மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் கனமழை பெய்து வெள்ளம் ஏற்பட்டது. அதைப்போல சென்னையை தொடர்ந்து தூத்துக்குடி, திருநெல்வேலி, திருச்செந்தூர், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வெள்ளம் ஏற்பட்டது. இந்த வெள்ளத்தால் கோவில்கள் மற்றும் வீடுகள் என பல சேதமடைந்தது. சேதமடைந்துள்ளதை சீர் செய்யவதற்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க மத்திய அரசிடம் நிதி கேட்டு தமிழக முதலவர் ஸ்டாலின் கோரிக்கை வைத்திருந்தார். ஆனால், போதுமான நிதியை மத்திய அரசு வழங்க வில்லை என கடந்த சில […]
தென் மாவட்டங்களில் பெய்த கனமழையால், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த கனமழையால் பெரும்பாலான சாலைகள் பாதிப்படைந்து பேருந்து செல்லமுடியாத நிலைமை ஏற்பட்டது. மேலும், கடும் வெள்ள பாதிப்பால் ரயில்வே பாதைகள் சேதமடைந்தன. இதனால், தென் மாவட்டங்களில் ரயில்சேவை தற்காலியமாக ரத்து செய்யப்பட்டது. இப்பொது, மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட தூத்துக்குடியில் நாளை (டிச.22) முதல் ரயில் சேவைகள் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திருச்செந்தூரில் தண்டவாளங்களில் நீரை அகற்றும் பணி நடைபெற்று வருவதால் […]
தமிழகத்தில் தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மற்றும் கன்னியாகுமரியில் நேற்று முன்தினம் முதல் இதுவரை இல்லாத வரலாறு காணாத அதி கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இந்த 4 மாவட்டங்களில் இன்றும் ரெட் அலர்ட் எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. அதி கனமழையால் ஆறுகளில் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், குடியிருப்புகள், சாலைகளில் மழைநீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. கனமழை, வெள்ள பாதுகாப்பு தொடர்பாக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த 4 மாவட்டங்களிலும் தொடர் […]
மிக்ஜாம் புயலின் காரணமாக சென்னையில் கனமழை பெய்து வருவதால் பல இடங்களில் தண்ணீர் தேங்கி வெள்ளப்பெருக்கு ஓடிக்கொண்டு இருக்கிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்கை முற்றிலும் முடிங்கியுள்ளது. பலரும் தங்குவதற்கு இடம் இல்லாமல் சாப்பிட உணவு இல்லாமல் சிரமத்தில் இருக்கிறார்கள். பல இடங்களிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் பெரும்பாலான சாலை போக்குவரத்து சேதமடைந்துள்ளது. இந்த நிலையில், நடிகர் விஷ்ணு விஷால் தன்னுடைய எக்ஸ் வலைதள பக்கத்தில், என்னுடைய வீட்டில் தண்ணீர் மட்டம் அதிகரித்து வருகிறது. தண்ணீரின் நிலைமை […]
தென்னாப்பிரிக்காவில் ஏற்பட்ட திடீர் வெள்ளமானது தேவாலய சபையின் உறுப்பினர்களை அடித்துச் சென்றதில் 9 பேர் இறந்தனர் மற்றும் 8 பேர் காணவில்லை. தென்னாப்பிரிக்காவில் ஏற்பட்ட திடீர் வெள்ளமானது தேவாலய சபையின் உறுப்பினர்களை அடித்துச் சென்றது. இதில் ஒன்பது பேர் உயிரிழந்தனர். வெள்ளத்தில் சிக்கிய 8 பேரை காணவில்லை என்று மீட்பு அதிகாரிகள் தெரிவித்தனர். தென்னாப்பிரிக்காவில் கடந்த மூன்று மாதங்களாக ஜோகன்னஸ்பர்க் நகரில் அதிக மழை பெய்து வருகிறது. பெரும்பாலான ஆற்றின் ஓடைகள் இப்போது நிரம்பியுள்ளன. ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள […]
பெங்களூருவில் ஏற்பட்ட வெள்ளத்தில் 397 கி.மீ சாலைகள் சேதமடைந்ததால் ₹337 கோடி இழப்பு. பெங்களூருவில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் சுமார் 397 கிலோமீட்டர் சாலைகள் சேதமடைந்தன. கிட்டத்தட்ட ரூ.337 கோடி மதிப்பிலான சேதத்தை வெள்ளம் ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. பிபிஎம்பியின் படி, மூன்று கிலோமீட்டர் வரையிலான நடைபாதைகள் சேதமடைந்து ₹4 கோடி இழப்பு ஏற்பட்டது. வெள்ளத்தின் போது 7,700 வீடுகள் நீரில் மூழ்கியுள்ளதாகவும், 170 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் வெள்ளத்தால் மகாதேவபுரா பகுதி மிக […]
கடந்த ஆகஸ்ட் 30ம் தேதி பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தால், அவுட்டர் ரிங் ரோடு (ஓஆர்ஆர்) பகுதியில் உள்ள ஐடி நிறுவனங்கள் மற்றும் வங்கி நிறுவனங்களுக்கு ₹225 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக, அவுட்டர் ரிங் ரோடு கம்பெனிகள் சங்கம் (ஓஆர்ஆர்சிஏ) தெரிவித்துள்ளது. ஓஆர்ஆர் இல் உள்ள IT நிறுவனங்கள் ஒவ்வொரு ஆண்டும் $22 பில்லியன் வருவாய் ஈட்டுகின்றன, இது பெங்களூரின் மொத்த IT வருவாயில் 32% ஆகும். ஓஆர்ஆர் இல் உள்ள மோசமான உள்கட்டமைப்பு, இங்கு அமைந்துள்ள […]
கடந்த மூன்று தசாப்தங்களில் வரலாறு காணாத பருவமழையால், பலுசிஸ்தான் மற்றும் சிந்து மாகாணங்கள் உட்பட நாட்டின் மூன்றில் ஒரு பகுதியை வெள்ளம் மூழ்கடித்தது. “இதுவரை 1,186 பேர் இறந்துள்ளனர் மற்றும் 4,896 பேர் காயமடைந்துள்ளனர், 5,063 கிமீ சாலைகள் சேதமடைந்துள்ளன, 1,172,549 வீடுகள் பகுதி அல்லது முழுமையாக அழிக்கப்பட்டுள்ளன, 733,488 கால்நடைகள் பலியாகியுள்ளன” என்று பேரிடர்களை கையாளும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (NDMA) தெரிவித்துள்ளது. வெளியுறவு அலுவலக செய்தித் தொடர்பாளர் அசிம் இப்திகார் அகமது கூறுகையில், […]
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யுஏஇ) இரண்டு நாட்களாக இடைவிடாது பெய்த மழைக்குப் பிறகு 27 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிக மழையைப் பதிவு செய்துள்ளது என்று தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடக்கு எமிரேட்ஸின் பெரும் பகுதிகள் கனமழை மற்றும் திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. வானிலை அலுவலக தரவுகளின்படி, அதிகபட்சமாக புஜைரா துறைமுக நிலையத்தில் 255.2 மிமீ நீர் பதிவாகியுள்ளது. இரண்டாவது அதிகபட்சமாக மசாஃபியில் 209.7 மிமீ பதிவாகியுள்ளது மற்றும் மூன்றாவது அதிகபட்சமாக புஜைரா விமான […]
வங்கதேசத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால் இதுவரை குறைந்தது 25 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வங்கதேசத்தில் வடகிழக்குப் பகுதிகளில் கடந்த வாரம் முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் அவர்களை பாதுகாப்பான இடத்திற்கு மாற்றக் கூடிய பணியில் மீட்புப் பணி வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கனமழை காரணத்தினால் ஆற்றின் கரை உடைந்து விட்டது. இதனால் அதன் அருகில் உள்ள பல்வேறு […]
அசாம் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழையால் 20 மாவட்டங்களில் சுமார் 2 லட்சம் பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தொடர் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக திமா ஹசாவோ என்ற மலை மாவட்டமானது மாநிலத்தின் மற்ற பகுதிகளிலிருந்து துண்டிக்கப்பட்டுள்ளது என்றும் அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. இதனிடையே,வெள்ளத்தில் சிக்கி கச்சார் மாவட்டத்தில் இரண்டு பேர் உயிரிழந்ததாகவும்,அதே நேரத்தில் டிமா ஹசாவோ என்ற பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக மூன்று பேர் […]
காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள வரதராஜபுரத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்துள்ளார். வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் சாலைகளிலும், தாழ்வான பகுதிகளிலும் வெள்ளநீர் சூழ்ந்து காணப்படுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் காஞ்சிபுரம் வரதராஜபுரத்தில் உள்ள வெள்ளம் பாதித்த பகுதிகளை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளார். மேலும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட […]
சென்னை மாநகராட்சி, பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழை மற்றும் வெள்ளம் சார்ந்த புகார்களை தெரிவிக்க உதவி எண்களை அறிவித்துள்ளது. தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருச்சி, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில், சென்னையில் நேற்று இரவு முதல் விடிய விடிய கனமழை பெய்துள்ளது. இதனால் சென்னையில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ள நிலையில், வீடுகளுக்குள் மழைநீர் புகுந்துள்ளது. இந்நிலையில், சென்னை […]
இடா புயல் காரணமாக இதுவரை 82 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. கடந்த செப்டம்பர் 1 அன்று அமெரிக்காவில் உள்ள லூசியானா மாநிலத்தை இடா புயல் தாக்கியது. இந்த புயலின் தாக்கத்தால் வீடுகள், நகரங்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை. இந்த புயலின் தாக்கத்திற்கு பின்னர் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் கனமழை பெய்ததால் பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. சாலைகள், சுரங்கப்பாதைகள், ரயில்வே நிலையங்கள் ஆகியவை வெள்ளக்காடாக […]
