TN Schools: தமிழகத்தில் 4 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு இன்று முதல் ஏப்ரல் 21 வரை தொடா் விடுமுறை. தமிழகத்தில் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 1ம் தேதி முதல் ஏப்ரல் 8ம் தேதி வரை நடைபெற்று முடிவு பெற்றது. அதேசமயம் 1 முதல் 9ஆம் வகுப்புகளுக்கு முழு ஆண்டு தேர்வு ஏப்ரல் 18 முதல் 30ம் தேதி வரை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், மக்களவை […]
தமிழகம் முழுவதும் 5 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு நடைபெற்று வந்தது. சமீபத்திய கனமழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை தவிர, மற்ற அனைத்து மாவட்டங்களிலும் நநடைபெற்று வந்த அரையாண்டுத் தேர்வு இன்றுடன் நிறைவு பெறுவதால், நாளை முதல் ஜனவரி 1 வரை விடுமுறை விடப்படுகிறது. அதன்படி, அரையாண்டு தேர்வுகள் இன்றுடன் முடிவடைவதை தொடர்ந்து, நாளை முதல் ஜனவரி 1ம் தேதி வரை தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை அறிவித்தும், ஜனவரி […]
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி காரணமாக இன்று காலை முதல் தூத்துக்குடி, நெல்லை தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில், நாளை நெல்லை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கபட்டிருந்த நிலையில் தற்போது நெல்லை மாவட்டத்திற்கும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நாளை நடைபெற இருந்த மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தேர்வுகள் […]
கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு சொந்த ஊர்களுக்கு செல்ல 600 சிறப்பு பேருந்துகள் இயக்க போக்குவரத்துத்துறை முடிவு. கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி நாளை முதல் 600 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னையில் இருந்து நாளை 300 சிறப்பு பேருந்துகளும், நாளை மறுநாள் 300 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படும் என தெரிவிக்கப்ட்டுள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் அரையாண்டு தேர்வு விடுமுறை வருவதால் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
டிச.17 முதல் ஜன.1 வரை, குளிர்கால விடுமுறையில் உச்ச நீதிமன்ற அமர்வு இருக்காது என தலைமை நீதிபதி அறிவிப்பு. உச்சநீதிமன்றத்துக்கு நாளை (டிசம்பர் 17) முதல் ஜனவரி 1-ஆம் தேதி வரை கிறிஸ்மஸ் விடுமுறை அளிக்கப்படுவதாக தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் அறிவித்துள்ளார். விடுமுறை தினங்களில் சிறப்பு அமர்வு ஏதும் இல்லை எனவும் உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி கூறியுள்ளார். இரண்டு வார குளிர்கால விடுமுறைக்கு முன் உச்ச நீதிமன்றத்தின் கடைசி வேலை நாள் இன்றுதான். மீண்டும் ஜனவரி […]
புயல் எச்சரிக்கை காரணமாக நாளை திருவாரூர் மாவட்டத்திற்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை. மாண்டஸ் புயல் மற்றும் கனமழை எச்சரிக்கை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். ஏற்கனவே வேலூர், திருவள்ளூர், சென்னை உள்ளிட்ட எட்டு மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்திற்கும் நாளை ஒரு நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. புயல் முன்னெச்சரிக்கை தொடர்பான ஆலோசனையின்போது மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமை செயலாளர் இறையன்பு அறிவுறுத்தி இருந்தார்.
புயல், கனமழை எச்சரிக்கையால் தமிழகத்தில் நாளை 8 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை. தென்மேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள மாண்டஸ் புயல் இன்று மாலை தீவிர புயலாக வலுப்பெறும் என்றும் இந்த புயல் நாளை நள்ளிரவு புதுச்சேரி – ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடக்கும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், புயல், கனமழை எச்சரிக்கையால் தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், […]
தமிழகத்தில் மேலும் 4 மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்க தலைமை செயலாளர் அறிவுறுத்தல். மாண்டஸ் புயல் மற்றும் கனமழை எச்சரிக்கை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். ஏற்கனவே வேலூர், திருவள்ளூர் மாவட்டங்களுக்கும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்க தலைமை செயலாளர் அறிவுறுத்தியுள்ளார். புயல் முன்னெச்சரிக்கை தொடர்பான ஆலோசனையின்போது மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமை செயலாளர் இறையன்பு அறிவுறுத்தியுள்ளார்.
