#BREAKING: டூவீலருக்கு பெட்ரோல் விலை ரூ.25 குறைப்பு – அரசு அதிரடி அறிவிப்பு!

Jharkhand Chief Minister orders reduction of Rs 25 per liter in petrol price

ஜார்கண்ட் மாநிலத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.25 குறைத்து அம்மாநில முதலமைச்சர் உத்தரவு.

ஜார்கண்ட் மாநிலத்தில் இருசக்கர வாகனத்திற்கு மட்டுமே பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.25 குறைத்து அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். 2022-ஆம் ஆண்டு ஜனவரி 26-ஆம் தேதி குடியரசு தினம் முதல் பெட்ரோல் விலை குறைப்பு சலுகை அமலுக்கு வருவதாகவும் அறிவித்துள்ளார். பெட்ரோல், டீசல் விலை உயர்வால் ஏழை, நடுத்தர மக்களின் பாதிப்பை குறைக்க டூவீலருக்கு மட்டும் பெட்ரோல் விலை குறைக்கப்படுகிறது என்றும் கூறியுள்ளார்.