சென்னை: குமரிக்கடலில் நீடித்த தாழ்வு பகுதி லட்சதீவுகள் பகுதி நோக்கி நகர்ந்துள்ளது. இதன் காரணமாக டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் இன்றும் மழை தொடரும் என டெல்டா வெதர் மென் தகவல் தெரிவித்துள்ளார். ஏற்கனவே, நேற்று முதல் தென் மாவட்டங்களில் விடிய விடிய மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், கனமழை எதிரொலியாக இன்று 7 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியாளர்கள் உத்தரவிட்டுள்ளனர். தொடர்ந்து மழை பெய்வதாலும், மழைநீர் சூழ்ந்து கிடப்பதாலும் மாணவர்கள் […]
சென்னை: இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தற்போது மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 12 மணி நேரத்தில், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, படிப்படியாக வலுகுறைந்து தென்தமிழக பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவக்கூடும். இதன் காரணமாக, இன்று (டிச,13) மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பின்னர், 16ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழையும், 17ஆம் தேதி 3 மாவட்டங்களில் […]
சென்னை: தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் மழை பெய்தது. தற்பொழுது, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், தி.மலை, வேலூர், கடலூர், நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களிலும் விடாது மழை பெய்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் 22 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சேலம், தூத்துக்குடி, திருப்பத்தூர், கரூர், வேலூர், திருவள்ளூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, அரியலூர், சென்னை, விழுப்புரம், […]
சென்னை: வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தூத்துக்குடி, திருப்பத்தூர், கரூர், வேலூர், திருவள்ளூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, அரியலூர், சென்னை, விழுப்புரம், தஞ்சை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், ராமநாதபுரம், திண்டுக்கல், காஞ்சிபுரம், திருவாரூரில் பள்ளிகளுக்கு விடுமுறை ஆகும். மேலும், நெல்லையில் 1-5ம் வகுப்பு வரை மட்டும் விடுமுறை, […]
சென்னை: வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக, இன்று கடலூர், நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை ஆகிய மாவட்டங்களில் இரவு முதல் மழை பெய்து வருகிறது. இதனால் மயிலாடுதுறைக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக மயிலாடுதுறை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று ஒருநாள் (11.12.2024) விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் மகாபாரதி உத்தரவிட்டுள்ளார். கனமழை: ஆழ்ந்த […]
சென்னை : வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வேகமாக நகர்ந்து வருகிறது. கரையை நோக்கி மணிக்கு 10 கி.மீ., வேகத்தில் நகர்கிறது, இது இன்று புயலாக வலுவடைந்து இலங்கையை ஒட்டி தமிழக கடற்கரையை நோக்கி நகரும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் நேற்றிரவு முதல் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில், கனமழை காரணமாக நேற்று முதலே அந்தந்த மாவட்ட கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அறிவித்து […]
சென்னை : தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளியை கொண்டாடும் வகையில் நவ.1ஆம் தேதி பொதுவிடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில், அதனை ஈடுசெய்யும் வகையில் சனிக்கிழமையான நாளை, வழக்கம்போல் மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி அரசு அலுவலகங்களும் செயலம்படும் என்பது குறிப்பிடத்தக்கது. நாளை மின் கட்டணம் செலுத்தலாம் மேலும், தமிழக மின் வாரிய அலுவலகங்களுக்கு 2 மற்றும் 4வது சனிக்கிழமைகள் எப்போதும் […]
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளி மண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று காலை முதல் தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். இதற்கிடையில், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 […]
சென்னையில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு நாளையும் (டிச.08) விடுமுறையை அறிவித்தது தமிழ்நாடு அரசு. மழை பாதிப்பு எதிரொலியாக சென்னையில் நாளையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மழை நிவாரண மற்றும் மீட்பு பணிகள் சில இடங்களில் நடைபெற்று வருவதால் விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. மிக்ஜாம் புயல் மற்றும் கனமழை காரணமாக கடந்த திங்கட்கிழமை முதல் தொடர்ந்து 5-ஆவது நாளாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வரலாறு […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த சூழலில், சமீபத்தில் வங்க கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற நிலையில், ஒருசில நாட்களில் புயலாக வலுப்பெற உள்ளது. இந்த புயலுக்கு மிக்ஜாம் (Michaung) எனவும் பெயரிடப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களும், டெல்டா மாவட்டங்களிலும் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை […]
திருப்பூர் வஞ்சிபாளையம் தீரன் சின்னமலை மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் புதிய கட்டடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக இன்று திறந்து வைத்தார். இதன்பின் உரையாற்றிய முதலமைச்சர், தீரன் சின்னமலை பெயரை சொன்னாலே உணர்ச்சியும், எழுச்சியும் வருகிறது. உடல்நிலையை கருத்தில் கொண்டு காணொளிக்காட்சி மூலம் கல்லூரி கட்டடத்தை திறந்து வைத்துள்ளேன். நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டாமென மருத்துவர்கள் அறிவுறுத்தியதால் காணொலி மூலம் கட்டடம் திறந்து வைக்கப்பட்டது. தீரன் சின்னமலை பெயரை கல்லூரிக்கு வைத்ததற்கு பாராட்டுகள். […]
சமீபகாலமாக கல்வி நிறுவனங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் தொடர்பான புகார்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில்,பாலியல் புகார்கள் குறித்து விசாரிக்க உயர்மட்ட கமிட்டியை உடனடியாக அமைக்க வேண்டும் என்று அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு பல்கலைக்கழக மானியக்குழு(யுஜிசி) உத்தரவு பிறப்பித்துள்ளது.மேலும்,பேராசிரியைகள், மாணவியருக்கு எதிரான வன்முறைகளை தடுக்க வேண்டும் எனவும் யுஜிசி வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக,அனைத்து பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: “அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் பாலின அடிப்படையிலான வன்முறை பிரச்சினையை கையாள்வதற்கு உயர்மட்ட கமிட்டியை […]
நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு குறைந்தும்,அதிகரித்தும் காணப்படுகிறது.இதனால், முகக்கவசம் அணிதல், கிருமிநாசினியை பயன்படுத்துதல் போன்றவற்றை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என மத்திய மாநில அரசுகள் அறிவுறுத்தி வருகின்றன. இந்நிலையில்,கல்லூரி வளாகங்களில் மாணவர்கள் மாஸ்க் அணிவதை உறுதிப்படுத்த வேண்டும் என அனைத்து தொழில்நுட்ப கல்வி நிலையங்களுக்கும் அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் உத்தரவு(AICTE) பிறப்பித்துள்ளது. மேலும்,கல்லூரிக்கு வருகை புரியும் மாணவர்கள்,ஊழியர்கள் என அனைவருக்கும் உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். தனி மனித […]
கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் மார்ச் 14-ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய பி.இ, பி.டெக் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியில் தேர்வு நடைபெற்றது.இந்த தேர்வில் காலை 9 மணி அளவில் தேர்வு எழுத தொடங்கி மதியம் 12:30 மணியளவில் சமர்ப்பிக்க வேண்டும் என்பது விதிமுறை. ஆனால் ஒன்றரை மணி நேரம் கூடுதலாகவும் கொடுக்கப்பட்டிருந்தது. இந்த நேரம் எதற்காக என்றால் ஆன்லைன் தேர்வு எழுதும் மாணவர்கள் விடைதாள்களை பதிவேற்றம் செய்வதற்காக நேரம் ஒதுக்கப்பட்டது. மாணவர்களுக்கு ஆப்சென்ட் […]
கோவா மாநிலத்தில் ஜன.26-ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளை மூட அம்மாநில அரசு உத்தரவு. கொரோனா மற்றும் ஓமைக்ரான் பரவல் காரணமாக கோவாவில் இன்று முதல் 26-ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளை மூட அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. கோவாவில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் என மாநில அறிவித்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இரவுநேர […]
இந்தியாவின் புத்தாக்க கல்வி நிறுவன தரவரிசை பட்டியலில் சென்னை ஐஐடி தொடர்ந்து 3வது ஆண்டாக முதலிடம். தேசிய முக்கியத்துவம் வாய்ந்த உயர்கல்வி நிறுவன தரவரிசைப் பட்டியலில் தொடர்ந்து 3வது ஆண்டாக ஐஐடி சென்னை முதலிடம் பிடித்துள்ளது. சிறந்த புத்தாக்கம், கண்டுபிடிப்புகள், ஆராய்ச்சிக்காக தொடர்ந்து முதலிடம் பிடித்துள்ளது. நடப்பாண்டில் 1,438 உயர் கல்வி நிறுவனங்கள் ARIIA தரவரிசை பட்டியலுக்கு விண்ணப்பித்திருந்தன என்பது குறிப்பிடப்படுகிறது. இதனிடையே, தேசிய அளவிலான தர மதிப்பீட்டில் சேலம் பெரியார் பல்கலைக்கழகம் 2வது இடம் பிடித்துள்ளது. […]
மாணவர்களிடையே கற்றல் திறன் குறைந்துள்ளதால் நேரடி வகுப்புகளுக்கு அனுமதி என தமிழக அரசு அறிவிப்பு. தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் டிசம்பர் 15-ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில், ஊரடங்கை நீட்டிப்பது குறித்தும், கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்தும் முதல்வர் முக ஸ்டாலின் இன்று சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை அமைச்சர் சேகர்பாபு, காவல்துறை, தலைமைச் செயலாளர், மருத்துவத்துறைச் செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.இந்த நிலையில், தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை […]
புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இரண்டு நாட்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆங்காங்கு உள்ள நிலவரத்தின்படி மாவட்ட ஆட்சியர்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழகத்தில் 6 மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை மற்றும் […]
காஞ்சிபுரம், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு தொடர் மழை காரணமாக காஞ்சிபுரம், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.
CAT 2021 தேர்விற்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என்பதால் கீழ் காணும் முறைகளை பின்பற்றி விண்ணப்பியுங்கள். CAT 2021 பொது நுழைவுத் தேர்வுக்கான ஆன்லைன் பதிவு செயல்முறை இன்றுடன்(செப்டம்பர் 15) முடிவடைகிறது. CAT 2021 க்கான விண்ணப்பப்படிவத்தை பூர்த்தி செய்யாத அனைத்து விண்ணப்பதாரர்களும் iimcat.ac.in. இந்த அதிகாரப்பூர்வ வலைதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். அகமதாபாத்தின் இந்திய மேலாண்மை நிறுவனம் (ஐஐஎம்) நவம்பர் 28 ஆம் தேதி கேட் 2021 தேர்வை நடத்தும். இந்த தேர்வு 158 நகரங்களில் […]