ஆப்பிரிக்கா : இந்திய பெருங்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக கடந்த சில நாட்களுக்கு முன்பு வலுப்பெற்றது. இதனையடுத்து, இந்த வானிலை ஆய்வு மையம் இந்த புயலுக்கு ‘சிடோ’ என பெயர் வைப்பதாகவும் அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த புயல் காரணமாக மலாவி நாட்டில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த டிசம்பர் 14-ஆம் தேதி சனிக்கிழமையன்று ஏற்பட்ட சிடோ சூறாவளி புயல் ஆப்பிரிக்காவை ஒரு வழி செய்தது என்றே சொல்லலாம். இந்த புயலின் காரணமாக குடிசை நகரங்கள் […]
தென்காசி: தென்காசி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக ராமநதி, கடனாநதி பகுதிகள் மற்றும் காட்டாறுகள், கால்வாய்கள் மூலம் அதிக அளவில் தாமிரபரணி ஆற்றுக்கு நீர் வந்து கொண்டிருக்கிறது. நேற்று பெய்ய தொடங்கிய மழை, இன்றும் விடாமல் பெய்து வருகிறது. இன்று காலை 7 மணி நிலவரப்படி, அதிகபட்சமாக ஆய்க்குடி பகுதியில் 31 செ.மீ மழை, செங்கோட்டையில் 24 செ.மீ, தென்காசி நகரப் பகுதியில் 23 செ.மீ. மழை கொட்டித் […]
சென்னை: ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டோருக்கு ரூ.2000 நிவாரணம் வழங்கும் பணியை தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளது. அதன்படி, புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களைச் சேர்ந்த ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ரூ.2,000 நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்நிலையில், அந்த நிவாரணத் தொகையை பெறுவதற்கான டோக்கன் விநியோகம் இன்று தொடங்கப்பட்டு இருப்பதாக அரசு தெரிவித்துள்ளது. ரேஷன் கடைகள் மூலம் டோக்கன் விநியோகம் நடப்பதாகவும் அரசு கூறியுள்ளது. இதில், வெள்ளத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட விழுப்புரத்தில் […]
சென்னை: ஃபெஞ்சல் புயல், வெள்ள பாதிப்புகள் குறித்து பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தொலைபேசி வாயிலாக கேட்டறிந்தார். ஃபெஞ்சல் புயலின் தாக்கம் தமிழகத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த புயலின் காரணமாக, திருவண்ணாமலை, புதுச்சேரி, கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வெள்ளம் ஏற்பட்டது. குறிப்பாக, திருவண்ணாமலை மாவட்டத்தில் பெய்த கனமழையால் வெள்ளம் ஏற்பட்டதோடு நிலச்சரிவு ஏற்பட்டு பரிதாபமாக 7 பேர் உயிரிழந்தனர். மொத்தமாக 12 பேர் இந்த ஃபெஞ்சல் புயலால் உயிரிழந்ததாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும், […]
திருவண்ணாமலை : கடந்த மூன்று நாட்களாக பெய்து வரும் கனமழை பெய்து வருகிறது. வரலாறு காணாத மழையால் திருவண்ணாமலையில் அடுத்தடுத்த இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு வருவதால், பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. ஏற்கனவே, தி.மலையில் மண்ணில் புதையுண்டு கிடக்கும் குழந்தைகள் உட்பட 7 உயிர்களை மீட்க 20 மணிநேரமாக பெரும் பட்டாளமே போராடுகிறது. இதிலிருந்து மீள்வதற்குள் இன்று காலை மீண்டும் மண் சரிவதை பார்த்த மக்கள் மூட்டை முடிச்சுகளுடன் ஓடினர். அந்த வடு மறைவதற்குள், 3-வது […]
ஸ்பெயின் : கிழக்கு மாகாணமான வலென்சியா மற்றும் அதற்கு அப்பால் உள்ள பகுதிகளில் பெய்த கன மழை காரணமாகப் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 213 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில், வலென்சியா, அண்டலூசியா உள்ளிட்ட பல மாகாணங்களில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கில் சிக்கி மாயமான பலரை மீட்புக் குழுவினருடன் ராணுவத்தினரும் இணைந்து தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால், பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது. இதனிடையே, வீதிகளில் […]
விருதுநகர் : ஸ்ரீவில்லிபுத்தூரில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் ராக்காச்சி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு அருகாமையில் உள்ள ஊர் பகுதியை மக்கள் சாமி தரிசனம் செய்ய வருவதுண்டு. இந்த கோயில் பக்கம் அத்தி துண்டு ஓடை உள்ளது. நேற்று விடுமுறை தினம் என்பதால் நூற்றுக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய ராக்காட்சி அம்மன் கோயிலுக்கு வந்துள்ளனர். அப்போது பலர் அத்தி துண்டு ஓடை பகுதியில் குளித்து வந்துள்ளனர். ஏற்கனவே அப்பகுதியில் நேற்று பெய்து வந்த […]
