கோவை : அந்தமானில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்றைய தினம் புயலாக வலுப்பெற்று நாளை கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், கனமழை காரணமாக, கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள பள்ளி- கல்லூரிகளுக்கு (23-10-2024) இன்று ஒருநாள் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் கோவை, திருப்பூரில் இடைவிடாமல் மழை பெய்து வருகிறது. இந்த மழை இன்னும் […]
டெல்லி : தலைநகர் டெல்லியில் ரோகினி செக்டார் பகுதியில் செயல்பட்டு வரும் சிஆர்பிஎப் பள்ளியில் நேற்று பயங்கர சத்தத்துடன் சக்தி வாய்ந்த வெடிகுண்டு ஒன்று வெடித்தது. நல்வாய்ப்பாக இந்த வெடி விபத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இச்சம்பவம் குறித்து டெல்லி சிறப்புபிரிவு போலீசார், தேசிய புலனாய்வு குழுவினர், தேசிய பாதுகாப்பு படையினர் என பல்வேறு விசாரணை குழுவினர் விசாரணையை தீவிரப்படுத்தி வருகின்றனர். இந்த வெடிகுண்டு சம்பவம் எப்படி நிகழ்ந்தது என வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்து […]
டெல்லி : ரோகிணி நகர் பிரகாஷ் விஹாரில் இயங்கி வரும் CRPF பள்ளி முன்பு இன்று காலை 9.30 மணிக்கு பயங்கர வெடிச்சத்தம் கேட்டது. அடுத்த சில நொடிகளிலேயே அங்கு புகை மண்டலம் சூழ்ந்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சம்பவத்தை அடுத்து, இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், வெடித்தது வெடிகுண்டா? அல்லது மர்மப்பொருளா? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர். ஏற்கனவே, தேசிய புலனாய்வுத் துறையினர் டெல்லி காவல்துறையினர் வெடிகுண்டு நிபுணர்கள் […]
சௌந்தர்யா ரஜினிகாந்த் : சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் அவரது முன்னாள் கணவர் அஸ்வின் ராம்குமார் ஆகியோரின் மகன் வேத் கிருஷ்ணா, பள்ளிக்கு செல்ல மறுத்ததும், பேரனை அழைத்து பள்ளிக்கு சென்ற சூப்பர் ஹீரோ தாத்தா (ரஜினிகாந்த்) புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு இரண்டு மகள்கள் (ஐஸ்வர்யா – சௌந்தர்யா) உள்ளனர். இதில், இளைய மகளான சௌந்தர்யாவும் அவரது முன்னாள் கணவருமான அஸ்வினும் தங்கள் மகன் வேத் கிருஷ்ணா பிறந்து ஒரு வருடத்திற்குப் பிறகு […]
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று பள்ளிக் கல்வித்துறை சார்பில், மாணவர் நலனுக்கான “நலம் நாடி” செயலியை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிமுகம் செய்தார். அதேபோல், அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கான இணையதளத்தையும் தொடங்கி வைத்தார். மேலும் கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா மற்றும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் உண்டு உறைவிடப் பள்ளி மாணவ மாணவியர்களுக்கான மாதாந்திர ஊக்கத் தொகை நேரடி பயனாளர் பணப் பரிவர்த்தனை மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கான இணையவழி குறைதீர் புலம் […]
தெற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் கனமழை பெய்து வருகிறது. சென்னையின் பல்வேறு பகுதிகளில் தொடரும் மழை பெய்து வருகிறது. அதன்படி அதிகாலை முதலே கிண்டி, அடையாறு, வேளச்சேரி, சைதாப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதற்கிடையில் தொடர்மழை காரணமாக சில மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டது. அதன்படி, தொடர்மழை காரணமாக கடலூர், மயிலாடுதுறை மற்றும் விழுப்புரம்,திருவண்ணாமலை திருவாரூர் […]
தமிழகம் முழுவதும் 5 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு நடைபெற்று வந்தது. சமீபத்திய கனமழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை தவிர, மற்ற அனைத்து மாவட்டங்களிலும் நநடைபெற்று வந்த அரையாண்டுத் தேர்வு இன்றுடன் நிறைவு பெறுவதால், நாளை முதல் ஜனவரி 1 வரை விடுமுறை விடப்படுகிறது. அதன்படி, அரையாண்டு தேர்வுகள் இன்றுடன் முடிவடைவதை தொடர்ந்து, நாளை முதல் ஜனவரி 1ம் தேதி வரை தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை அறிவித்தும், ஜனவரி […]
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளி மண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று காலை முதல் தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். இதற்கிடையில், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 […]
மிக்ஜம் புயலால் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளி-கல்லூரிகள் கடந்த 4-ஆம் தேதி முதல் மூடப்பட்டிருந்தன. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தேங்கி நின்ற மழை வெள்ளம் தற்போது வடிந்து வருவதால் ஒரு வார விடுமுறைக்கு பிறகு இந்த நான்கு மாவட்டங்களில் உள்ள பள்ளி-கல்லூரிகள் நேற்று திறக்கப்பட்டது. இந்நிலையில், பூவிருந்தவல்லி மகளிர் அரசு மேல்நிலைப்பள்ளி, அறிஞர் அண்ணா ஆண்கள் அரசு மேல்நிலைப்பள்ளி, சரோஜினி வரதப்பன் மேல்நிலைப்பள்ளி மற்றும் சின்ன போரூரில் உள்ள […]
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் புயல் காரணமாக கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. இதன்காரணமாக இந்த 4 மாவட்டங்களிலும், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், சென்னை பொறுத்தவரை மீட்புப்பணிகள் தொடர்ந்து வரும் நிலையில், பெரும்பாலான பகுதிகளில் இன்னும் இயல்பு நிலை திரும்பவில்லை. தேங்கிய மழைநீர் இன்னும் வடியாமலே இருக்கிறது. லட்சக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அமைச்சர் சேகர்பாபுவை முற்றுகையிட்ட பொதுமக்கள்..! சென்னையில் மீட்புப்பணிகள் […]
