Assam: அசாமில் அரசியல் தலைவர் ஒருவர் 500 ரூபாய் நோட்டுகளில் தூங்குவது போன்ற புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அசாமில் பாஜக கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த அரசியல் தலைவர் ரூபாய் நோட்டுகள் குவியலில் தூங்கிக் கொண்டிருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பாஜக கூட்டணிக் கட்சியான ஐக்கிய மக்கள் கட்சி லிபரலின் (UPPL) முன்னாள் தலைவர் பெஞ்சமின் பாசுமாதாரி என்பவர் உடல்குரி மாவட்டத்தில் உள்ள […]
CAA Act : ஆளும் பாஜக அரசால், 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் இந்திய குடியுரிமை திருத்த சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டமானது கொரோனா உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 4 வருடங்கள் கழித்து நேற்று நாட்டில் அமல்படுத்தப்படுவதாக அதிகார்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. Read More – அமலுக்கு வந்த குடியுரிமை சட்டம்.! முதல்வர் ஸ்டாலின் முதல் தவெக தலைவர் விஜய் வரை கடும் எதிர்ப்பு.! ஏற்கனவே, 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் இந்த சட்டம் அமல்படுத்தப்பட்ட போதே, நாடு முழுவதும் பல்வேறு […]
நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான பணியில் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகள் மற்றும் அனைத்து மாநில கட்சிகளும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அதன்படி, மக்களவை தேர்தலுக்கான அறிவிப்பு இம்மாதம் இறுதி அல்லது மார்ச் மாதம் வெளியாகும் என்றும் ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் தேர்தல் நடைபெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தேர்தலுக்கான பணிகள் மும்மரமாக நடந்து வரும் நிலையில், பிரதமர் மோடி ஒடிசா – அசாம் மாநிலங்களுக்கு இன்றும், நாளையும் பயணம் மேற்கொள்கிறார். அதன்படி, இன்று ஒடிசா […]
காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி முன்னதாக கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையில் பாரத ஒற்றுமை யாத்திரை சென்றதை அடுத்து தற்போது கிழக்கில் இருந்து மேற்காக தனது அடுத்தகட்ட நடை பயணத்தை தொடங்கியுள்ளார். மணிப்பூரில் கடந்த மாதம் 14ஆம் தேதி தொடங்கிய இந்த யாத்திரை தற்போது அசாம் மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று அசாம் தலைநகர் கவுகாத்தி நகருக்குள் செல்ல முயன்ற ராகுல் காந்திக்கு காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, காங்கிரஸ் தொண்டர்கள் சிங்கங்கள். […]
காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி முன்னெடுத்த இந்திய ஒற்றுமை நடைபயணம் யாத்திரை வெற்றியை தொடர்ந்து, தற்போது இரண்டாவது கட்டமாக பாரத் ஜோடோ நியாய யாத்திரை என்ற பெயரில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். தற்போது அசாம் மாநிலத்தில் ராகுல் காந்தி பாரத ஒற்றுமை நியாய யாத்திரை மேற்கொண்டு வருகிறார். அசாமில் யாத்திரை மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி இன்று காலை நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 127வது பிறந்தநாளையொட்டி, அவரது […]
உத்திர பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா, அசாம், மத்திய பிரதேசம், டெல்லி உள்ளிட்ட 8 மாநிலங்களில் பி.எஃப்.ஐ நிர்வாகிகள் வீடுகளில் மாநில காவல்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். கடந்தவாரம் நாடுமுழுவதும் தேசிய புலனாய்வு அமைப்பினர் (என்.ஐ.ஏ) , பாப்புலர் பிராண்ட் ஆஃப் இந்தியா மாற்றும் எஸ்.டி.பி.ஐ கட்சி நிர்வாகிகள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில், நாடுமுழுவதும் 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். தமிழ்கத்தில் 10 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு பலர் எதிர்ப்பு […]
நெடுஞ்சாலையில் சைக்கிள் ஓட்டிச் சென்ற நபரை சிறுத்தைப்புலி தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அசாம் மாநிலம் காசிரங்கா தேசிய பூங்கா அருகே உள்ள NH 37 நெடுஞ்சாலையில் சைக்கிள் ஓட்டிச் சென்ற நபரை சிறுத்தைப்புலி தாக்கியது. இந்த வீடியோவை சமீபத்தில் ஐஎஃப்எஸ் அதிகாரி சுசாந்தா நந்தா ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், நெடுஞ்சாலையின் ஓரத்தில் ஒரு நபர் சைக்கிளில் செல்கிறார், திடீரென்று ஒரு சிறுத்தை காட்டில் இருந்து குதித்து அவரை தாக்கியது. அந்த நபர் […]
அசாமில் கனமழை காரணமாக 30,000 முதல் 40,000 வீடுகள் வரையில் சேதமடைந்துள்ளது. இந்தியாவில் தற்போது பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. கோவா, மும்பை உள்ளிட்ட பகுதிகளுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. அப்படி தான் அசாம் மாநிலத்திலும் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் அதிகரித்து வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் பல்வேறு வீடுகள் சேதமடைந்தன. இதுவரை 30,000 முதல் 40,000 வீடுகள் வரையில் சேதமடைந்ததாகவும், இதனால், இந்திய […]
அசாம் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழையால் 20 மாவட்டங்களில் சுமார் 2 லட்சம் பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தொடர் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக திமா ஹசாவோ என்ற மலை மாவட்டமானது மாநிலத்தின் மற்ற பகுதிகளிலிருந்து துண்டிக்கப்பட்டுள்ளது என்றும் அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. இதனிடையே,வெள்ளத்தில் சிக்கி கச்சார் மாவட்டத்தில் இரண்டு பேர் உயிரிழந்ததாகவும்,அதே நேரத்தில் டிமா ஹசாவோ என்ற பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக மூன்று பேர் […]
குஜராத் மாநில இளம் தலித் தலைவரும், ராஷ்ட்ரிய தலித் அதிகார மஞ்ச் எனும் அரசியல் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமாகியவர் தான் ஜிக்னேஷ் மேவானி. இவர் பாதிக்கப்படக்கூடிய தலித் சமூக மக்களுக்காக போராட்டத்தில் ஈடுபட்டு பெருமளவில் மக்கள் மத்தியில் அறியப்பட்ட ஒரு அரசியல்வாதியாக இருந்து வருகிறார். காங்கிரஸ் ஆதரவுடன் கடந்த 2017 ஆம் ஆண்டு வாக்கெட் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்ட மேவானி 84 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருந்தார். இவர் தொடர்ந்து பிரதமர் மோடி குறித்தும், பாஜக […]
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் அசாம் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. மேலும் அசாமில் கடந்த 48 மணிநேரத்தில் கடுமையான புயலுடன் கூடிய கனமழை பெய்துள்ளது. இந்த கனமழை காரணமாக 8 பேர் உயிரிழந்துள்ள நிலையில், கிட்டத்தட்ட 592 கிராமத்திலுள்ள 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
அசாம் தேயிலை 1 கிலோ 99,999 ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது. அசாம் தேயிலை உலக அளவில் புகழ் பெற்றது. இந்த தேயிலைக்கு எப்போதுமே தனி மதிப்பு இருக்கிறது. வருடம் தோறும் கவுகாத்தி தேயிலை ஏல மையத்தில் ஏல வாங்குவோர் சங்கத்தின் செயலாளர்,தினேஷ் பிஹானி தெரிவித்ததாவது, “கடந்த 2 வருடங்களில் கவுகாத்தி தேயிலை ஏல மையத்தில் ரூ.7500 கோடிக்கு மேல் தேயிலை விற்பனையாகியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் […]
அசாம்:மாநிலம் முழுவதும் இன்று முதல் (இரவு 11.30 மணி முதல் காலை 6 மணி வரை) இரவு நேர ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என அசாம் அரசு அறிவித்துள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் ஒமைக்ரான் வகை கொரோனா தொற்றானது இந்தியாவிலும் தீவிரமாக பரவி வரும் நிலையில்,400-க்கும் மேற்பட்டோர் இதுவரை இத்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதன்காரணமாக,உள்ளூர் அளவில் கட்டுப்பாடுகள் விதிக்க அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தல் வழங்கியது. மேலும்,இரவு நேர ஊரடங்கு,பொதுமக்கள் கூட்டமாக கூட தடை போன்ற […]
அசாம் ரைபிள்ஸ் படைப்பிரிவினரைத் தாக்கியவர்கள் விரைவில் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர் என்று மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கண்டனம் தெரிவித்துள்ளார். மணிப்பூர் மாநிலம் சுராசந்த்பூரில் ராணுவ அதிகாரி தனது குடும்பத்தினருடன் சென்று கொண்டிருந்தபோது கண்ணிவெடி மூலம் வாகனத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அதிகாரி உட்பட 7 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் அசாம் ரைபிள்ஸ் படைப்பிரிவு அதிகாரி, மனைவி, மகன், ட்ரைவர் மற்றும் மூன்று துணை ராணுவப் படை வீரர்கள் உயிரிழந்துள்ளனர். கர்னல் […]
மனிதத்தைக் கொன்று மதத்தை வளர்க்கத் துடிக்கும் பேராபத்துமிக்க பாஜக அரசின் அநீதிக்கெதிரான நீதியை நிலைநாட்ட ஒவ்வொரு குடிமகனும் முன்வர வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். அசாம் மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தலைமையிலான பாஜக அரசு,அம்மாநிலத்தில் உள்ள தர்ரங் மாவட்டத்தின் சிபஜார் பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அரசு புறம்போக்கு நிலங்களை மீட்டு வேளாண் திட்டங்களை செயல்படுத்த முடிவு செய்துள்ளது. அதன்படி,ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்பதற்காக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் நூற்றுக்கணக்கான […]
அசாம் மாநிலத்தில் போலீசார் சுட்டதில் கீழே விழுந்த நபர் மீது புகைப்படக் கலைஞர் ஒருவர் கொடூரமாக ஏறி மிதிக்கும் வீடியோ மற்றும் புகைப்படம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அசாம் மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தலைமையிலான பாஜக அரசு,அம்மாநிலத்தில் உள்ள தர்ரங் மாவட்டத்தின் சிபஜார் பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அரசு புறம்போக்கு நிலங்களை மீட்டு வேளாண் திட்டங்களை செயல்படுத்த முடிவு செய்துள்ளது. அதன்படி,கடந்த திங்கட்கிழமையன்று ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்கும் பணி தொடங்கிய நிலையில்,800 குடும்பங்களின் ஆக்கிரமிப்பில் இருந்த […]
அசாமில் இன்று 2,500 காண்டாமிருக கொம்புகள் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது. உலக காண்டாமிருக தினத்தையொட்டி அசாம் அரசு இன்று 2,479 காண்டாமிருக கொம்புகளை எரித்துள்ளது. இன்று 6 ராட்சத உலைகளில் 2,479 காண்டாமிருகக் கொம்புகளை விலங்குகளை வேட்டையாடுவதை தடுக்கவும், கட்டுக்கதைகளை நீக்கவும் அசாம் அரசு எரித்துள்ளது. அசாமில் உலகிலேயே ஒற்றை கொம்பு அதிகமாக உள்ள காண்டாமிருகம் உள்ளது. இப்பகுதியில் உள்ள காசிரங்கா, மணஸ், ஓரங் ஆகிய பகுதியின் தேசிய பூங்காவில் உள்ள 2,500 க்கும் அதிகமான காண்டாமிருக கொம்புகள் […]
அசாமில் போலீசாருடன் ஏற்பட்ட துப்பாக்கி சூட்டில் 2 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர். அசாமில் உள்ள கோக்ராஜர் மாவட்டத்தில் இன்று அதிகாலை போலீசாருடன் நடந்த கடுமையான துப்பாக்கிச் சண்டையில் புதிதாக யுனைடெட் லிபரேஷன் ஆஃப் போடோலாண்ட் (யுஎல்பி) குழுவின் இரண்டு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இம்மாவட்டத்தில் உள்ள உல்தபாணி ரிசர்வ் வனப்பகுதியில் இந்த என்கவுன்டர் நடந்ததுள்ளது. தீவிரவாதிகளின் இடத்தை காவல்துறையினர் கண்டுபிடித்து, அந்தப் பகுதியில் இருந்த இரண்டு பிஸ்டல்கள் (9 மிமீ மற்றும் 7.65 மிமீ), எட்டு ரவுண்ட் லைவ் […]
அசாம் மாநிலத்தின் பிரம்மபுத்ரா ஆற்றில் ஏற்பட்ட படகு விபத்தில் 70 பேரை காணவில்லை என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அசாம் மாநிலம் ஜோராட் பகுதியில் உள்ள பிரம்மபுத்ரா ஆற்றில் நேற்று மா கமலா என்ற எந்திர படகு புறப்பட தாயாராக இருந்த நிலையில், அவ்விடத்திற்கு மற்றொரு படகு வந்துள்ளது. இதனால் வரும் படகிற்கு இடம் அளிக்க மா கமலா படகு சற்று நகர்ந்துள்ளது. மா கமலா படகில் 120 பயணிகள் இருந்துள்ளனர். இந்த நிலையில் படகு நகர்ந்த போது […]
அசாம் மாநிலத்தில் இன்று பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரஸ் பாதிப்பால் பலர் பாதிக்கப்பட்ட நிலையில், பலர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இதனை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தற்போது அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதனை அடுத்து தற்போது தொற்று பாதிப்பு குறைந்து வருவதால், பல மாநிலங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் […]