கோவை : அந்தமானில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்றைய தினம் புயலாக வலுப்பெற்று நாளை கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், தமிழக்தில் பல்வேறு மாவட்டங்ளில் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில், தமிழ்நாட்டில் அதிகபட்சமாக கோவையில் கடந்த 21 மணிநேரத்தில் 9 செ.மீ. மழை கொட்டித் தீர்த்துள்ளது. தொடர் மழைக் காரணமாக, கோவை மாநகரின் பல்வேறு சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஏற்கனவே, கனமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள […]
சென்னை : வடகிழக்குப் பருவமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், நிவாரணப் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளிலும், தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளிலும் நடைபெற்ற மீட்பு பணிகளை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் முதல் அமைச்சர்கள் வரை களத்தில் இறங்கி ஆய்வு மேற்கொண்டனர். சென்னையில், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு உடன் சென்னை மாநகராட்சி மேயர் கள பணியில் ஈடுபட்டார். இந்நிலையில், ரிப்பன் மாளிகையில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்கள் சந்தித்து இதுவரை நடந்த பணிகளை பற்றி […]
விஜயவாடா : அந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் தங்கள் உடமைகளையும் இழந்து தவித்து வரும் சூழல் உருவாகி உள்ளது. இந்நிலையில், மக்களை பாதுகாக்கும் பணியில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான மாநில அரசு பல்வேறு நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகிறது. அது மட்டும் இன்றி முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு இரவு பகல் பாராமல் களத்திற்கே நேரடியாக சென்று நிவாரண பணிகளை ஆய்வு செய்வது, […]
விஜயவாடா : கடந்த சில நாட்களாக ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் பெய்த கனமழை மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 31-ஆக அதிகரித்துள்ளது. இரு மாநிலங்களிலும் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் ஏற்பட்ட பேரழிவு வெள்ளத்தை அடுத்து, தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் நிவாரணப் பணிகளுக்கு ஆதரவாக ரூ. 1 கோடி நன்கொடை அளித்துள்ளார். நன்கொடை அளித்த 1 கோடி […]
விஜயவாடா : ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் பெய்த தொடர் கனமழையால் பல நகரங்கள், கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. குறிப்பாக, ஆந்திராவின் விஜயவாடா உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாத நிலை உள்ளது. ஆந்திராவில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கொட்டித் தீர்த்த கனமழை, வெள்ளப்பெருக்கால் மக்கள் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது. வெள்ளம் சூழ்ந்த விஜயவாடாவில் விடிய விடிய முதலமைச்சர் சந்திர பாபு நாயுடு ஆய்வு மேற்கொண்டார். ஆந்திரா, […]
ஆந்திரப் பிரதேசம் : ஆந்திராவில் கொட்டித் தீர்த்த கனமழையால் விஜயவாடா உள்பட பல மாவட்டங்கள் வெள்ளக் காடாக காட்சி அளிக்கின்றன. வயநாடு நிலச்சரிவு துயரம் மறைவதற்குள், ஆந்திரா தொடர்பான வீடியோக்கள் நெஞ்சை பதைபதைக்க வைக்கின்றன. மேலும், கடந்த 2 நாள்களாக பெய்து வரும் கனமழையால் தெலங்கானாவின் கம்மம் மாவட்டத்தில் 110 கிராமங்கள் மூழ்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக, ஹைதராபாத்தில் நாளை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திரா வெள்ளத்தில் இருந்து 17,000 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், […]
ஹிமாச்சல பிரதேசம் : இமாச்சல பிரதேசத்தில் புதன்கிழமை நள்ளிரவு ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமாக பெய்த கனமழை வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தியுள்ளது. சிம்லா, மண்டி மற்றும் குலு ஆகிய இடங்களில் மூன்று மேக வெடிப்புகள் ஏற்பட்டுள்ளது. சிம்லா மாவட்டத்தில் உள்ள ராம்பூரில் உள்ள சமேஜ் காட் பகுதியில் நேற்று இரவு மேக வெடிப்பு ஏற்பட்டது, இதனால் திடீரென கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில், குறைந்தது 22 பேர் காணாமல் போனதாகக் கூறப்பட்ட நிலையில், பேரிடர் மீட்புக் குழு சம்பவ […]
சென்னை : நெல்லை மணிமுத்தாறு அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர் மழை பெய்து கொண்டு வருகிறது. இதன் காரணமாக சென்னை வானிலை ஆய்வு மையம் ஆரஞ்ச் அலர்ட் கொடுத்தும் இருக்கிறது. இந்த சூழலில், தொடர் கனமழை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக நெல்லை மணிமுத்தாறு அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறை தற்காலிகமாகதடை விதித்துள்ளது. ஏற்கனவே, […]
சென்னை : குற்றாலம் பழைய அருவியில் வெள்ளத்தால் அடித்துச்செல்லப்பட்ட சிறுவன் சடலமாக மீட்பு தென்காசி பழைய குற்றால அருவியில் குளித்துக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி அடித்துச் செல்லப்பட்ட நெல்லையைச் சேர்ந்த சிறுவன் (17) அஸ்வின் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே, தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை பெய்து கொண்டு இருக்கும் நிலையில், மேற்கு தொடர்ச்சி மலைகளில் பெய்த கனமழை காரணமாக தென்காசி பழைய குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. திடீரென […]
சென்னை : குற்றாலம் அருவி வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்ட 17 வயது சிறுவன் மாயம். இந்த மாதம் தொடக்கத்தில் வெயில் வாட்டி வதைத்த நிலையில், கடத்த சில நாட்களாகவே தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இன்னுமே கனமழைக்கான வாய்ப்பு இருப்பதால் 19,20 ஆகிய தேதிகளில் தமிழகத்திற்கு ரெட் அலர்ட்டும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த சூழலில், தென்காசியில் பெய்து வரும் மழை காரணமாக பழைய குற்றால அருவியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தென்காசி பழைய […]
சென்னை: வைகை அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் 4 மாவட்ட வைகை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வைகை அணையிலிருந்து இன்று முதல் நான்கு நாட்களுக்கு 19ம் தேதி வரை, சிவகங்கை மாவட்ட பாசன தேவைக்காக மொத்தம் 376 மில்லியன் கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. அதன்படி, விநாடிக்கு 1,500 கன அடி நீர் திறக்கப்படுவதால், தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை ஆகிய 4 மாவட்ட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. […]
Afghanistan Flooding : ஆப்கானிஸ்தானில் பெய்த கனமழை காரணமாக வெள்ளம் ஏற்பட்ட நிலையில், அதில் சிக்கி உயிரிழந்தோரின் 300 ஆக உயர்ந்துள்ளது. வடக்கு ஆப்கானிஸ்தானில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருவதன் காரணமாக பாக்லான் மாகாணத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளப்பெருக்கால் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். கடந்த வெள்ளிக்கிழமை பெய்த அதீத கனமழையால் காபூல், பஹ்லான் மாகாணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழையால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இன்னும் பலரை காணவில்லை என்றும் கூறப்படுகிறது. […]
Afghanistan Flooding : ஆப்கானிஸ்தானில் பெய்த கனமழை காரணமாக வெள்ளம் ஏற்பட்ட நிலையில், அதில் சிக்கி 200 பேர் உயிரிழந்துள்ளனர். வடக்கு ஆப்கானிஸ்தானில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருவதன் காரணமாக பாக்லான் மாகாணத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளப்பெருக்கால் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இன்னும் சிலர் காயமடைந்துள்ளார்கள். காயமடைந்தவர்கள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும், இந்த வெள்ளத்தில் ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளன எனவும், வெள்ளிக்கிழமை (மே 10) பெய்த கனமழைமழை வடகிழக்கு […]