கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெருமபாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அசாம் மாநிலத்தில் கனமழை காரணமாக வெள்ளப்பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அசாம் மாநிலத்தில் கனமழை காரணத்தினால் தற்போது வெள்ளப்பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் உள்ள 11 மாவட்டங்களில் உள்ள 243 கிராமங்கள் வெள்ளத்தால் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. இந்த மழை வெள்ளத்தில் இருந்து மக்களை பாதுகாப்பதற்காக இதுவரை அம்மாநிலத்தில் 1 லட்சத்து 33 ஆயிரம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனால் தற்போது வரை வெள்ளப்பாதிப்பால் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மழை வெள்ளம் காரணமாக அம்மாநிலத்தின் பதினாறு […]
கொரோனா தொற்று அதிகமுள்ள 11 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறப்பதற்கு அனுமதி வழங்குவது குறித்து தமிழக அரசு அறிவிப்பில் இடம் பெறவில்லை. தமிழகத்தில் உள்ள நோய்த் தொற்று பரவலின் அடிப்படையில் மாவட்டங்கள் 3 ஆக வகைப்படுத்தப்பட்டு, நடைமுறையில் உள்ள ஊரடங்கு 28-6-2021 அன்று காலை 6 மணியுடன் முடிவடையும் நிலையில்,தமிழ்நாட்டில் பெரும்பான்மையான மாவட்டங்களில் நோய்த் தொற்று பரவல் குறைந்துள்ளதைத் தொடர்ந்து பல்வேறு தளர்வுகளுடன் இந்த ஊரடங்கை வருகின்ற ஜூலை 5 ஆம் தேதி காலை 6-00 மணி […]
தமிழகத்தில் வருகின்ற ஜூலை 5 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழத்தில் வருகின்ற 28-6-2021 அன்று காலை 6 மணியுடன் முடிவடையும் நிலையில்,பெரும்பான்மையான மாவட்டங்களில் நோய்த் தொற்று பரவல் குறைந்துள்ளதைத் தொடர்ந்து பல்வேறு தளர்வுகளுடன் இந்த ஊரடங்கை 5-7-2021 காலை 6-00 மணி வரை, நீட்டிப்பு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும்,3 வகையாக மாவட்டங்களை பிரித்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி,வகை 1ல் உள்ள கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர் ஈரோடு, சேலம், கரூர், […]