அசாம் மாநிலத்தில் வெள்ளம்: 11 மாவட்டங்கள் பாதிப்பு..!

Default Image

அசாம் மாநிலத்தில் கனமழை காரணமாக வெள்ளப்பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அசாம் மாநிலத்தில் கனமழை காரணத்தினால் தற்போது வெள்ளப்பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் உள்ள 11 மாவட்டங்களில் உள்ள 243 கிராமங்கள்  வெள்ளத்தால் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. இந்த மழை வெள்ளத்தில் இருந்து மக்களை பாதுகாப்பதற்காக இதுவரை அம்மாநிலத்தில் 1 லட்சத்து 33 ஆயிரம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதனால் தற்போது வரை வெள்ளப்பாதிப்பால் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மழை வெள்ளம் காரணமாக அம்மாநிலத்தின் பதினாறு சாலைகள் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்