#Breaking : புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இரண்டு நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

A two-day school and college holiday has been declared in Pondicherry and Karaikal.

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இரண்டு நாட்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆங்காங்கு உள்ள நிலவரத்தின்படி மாவட்ட ஆட்சியர்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் தமிழகத்தில் 6 மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை மற்றும் நாளை மறுநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.