கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி மீது தேசத் துரோக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று அம்மாநில பா.ஜ.க. வலியுறுத்தியுள்ளது.
unknown nodeஅண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி, பா.ஜ.க. தங்களை விமர்சித்துப் பேசும்போது நாவடக்கம் இன்றி பேசுவதாக குற்றம்சாட்டினார். தங்கள் அரசை சீர்குலைக்கும் முயற்சியில் பா.ஜ.க. ஈடுபட்டால் அந்தக் கட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ச்சியில் இறங்குமாறும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
unknown nodeஇது தொடர்பாக கர்நாடக டி.ஜி.பி. நீலமணி ராஜுவிடம் ((Neelamani N Raju)) அம்மாநில பா.ஜ.க. சார்பில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. போலீசார் தானாக முன்வந்து குமாரசாமி மீது தேசத்துரோக வழக்கு பதியவேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.
unknown nodeDINASUVADU