டி20-யில் சூர்யகுமார், ஹர்திக் பாண்டியா அதிரடி நீக்கம்! புதிய கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர்!

வருண் சக்கரவர்த்திக்கு மீண்டும் அயர்லாந்து, இங்கிலாந்து மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் என மூன்று முக்கிய டி20 தொடர்களிலும் விளையாடப் பெரிய வாய்ப்பு கிடைத்துள்ளது.

Hero Image

டெல்லி : இந்திய கிரிக்கெட் வட்டாரத்தையே ஒட்டுமொத்தமாக அதிரவைக்கும் ஒரு மிகப்பெரிய "ஸ்குவாட் அப்டேட்" சனிக்கிழமை மதியம் வெளியாகி பரபரப்பைக் கிளப்பியுள்ளது. மோசமான ஃபார்ம் அவுட் மற்றும் பிட்னஸ் காரணங்களால், இந்திய டி20 அணியின் கேப்டன் பதவியில் இருந்தும், ஒட்டுமொத்த டி20 செட்டப்பில் இருந்தும் சூர்யகுமார் யாதவ் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். அவருடன் சேர்த்து ஹர்திக் பாண்டியா, ரிங்கு சிங் மற்றும் குல்தீப் யாதவ் ஆகிய சீனியர் வீரர்களுக்கும் பிசிசிஐ கல்தா கொடுத்துள்ளது.

இந்த அதிரடி மாற்றங்களுடன் அஜித்கர் தலைமையிலான பிசிசிஐ செலக்சன் கமிட்டி அறிவித்துள்ள 2026-ன் புதிய டி20 கேப்டன், வைஸ் கேப்டன் மற்றும் புதிய பிளான் என்ன என்பதை முழுமையாகப் பார்ப்போம்.

புதிய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்

சூர்யகுமார் யாதவ் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்திய டி20 அணியின் புதிய கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், அணியின் புதிய வைஸ் கேப்டனாக இளம் இடதுகை பேட்ஸ்மேன் திலக் வர்மா பொறுப்பேற்கிறார்.

ஒரே நாளில் மொத்தம் 4 தொடர்களுக்கான இந்திய ஸ்குவாடை பிசிசிஐ அறிவித்துள்ளது:

  • அயர்லாந்து தொடர்: இந்திய அணி அயர்லாந்து நாட்டிற்குப் பயணம் மேற்கொண்டு அங்கிருக்கும் மைதானங்களில் 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது.
  • இங்கிலாந்து தொடர்: இங்கிலாந்து அணிக்கு எதிராக அந்த நாட்டு மண்ணில் வைத்து நடக்கும் 5 போட்டிகள் கொண்ட விறுவிறுப்பான டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
  • ஆசிய விளையாட்டுப் போட்டிகள் (Asian Games 2026): ஜப்பானில் நடைபெறவுள்ள 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் (Men's Cricket) பங்கேற்கவிருக்கும் பலமிக்க இந்திய அணியின் பட்டியல் வெளியாகியுள்ளது.
  • இந்தியா 'ஏ' அணி: இலங்கை நாட்டிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு இரண்டு மல்டி-டே (Multi-day matches) போட்டிகளில் விளையாடவிருக்கும் இந்தியா 'ஏ' அணியும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வைபவ் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பு

பிசிசிஐ-யின் இந்த அறிவிப்பில் உள்ள ஆகச்சிறந்த சர்ப்ரைஸ் 15 வயதே ஆன இளம் கிரிக்கெட் சென்சேஷன் வைபவ் சூர்யவன்ஷி (Vaibhav Sooryavanshi) அயர்லாந்து, இங்கிலாந்து மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான மூன்று பிரதான டி20 இந்திய அணிகளிலும் சேர்க்கப்பட்டுள்ளதுதான்.இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலத்தை இப்போதே கட்டமைக்கும் நோக்கில் பிசிசிஐ எடுத்துள்ள முடிவாகவும் பார்க்கப்படுகிறது.

பிசிசிஐ வெளியிட்டுள்ள மூன்று முக்கிய டி20 தொடர்களுக்கான அதிகாரப்பூர்வ அணிப் பட்டியலை கீழே உள்ள புகைப்படங்கள் வழியாக நீங்கள் சரிபார்க்கலாம்

unknown node


unknown node


ஹர்திக், சூர்யகுமார் கதை ஓவர்?

சூர்யகுமார் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகிய இருவரையும் ஒரே நேரத்தில் டி20 செட்டப்பில் இருந்தே தூக்கியிருப்பது, பிசிசிஐ 2026 டி20 உலகக்கோப்பைக்கு பிறகு அடுத்த தலைமுறை வீரர்களை நோக்கி முழுமையாக நகரத் தொடங்கிவிட்டது என்பதைக் காட்டுகிறது. ஸ்ரேயாஸ் ஐயரின் கேப்டன்சி மற்றும் 15 வயது வைபவ் சூர்யவன்ஷியின் அதிரடி ஆட்டம் இனிவரும் இந்திய அணியின் தலையெழுத்தை மாற்றப்போகிறது.

மேலும் ஏசியன் கேம்ஸ் பும்ரா சர்ப்ரைஸ் என்னவென்றால், இங்கிலாந்து/அயர்லாந்து தொடரில் ஓய்வளிக்கப்பட்ட ஜஸ்பிரித் பும்ரா, ஜப்பானில் நடக்கும் ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான போட்டியில் வருவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

டி20-யில் சூர்யகுமார், ஹர்திக் பாண்டியா அதிரடி நீக்கம்! புதிய கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர்!