கனமழை காரணமாக சென்னை, ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு. கடந்த 29-ம் தேதி வடகிழக்குப் பருவமழை தொடங்கிய நிலையில், தமிழகத்தில் மழை தீவிரமடைந்து வருகிறது. அதன்படி, சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டில் 5 நாட்கள் மழை நீடிக்கும் என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமில்லாமல், மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதால் தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இந்த சமயத்தில் பல்வேறு […]
சிவகங்கையில் மாமன்னர்கள் மருது பாண்டியர்களின் 221வது குருபூஜை விழாவையொட்டி இன்று இந்த தாலுகாலில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன் படி சிவகங்கை, தேவகோட்டை, இளையான்குடி, மானாமதுரை, காளையார் கோவில், திருப்புவனம்,தாலுகாவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று ஒருநாள் விடுமுறை அறிவித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஆயுதபூஜையை முன்னிட்டு பொறியியல் கல்லூரிகளுக்கு நாளை முதல் 5-ம் தேதி வரை விடுமுறை அறிவித்தது அண்ணா பல்கலைக்கழகம். சரஸ்வதி பூஜை, விஜயதசமியையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளுக்கு நாளை முதல் 5-ம் தேதி வரை 5 நாட்களுக்கு தொடர் விடுமுறையை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகள், தனியார் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், அக்.3-ம் தேதிக்கு பதில் 8-ம் தேதி வேலை நாளாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
காய்ச்சல் ஏற்பட்டால் மாணவர்களை தனிமைப்படுத்த பெற்றோர்களுக்கு ஆசிரியர்கள் அறிவுறுத்த வேண்டும். தமிழ்நாட்டில் எச்1என்1 என்ற வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகின்றன. இந்த வகை காய்ச்சல்கள் குழந்தைகளையே அதிக அளவில் தாக்குகிறது. இன்னொருபுறம் டெங்கு காய்ச்சலும் வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் இதுவரை 965 பேருக்கு இன்புளுயன்சா காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது. இந்த வகையான காய்ச்சல் இருமல், தும்மலால் பரவுகிறது என தெரிவிக்கப்படுகிறது. இந்த சமயத்தில், குழந்தைகள் ஒன்று கூடி விளையாடும் பள்ளிகள் வாயிலாகத் தான் காய்ச்சல் அதிக […]
தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் வழக்கமான வகுப்புகளுக்கு வருகை தர வேண்டியதில்லை என அறிவிப்பு. தமிழகத்தில் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு முன்கூட்டியே விடுமுறை அளிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதால் 1 முதல் 9-ஆம் வகுப்புகளுக்கு முன்கூட்டியே விடுமுறை அளிப்பது குறித்து முதலமைச்சர் முக ஸ்டாலினுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் இன்று […]
பள்ளிகளுக்கு முன்கூட்டியே விடுமுறை அளிப்பது குறித்து முடிவு என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தகவல். தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பள்ளிகளுக்கு முன்கூட்டியே விடுமுறை அளிப்பது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில், விடுமுறை மற்றும் மாணவர்களின் நலன் சார்ந்த அறிவிப்பு விரைவில் முதல்வர் அலுவலகத்தில் இருந்து வெளியாகும் என்று செய்தியாளர் சந்திப்பில் கூறினார். கொரோனா காலத்தில் விடுமுறை அளிக்கப்படாதல் பாடங்கள் நடத்தி முடிக்கப்படாமல் இருக்கிறது என்றும் […]
தொடர் விடுமுறையின்போது சிறப்பு வகுப்புகள் எடுக்க கூடாது என பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை. பள்ளிகளுக்கு தமிழ்ப்புத்தாண்டு, புனித வெள்ளி என்று தொடர் விடுமுறை நாட்களில் தனியார் பள்ளிகள், மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்துவதாக எழுந்த புகாரையடுத்து, விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்பு எடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தொடர் விடுமுறையின்போது சிறப்பு வகுப்புகள் எடுக்க கூடாது எனவும் தனியார் பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 4 நாட்கள் விடுமுறையின்போது, பல்வேறு தனியார் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடைபெறுவதாக எழுந்த […]
சிவகங்கை மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர் கனமழை மற்றும் மழை பாதிப்பு காரணமாக இன்று நெல்லை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தேனி, கடலூர், ராமநாதபுரம் மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தூத்துக்குடி, திருவள்ளூர், மதுரை ஆகிய மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு முன்னதாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தற்பொழுதும் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
தொடர் மழை காரணமாக கடலூரில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. தொடர் கனமழை காரணமாக சாலைகளிலும் தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்து காணப்படுவதால் பள்ளி செல்லும் மாணவர்கள் சிரமம் அடைந்துள்ளனர். எனவே, இன்று தூத்துக்குடி, திருவள்ளூர், மதுரை ஆகிய மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதுபோல நெல்லை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய ஐந்து மாவட்டங்களிலும் இன்று […]
புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இரண்டு நாட்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆங்காங்கு உள்ள நிலவரத்தின்படி மாவட்ட ஆட்சியர்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழகத்தில் 6 மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை மற்றும் […]
காஞ்சிபுரத்தில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கனமழை காரணமாக சாலைகளிலும், தாழ்வான பகுதிகளிலும் வெள்ள நீர் தேங்கி காணப்படுகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, பள்ளி செல்லும் மாணவர்களுக்கு சிரமம் உள்ளதால் சில மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஏற்கனவே, தூத்துக்குடி, நெல்லை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. திருவாரூரில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தற்பொழுதும் காஞ்சிபுரத்தில் […]
தொடர் மழை காரணமாக திருவாரூரில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பருவமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. எனவே சாலைகளில் வெள்ளநீர் தேங்கி உள்ளதால் பள்ளி செல்லும் மாணவர்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாளை திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக தூத்துக்குடி, நெல்லை மற்றும் செங்கல்பட்டில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை […]