாமே தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும்.14 நாட்கள் நம்மை நாமே தனிமை படுத்தி கொள்ளும்போது அது மற்றவர்களுக்கு […]