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை முழுவதும் உருக்குலைந்த நிலையில் காணப்படுகிறது. சென்னையின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. மழைநீர் சூழ்ந்திருப்பதால், மக்களின் இயல்புவாழ்க்கை பாதிப்புக்குள்ளாகி உள்ளது. இந்த நிலையில், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு கடந்த சில நாட்களாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், சென்னையில் நாளையும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் பால் விநியோகத்தில் எந்த தடங்கலும் இருக்காது – அமைச்சர் […]
சென்னை உட்பட 25 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதற்கு இடையில் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் அடுத்து இரண்டு மணி நேரத்திற்கு மிதமான முதல் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், சென்னையில் பல்வேறு இடங்களில் கன மழை பெய்து வரும் நிலையில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மழைக்காலம் முடிந்ததும் இனி சனிக்கிழமைகளில் வாரம் தோறும் பள்ளிகள் செயல்படும் என பள்ளிக்கல்வித்துறையில் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கனமழையால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் விடுமுறை நாட்களை ஈடுசெய்ய சனிக்கிழமைகளில் பள்ளிகளில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. சனிக்கிழமைகளில் பள்ளிகளை திறப்பது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களே முடிவெடுக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
டெல்லியில் கடுமையான காற்று மாசுபாடு காரணமாக டெல்லியில் உள்ள ஐந்தாம் வகுப்பு வரையிலான தொடக்க பள்ளிகளுக்கு நவம்பர் 5-ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் தற்போது அது நவம்பர் 10 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என என்று டெல்லியின் கல்வி அமைச்சர் அதிஷி இன்று தெரிவித்துள்ளார். As pollution levels continue to remain high, primary schools in Delhi will stay closed till 10th November. For Grade 6-12, schools are […]
தொடர் மழை காரணமாக 5 மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா உத்தரவு பிறப்பித்துள்ளார். ஏற்கனவே திண்டுக்கல், நெல்லை, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களிலும் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கனமழை எச்சரிக்கை காரணமாக தென்காசியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக தென்காசியில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். தாமிரபரணி ஆற்றில் பொதுமக்கள் யாரும் இறங்க வேண்டும் என நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் அறிவித்துள்ளார். கால்நடைகளையும் ஆற்றில் இறக்கி விட வேண்டாம் எனவும் தொடர் மழை காரணமாக ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் மாவட்ட ஆட்சியர் இந்த அறிவுறுத்தலை தெரிவித்துள்ளார். ஏற்கனவே நெல்லை, கன்னியாகுமரியில் […]
தமிழ்நாட்டுடன் கன்னியாகுமரி இணைந்த நாளான இன்று, கன்னியாகுமரி தினம் கொண்டாட படுகிறது. இன்று 67-வது அகவையில் அடியெடுத்து வைக்கும் இந்நன்னாளை முன்னிட்டு இன்று மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், நாமக்கல் மாவட்டம் மலைக்கோட்டையின் கீழ் நாமக்கல்லில் இருந்து சேலம் செல்லும் வழியில் அமைந்துள்ள ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, நாமக்கல் தாலுகாவுக்கு மட்டும் இன்று ஒருநாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் இன்று (நவம்பர் 1ம் தேதி) விடுதலை நாள் கொண்டாட்டம் மற்றும் நாளை […]
கடந்த 9-ஆம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டதை ஈடு செய்ய இன்று சென்னையில் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாண்டஸ் புயல் காரணமாக பெய்த மழையின் காரணமாக சென்னையில் பள்ளிகளுக்கு அவ்வப்போது விடுமுறைகள் அளிக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது இதனை ஈடு செய்ய சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கடந்த 9-ஆம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டதை ஈடு செய்ய இன்று சென்னையில் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை […]
காஞ்சிபுரம், திருவள்ளூரில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை. தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், மழையின் காரணமாக, சமீப நாட்களாக சில மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், காஞ்சிபுரம், திருவள்ளூரில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
திருவள்ளூரில் இன்று மதியம் மற்றும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை. தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், மழையின் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, வேலூர் ஆகிய மாவட்டங்களில் இன்று மதியம் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. அந்த வகையில் திருவள்ளூரில் இன்று மதியம் மற்றும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். பிற்பகல் 3 மணிக்குள் வகுப்புகளை முடித்துக் கொள்ளுமாறும்அறிவுறுத்தியுள்ளார்.