தெலுங்கானாவில் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் கார் அடித்து செல்லாமல் இருப்பதற்காக காரின் உரிமையாளர் செய்த செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது. தெலுங்கானா மாநிலத்தில் உள்ள சிர்சில்லா நகரத்தில் கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் சிக்கி பல மக்கள் பாதிப்படைந்துள்ளனர். அங்கு ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் ஏராளமான வாகனங்கள் அடித்து சென்றுள்ளது. இதனால் கார் வைத்திருக்கும் ஒருவர், தனது காரை வெள்ளம் அடித்து செல்லாமல் இருப்பதற்காக காரின் நான்கு முனைகளிலும் கயிற்றால் கட்டி அதனை அவரது வீட்டின் மேல்கூரையில் உள்ள […]
இடா புயல் காரணமாக நியூயார்க்கில் நேற்று இரவு பெய்த கனமழை காரணத்தால் 7 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அமெரிக்காவில் உள்ள லூசியானா மாநிலத்தை இடா புயல் தாக்கியது. இந்த புயலின் தாக்கத்தால் வீடுகள், நகரங்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை. இந்த புயலின் தாக்கத்திற்கு பின்னர் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் நேற்று இரவு முதல் பலத்த கனமழை பெய்து வருகிறது. […]
நியூயோர்க்கில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் இன்று இரவு முதல் அவசரநிலை அமல்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள நியூயோர்க் மாகாணத்தில் நேற்று இரவு முதல் வரலாறு காணாத மழை பெய்து வருவதால் அங்கு வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் அம்மாகாணத்தில் இன்று இரவு முதல் அவசர நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து மேயர் பில் டி பிளாசியா ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, நியூயார்க் மாகாணத்தில் நேற்று இரவு பலத்த கனமழை பெய்துள்ளது. இதனால் இன்று இரவு முதல் அவசரநிலை அமல்படுத்த […]
ஹரியானாவில் பெய்த கனமழை வெள்ளத்தால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, போக்குவரத்துக்கு பாதிக்கப்பட்டுள்ளது. வட இந்திய பகுதிகளிலும் தற்பொழுது கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், குறிப்பாக டெல்லி, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் உத்திரபிரதேசம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அது போல ஹரியானா மாநிலம் குருகிராம் பகுதிகளிலும் கனமழை கொட்டி தீர்த்துள்ளது. இதனையடுத்து தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்து கொண்டதால், அப்பகுதியில் உள்ள மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மேலும் சாலைகளில் வெள்ளநீர் தேங்கி உள்ளது. […]
பீகாரில் பெய்து வரும் கனமழை வெள்ளத்தில் சிக்கி 43 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பீகாரில் கனமழை பெய்து வருவதால், அங்குள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அம்மாநிலத்தில் உள்ள 14 மாவட்டங்களில் வெள்ளம் சூழ்ந்து பல்வேறு பாதிப்புகளை மக்கள் சந்தித்து வருகின்றனர். இந்த வெள்ளத்தில் கிட்டத்தட்ட 30 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்த வெள்ளத்தில் 43 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் இந்த வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த […]
அசாமில் கனமழை பெய்து வரும் நிலையில், வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளதால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். அசாம் மாநிலத்தில் கடந்த வாரம் பல பகுதிகளில் கனமழை பெய்துள்ளது. இந்நிலையில், அசாம் மாநிலத்தில் உள்ள கம்ரூப் எனும் கிராமத்தில் உள்ள குடிசைகளுக்குள் மழை நீர் வெள்ளம் புகுந்துள்ளது. இதனால் மக்கள் வீடுகளில் தங்க முடியாமல் அவதிக்குள்ளாகியுள்ளனர். இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் கனமழை காரணமாக கடந்த மூன்று தினங்களுக்கு முன்பே அவர்களது வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்ததாகவும், இதனால் தங்கள் […]