பிரதமர் மோடி, அனைத்து மாநில முதல்வர்களுடன் காணொளி மூலம் தீவிர ஆலோசனை மேற்கொண்டார். இதன் பின்னர் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முக்கிய முடிவு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தனது டிவிட்டர் பக்கத்தில், ‘ பிரதமர் மோடி ஊரடங்கை நீட்டிக்கும் நல்ல முடிவை எடுத்துள்ளார். இது நல்ல முடிவு. இந்தியா ஊரடங்கை முன்னதாகவே அமல்படுத்தியதால் தான், பல வளர்ந்த நாடுகளுக்கு ஏற்பட்டுள்ள நிலைமை இந்தியாவிற்கு ஏற்படவில்லை. இந்த சமயத்தில் ஊரடங்கை தளர்த்திக்கொண்டால், இதுவரை மேற்கொண்ட நடவடிக்கைகள் வீணாக போய்விடும். ‘ என பதிவிட்டுள்ளார்.
ஏற்கனவே, கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், சில மாநில முதல்வர்கள், மருத்துவர்கள் என பலர் நோய் பரவலை தடுக்க ஊரடங்கு நீட்டிக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர் என்பது ககுறி
unknown node