மஹாராஷ்டிராவின் முன்னாள் முதல்வர்க்கு கொரோனா
மஹாராஷ்டிராவின் முன்னாள் முதல்வர் அசோக் சவான் க்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
காங்கிரஸ் தலைவர் அசோக் சவான் மகாராஷ்டிராவின் தற்போதைய பிடபிள்யூடி PWD அமைச்சராக உள்ளார்.இவர் மஹாராஷ்டிராவின் முன்னாள் முதல்வராவார் .மும்பையில் இவருக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது .
இதற்கிடையில், மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை 50,000 ஐத் தாண்டியது, நேற்று மட்டும் 3,041 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.இதுவே ஒரே நாளில் பதிவான அதிக எண்ணிக்கையாகும் அதிகமாகும்.