#BREAKING: மதுபானம் விற்க தடை.. புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடையில்லை – உயர்நீதிமன்றம்

Chennai High Court announces no ban on New Year celebrations in Pondicherry

புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடையில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவிப்பு.

புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடையில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இரு டோஸ் தடுப்பூசி போடாதவர்களுக்கு பொது இடங்களில் அனுமதி என்றும் பிரபல பொது இடங்களில் பங்கேற்க கூடாது, தனி இடங்களில் பங்கேற்று கொள்ளலாம் எனவும் கூறியுள்ளது.

இதுபோன்று புதுச்சேரியில் டிசம்பர் 31-ஆம் தேதி இரவு 10 மணி முதல் நள்ளிரவு 1 வரை மதுபான விற்பனைக்கு தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொது இடங்கள், பார்கள், விடுதிகள் என அனைத்து இடங்களிலும் மது விற்கவோ, அருந்தவோ தடை விதிக்கப்படுவதாக அறிவித்துள்ளது.

புதுச்சேரியில் தங்கும் விடுதிகளில் ஏற்கனவே முன்பதிவு செய்தவர்கள் தாங்கிக் கொள்ளலாம் என்றும் அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது. புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்க கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ஜனவரி 3-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து.